மாதர் தம்மை இழிவு செய்யம்
மடமையை கொழுத்துவோம்
என்பார்
வாய்வார்த்தையாய் நிற்கும்
நடைமுறையில் காணோம்
பெண் விடுதலை வேட்கையோடு
கோசங்கள் முழங்கும்
மறுநாள்
ஊருக்கே ஊபதேசம்
என்றாகிப் போகும்
சிங்கப்பெண்ணே வீர முழக்கம்
வானை முட்டும் வீதிதோறும்
பெண் என்றால்
அடங்கிப்போக வேண்டும்
என்று வீட்டுக்குள்ளே
உபதேசம் முடிந்தபாடில்லை
ஆணும் பெண்ணும் சமமென்பார்
சம உரிமை சட்டம்
சடுதியாக வேண்டுமென்பார்
அதிகாலை பொழுதுமுதல்
பின்னிரவு நேரம்வரை
வீட்டைச்சார்ந்த முழச்சுமையும்
அவள் தலையில் திணிப்பர்
நான்
ஆண் என்பார்
வேலைப்பழு அதிகம் என்பார்
குடும்பப்பாங்கான பெண்ணாய்
இருப்பதே சமூகத்தின்
வழக்கென்பார்
என் சொல்வேன்
பெண்ணினமே
உன்னிடமே தீர்வுண்டு
விழித்தெழு
வீறுகொண்டெழு
ஐக்கியமாய் சமத்துவத்தை
சமூகம் முன் நிறுத்து