மன்மதக் கலப்பு
கங்குல் மெல்ல
கவியத் தொடங்கியது
அத்தத்தின் ஊடாக
நெடுந்தூரம் பயணித்த
களைப்பு நீங்க
சிற்றில் ஒன்று கண்ணில் படவே - அக்
குரம்பையின் வாயிலில்
உள்ளே நுளைந்தனர்
புன்னகை கமழும்
காந்த விழிகளால்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவன் விரல் நுனிகள்
இதமான வருடல்களால்
அந்த யாழினை
மீட்ட தொடங்கியது
வதனங்கள் நெருக்கமாகி
மன்மதத்தின் அயில் பருக
அவள் அங்கமெல்லாம்
மோகம் மேலீட்டால்
அமைதியாய் நெளிந்தது
மறுகரம் அவள்
காழகம் கழைய
மன்மத அசும்பில்
புதைந்தது ஆண்மை
பொங்கியெழும் அலையாக
மோக நீர் முட்டிபோத
அடங்கியது தாகம்
அல்கள் தோறும்
இவ்வின்பம் கிடைத்திலதோ
எனும் ஏக்கம் மேலோங்க
இதனால் நான்
கவ்வைக்காளாகி விடுவேனோ
என்ற ஓர்வுக் குழப்பத்துடன்
அந்த இறுக்கப் பிணைப்பில்
உணர்வுகள் அடங்க
ஆழ்ந்த உறக்கத்தில்
அமிழ்ந்து போயினர்
அதிகாலை கண் விழிக்கையில்
சிந்திக் கிடந்த
மதன வாடை நோக்கி
- தமிழ் பாணன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக