மூடப்பட்ட மனச்சிறைக்குள் நான்
உன்
உணர்வுகளை நான்
ஆராதிக்கிறேன்
பகல் பொழுதில்
நீ காணும்
சொப்பனங்கள்
என் உள்ளத்து
உணர்வுகளை
தீண்டியதை நான்
உணராமலில்லை
அறிந்தும்
அறியாததாய் என்
உணர்வுகள்
கட்டுண்டு
கிடப்பது நீ
அறியாதது அல்லவே
கண் மூடும்
பொழுதெல்லாம் உன்
கவி நெஞ்சு
தெரிகிறது
இருந்தும்
மூடப்பட்ட
மனச்சிறைக்குள் (நான்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக