இளமையும் முதுமையும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனைகள் சில எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக
1
இளமை: என்னா பெரிசு உனக்கு தான் வயசு போச்சில்ல.. சும்மா போய் ஒரு மூலைல ஒக்காந்து ஓய்வெடுக்கிறத விட்டிட்டு எல்லா விசயத்திலயும் தலைய போட்டிக்கிட்டிருக்கே
முதுமை: நானும் உன்னைய போலதான் ஒரு காலத்தில உசாரா தான் இருந்தேன் இப்ப தான் கொஞ்சம் சோர்வாயிட்டன். அதுக்காக என்னோட உணர்வெல்லாம் போயிடுமா அது சாகும் மட்டும் இருக்கத்தானே செய்யும்
இளமை: ம் அந்த காலத்தில் என்ன அட்டகாசம் எல்லாம் பண்ணியிருப்பே
முதுமை: ம் அப்போ நம்ப எல்லாம் பிசிக்கலாதான் செஞ்சம் இப்ப நீங்க ஒரு போன வச்சுக்கொண்டு அதோடயே காலத்த ஓட்டிக்கொண்டிருக்கீங்க
இளமை: ஆமா… அந்தக்காலத்தில இது இல்ல… அப்ப இருக்கு நாம அதோட காலத்த ஓட்டிறம். எவ்ளோ விசயமெல்லாம் இருக்கு தெரியுமா இந்த சின்ன போன்ல.
முதுமை: ஆமா நாம விளையாட மைதானத்துக்கு போவம், களியாட்டம் பாக்க பாக்குக்கு போவம், திருவிழக்கழுக்கு கோயிலுக்கு போய் நல்லா விடிய விடிய ஜாலி பண்ணுவம்… வீட்ல கொண்டாட்டம்னா குடும்பத்தோட சேர்ந்து ஓடி ஓடி எல்லா வேலயும் பாத்து நல்லா சந்தோசப்படும்.. இப்பிடியே சொல்லிக்கொண்டே போகலாம். ஆனா நீங்க மட்டும் இப்ப அந்த போணை வச்சுக்கொண்டு எல்லாம் அதுக்குள்ள ஒரே இடத்தில இருந்துதான்..
இளமை: அதெல்லாம் ரைம் வேஸ்டு… பணம் வேஸ்டு… இப்ப ரைமும் வேட்டில்ல பணமும் வேஸ்டில்ல எல்லாம் கைக்குள்ளயேதான்
முதுமை: ம்.. இப்பிடியே போன இன்னும் கொஞ்சக் காலத்தில வருத்தம் பிடிச்சு மருந்துக்கு தான் செலவு பண்ணுவீங்க பாருங்க.
2
மகன்: இந்தா அப்பா உனக்கு வயசுபோச்சு தெரியுதா
அப்பா: ஆமா அதுக்கு இப்ப என்னாச்சு
மகன்: இனிமே நீ டாக்டர் சொல்றாப்பல தான் நடந்துக்கணும்
அப்பா: அடப்பாவமே… நடக்கிறது கூட டாக்டர் சொல்றப்பல நடக்கணுமா
3
தாத்தா: அதுதான் பெரியவங்க சும்மாவா சொன்னாங்க
பேரன்: என்னான்னு சொன்னாங்க
தாத்தா: சிறு பிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராதின்னு
பேரன்: ஆஹா… அதுதான் நான் வேளாண்மையே செய்ய போகல புரியுதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக