நான் தட்டவில்லை உன் இதயக் கதவுகள்
எனக்காய் திறந்து என்னை
உள் வாங்கிக்கொண்டன
கேட்கவில்லை
உன்னை எனக்கு தந்தாய்
தேடவில்லை
நீயாகவே கிடைக்கப் பெற்றாய்
சமுக அந்தஸ்தும்
உறவுகளின் பற்றும் உன்
முகத்திரையை மறைக்க
நீ
கீதையை எனக்கு
உபதேசம் செய்கிறாய்
எது இன்று உன்னுடையதோ
அது நாளை
வேறொருவருடையதாகும் என்று?........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக