ஞாயிறு, 31 ஜனவரி, 2021

லச்சுமியின் கனவு கனிந்தது

லச்சுமியின் கனவு கனிந்தது



சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான் அவளை துயிலெழுப்பி விடும். இன்றும் அதேபோலவே ஓரிரு கதிர்கள் அவளது உடலை வருடவே சடுதியாக கண்விழித்து எழுந்தாள்.

ஐயய்யோ…. கனக்கா நேரம் அயந்து தூங்கிட்டனோ….

தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக எழுந்தாள் லச்சுமி.

சனி, 30 ஜனவரி, 2021

கவியோகியின் கீதாஞ்சலி ஒரு பாடல் - மொழிபெயர்ப்பு - இது ஒரு ஆரம்பம் மட்டுமே


வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர்


வங்கக் கவி தாகூரின் ‘கீதாஞ்சலி’ என்னையும் விட்டுவைக்கவில்லை. ஒரு தடவை பார்த்தவுடனேயே அதனை முற்றாக படித்து அதன் ரசத்தை சுவைத்து விடவேண்டும் என்ற ஆர்வத் தூண்டல் மேலோங்க மெல்லப் படிக்கலானேன். இடையிலே ஒரு ஆர்வம் இதன் தமிழை தேடலாமோ என்று. தேடினேன் கிடைத்தது. அதையும் படித்தேன். படிக்கும்போது மீண்டுமோர் நப்பாசை. இதனை நானும் மொழி பெயர்த்துப் பார்க்கலாமாவென்று. இது ஒரு விசப் பரீட்சை தான். இருந்தாலும் எனக்கு ஒரு குணம் ஒரு விடயத்தை முயற்சிக்க வேண்டும் என எண்ணினால் முயற்சித்துப்பார்துவிடுவேன். எல்லா விடயங்களிலுமல்ல. இந்த தூண்டுதல் என்னையும் மொழி பெயர்க்க வைத்தது. தவறாயின் பொறுத்துக்கொள்க. முயற்சி திருவினையாக்குமல்லவா? சிறப்பென கருதினால் ஊக்கம் தருக.

My song has put off her adornments.

She has no pride of dress and decoration. 

Ornaments would mar our union; they would
come between thee and me; 

வியாழன், 28 ஜனவரி, 2021

எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.

 

பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவையொட்டி அவரது தமிழ் இலக்கிய சேவைக்கான பங்களிப்பை பராட்டும் முகமாகவும் வாசிப்பு மற்றும் எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கு முகமாகவும் குரு அரவிந்தன் வாசகர் வட்டம் ஒரு போட்டியை அறிவித்துள்ளது. மொத்தம் இலங்கை நாணயப்பெறுமதி ரூபா 110,000 பெறுமதியான 13 பரிசுகளை அறிவித்துள்ளனர் இந்த குழுவினர். இது நாவல் சிறுகதை திறனாய்வுப்போட்டியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை கீழே உள்ள விளம்பரத்தைப்பார்த்து அறிந்து கொள்ளுங்கள். எழுத்தார்வம் மிக்கவர்களே இப் போட்டியில் பங்குபற்றி நீங்களும் ஒரு வெற்றியாளராக மாறி பரிசிலை வெல்லுங்கள்.
நான் ரெடி. நீங்க ரெடியா?......




வியாழன், 21 ஜனவரி, 2021

சிறுகதைகள் இணையத் தளத்திற்கு வாழ்த்துக்கள்

 பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ‘சிறுகதைகள்’ இணையத்தளத்திற்கும் அதனது பிரதம ஆசிரியர், ஆசிரியர் குழாம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். 

1400ற்கும் அதிகமான எழுத்தாளர்கட்கு களம் அமைத்துக்கொடுத்து தமிழ் உலகிற்கு சிறந்த பணியினை ஆற்றி வருவது சாதாரணமான விடயம் அல்ல. அத்தனை எழுத்தாளர்களும் உங்களை நன்றியுடன் நினைவுகூருவர். உங்கள் தமிழ்பணி மூலமாக 11,200ற்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி அவற்றை வெளியிடுவதற்கு தங்கள் தளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்ளித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அது மட்டுமன்றி பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் 29 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் இலக்கிய ஆர்வலர்கட்கும் வாசகர்கட்கும் பல்வேறு வகையான அனைத்து படைப்புக்களையும் படிப்பதற்கு சிறந்த பாலமாக தங்கள் தளம் அமைந்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்கவும் மேலும் பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கவும் அத்தோடு நின்றுவிடாது இன்னும் பல இலட்சக்கணக்கான தமிழ் இலக்கிய ஆர்வலர் வாசகர்கட்கு பாலமாக அமையவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.sirukathaigal.com/


நன்றி

த. நரேஸ் நியூட்டன்


வியாழன், 14 ஜனவரி, 2021

தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்

 

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!