திங்கள், 29 ஜூன், 2009

சுதந்திரக் காற்றை சுவாசிப்பது எப்போ

இப்போதெல்லாம்

நிலா வெளிச்த்திற்காய்

காத்திருக்கிறோம் கற்பதற்கு

மழை நீருக்காய்

காத்திருக்கிறோம்

குளிப்பதற்கும் குடிப்பதற்கும்

நீண்ட வரிசைகளில் நாம்

உணவுத் தட்டுகளோடு............

போறணைக்குள் அடுக்கப்பட்ட

விறகுகள் போல

இன்று எம் உறக்கம்

ஓடி உலாவுவது

நாலு பக்கம் எழுப்பப்பட்ட

முள் கம்பி வேலிகளுக்குள்

மட்டுமே.......

எப்போதுமே எமக்கு

காவல் காரர்கள்

ஆயிரத்துக்கும் அதிகம்

நாள் தோறும் இங்கு

ஏக்கத் தவிப்புகளோடு நாம்

எப்போது எமது

சொந்தங்களோடு சொந்த மண்ணில்

சுதந்திரக் காற்றை

சுவாசிப்போம் என்று............

ஆணாதிக்கம்


உல்லாசமாக
சிட்டுகளாய் பறந்த
காலம் போய்
குடும்ப வலைக்குள்
சிக்குண்டதால்
ஆணாதிக்க
அராஜகப் பிடிக்குள்
அகப்பட்டு மவுனித்து போனது
உன்
குரல் மட்டுமல்ல
உன்
பசுமையான வாழ்கையும் தான்
இந்த
சிறைக் கம்பிகளை
உடைத்தெறிந்து விடு
மீண்டும்
சுதந்திரப் பறவையாக
சிறகடிக்க.......

காதலின் சுகம்

காதலின்

முடிவுகள்கசப்பாகலாம்ஆனால்காதல் சுகமானதே

உன் ஆசிகள்

விடியல்

உன் நினைவுகளோடுதான்

விடிகிறது

உனது

ஸ்பரிசங்கள்தான்

நாள் முழுதும்

என்னை ஆசிக்கின்றது