ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

தமிழுக்காய் தமிழ் அன்னை தந்த தவப்புதல்வா (அந்தாதி)

 



தமிழுக்காய் தமிழ் அன்னை தந்த தவப்புதல்வா (அந்தாதி)


தமிழுக்காய் தமிழன்னை தந்த தவப்புதல்வா

தவமிருந்தும் கிடைத்தற்கரிய பொக்கிசமே

பொக்கிசமாய் அருளிச் சென்றாய் புதுக்கவிகள்

புதுக்கவிகளுக்கு உயிர் கொடுத்த தீரன் நீ

நீ படைத்த கவிகளாலே தலை நிமிர்ந்தோம்

நிமிர்ந்த நடையோ டெதிரியை நாம் நேர்கொண்டோம்

நேர்கொண்ட பார்வையோடு ஞானச் செருக்கும்

செருக்கோடு பாக்களாலே அகிலம் ஆண்டோhம்

ஆண்டிடுவோம் உன் அருளால் காலமெல்லாம்

காலமெல்லாம் நிலைத்திருக்கும் உந்தன் புகழ்

உந்தன் புகழ் பிரபஞ்சத்தை ஆட்சிசெய்யும்

ஆட்சி செய்யும் நின் கவிகள் என்றும் தமிழை 


திங்கள், 5 செப்டம்பர், 2022

பாரதியின் பிறந்ததினத்தையிட்டு சில ஹைக்கூ கவிகள்

 





பாரதியின் பாடல்கள்
புரட்சித் தீயைக்கிளப்புகிறது
மாணவர் எழுச்சி

வறுமையுடன் பாரதி
பல கவிகளை படைத்தான்
ஆஸ்தான கவிஞன்

பாரதியின் பிறந்ததினம்
விமரிசையாக கொண்டாடப்படும்
சுதந்திர தினம்

பாரதி கவிகளால் புதுமைப்பெண்கள்
நாள்தோறும் பிறக்கிறார்கள்
வறுமையுடன் குழந்தைகள்

நகைச் சுவை கலந்த சில சம்பாசணைகள் 4

 

இளமையும் முதுமையும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனைகள் சில எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக




1

இளமை: என்னா பெரிசு உனக்கு தான் வயசு போச்சில்ல.. சும்மா போய் ஒரு மூலைல ஒக்காந்து ஓய்வெடுக்கிறத விட்டிட்டு எல்லா விசயத்திலயும் தலைய போட்டிக்கிட்டிருக்கே

முதுமை: நானும் உன்னைய போலதான் ஒரு காலத்தில உசாரா தான் இருந்தேன் இப்ப தான் கொஞ்சம் சோர்வாயிட்டன். அதுக்காக என்னோட உணர்வெல்லாம் போயிடுமா அது சாகும் மட்டும் இருக்கத்தானே செய்யும்