வைகறைத் தென்றல் பக்கம் ஏன்?

தோழமையுடன் வாசக நண்பர்களே! வணக்கம்
எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு விருப்பம் இருந்து வந்தது. செம் மொழியாம் என் தாய் மொழியின் வளர்ச்சியில் ஏதாவது ஒரு வகையில் எனது பங்களிப்பையும் செய்யவேண்டும் என்பதே அது. எனது பணியின் பழு காரணமாக இது தடைப்பட்டே வந்தது. இருப்பினும் முயற்சி செய்து எனது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தமையே "இந்த வைகறைத்தென்றல்" பக்கம். இந்தப் பக்கத்தில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள்  மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றை தருவதற்கு முயற்சிக்கின்றேன். எனது 14வது வயதில் எனது முதல் கட்டுரையை ஒரு பத்திரிகைக்கு எழுதினேன் அது அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது தொடர்ந்து எழுதுவதில் சில தடங்கல்கள் ஏற்பட்டுவிட்டது. நான் பிரபலமான எழுத்தாளர்களை போன்று எனது மனதில் எழுந்த சிந்தனைகளை சிறிது சுவை கலந்து எழுத முயற்சித்திருக்கிறேன். ஒரு சிறு துளியாவது எனது எழுத்துக்கள் தமிழுக்கு பங்களிப்பு செய்யுமென நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் எனக்கு தெரியப்படுத்தி எனது முயற்சிக்கு உங்கள் பங்களிப்பையும் தாருங்கள்
நன்றி
இங்ஙனம்
நரேஸ்