திங்கள், 29 ஜூன், 2009

சுதந்திரக் காற்றை சுவாசிப்பது எப்போ

இப்போதெல்லாம்

நிலா வெளிச்த்திற்காய்

காத்திருக்கிறோம் கற்பதற்கு

மழை நீருக்காய்

காத்திருக்கிறோம்

குளிப்பதற்கும் குடிப்பதற்கும்

நீண்ட வரிசைகளில் நாம்

உணவுத் தட்டுகளோடு............

போறணைக்குள் அடுக்கப்பட்ட

விறகுகள் போல

இன்று எம் உறக்கம்

ஓடி உலாவுவது

நாலு பக்கம் எழுப்பப்பட்ட

முள் கம்பி வேலிகளுக்குள்

மட்டுமே.......

எப்போதுமே எமக்கு

காவல் காரர்கள்

ஆயிரத்துக்கும் அதிகம்

நாள் தோறும் இங்கு

ஏக்கத் தவிப்புகளோடு நாம்

எப்போது எமது

சொந்தங்களோடு சொந்த மண்ணில்

சுதந்திரக் காற்றை

சுவாசிப்போம் என்று............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக