பரமபதம் (பாம்பும் ஏணியும்) சதுரங்கம் இரண்டும் சந்தித்தால் என்வெல்லாம் பேசிக்கொள்ளும் என்று சிந்தித்ததில் மனசில் பதிந்த சில சம்பாசணைகள் இங்கு உங்கள் ரசனைக்காக இங்கு பதிவு செய்கிறேன். சிரிப்புச் சக்ரா என்ற விருது இவ்வாறான சில பதிவுகளால் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
1
பரமபதம்: ஏம்பா நீங்கள்ளாம் ரொம்ப வேஸ்டு
சதுரங்கம்: எதுக்கு அப்பிடி சொல்றே…
பரமபதம்: எவ்ளோ ஆயுதங்களும் கவசங்களும் வாகனங்களும் இதெல்லாம் வச்சுக்கொண்டு தான் உங்க சண்டித்தனமெல்லாம்… ஹா…ஹா…
சதுரங்கம்: ஆமா அதெல்லாம் இருந்தாதானே எதிரிய சுலபமா வெல்லலாம்
பரமபதம்: ஹா..ஹா.. ஏய் நம்மள பாரு.. எதுவுமே இல்ல… நம்ப பல்ல மட்டும் நம்பி எல்லா எதிரிகளையும் எதிர்க்கல்ல. அதுபோல நீயும் இருந்திட்டு போ.. இது வெக்கமா இல்ல உனக்கு உன்னோட பலத்த நம்பாம அதயெல்லாம் நம்பி இருக்கிறே
2
பரமபதம்: இந்தாபார் நான் பத்திசாலித்தனத்தை உருவாக்கிறேன்
சதுரங்கம்: நானும் தான் புத்திகூர்மையை வளர்க்கிறேன்
பரமபதம்: என்ன ஒரு கூட்டத்தை எதிரிகள்னு உசுப்பேத்தி அவங்கள எல்லாம் எப்பிடி அழிச்சிடலாம் எங்கிற சூழ்சிகளை உருவாக்க கத்துக்குடுக்கிறது புத்திசாலித்தனத்த உருவாக்கிறதா
சதுரங்கம்: நீ மட்டும் என்னவாம் அததானே செய்றே
பரமபதம்: இந்த பார் நான் உன்ன மாதிரி மட்டமான வேலைலாம் செய்யமாட்டன் புரிஞ்சுக்கோ. நான் மத்தவங்களுக்கு இலக்கு ஒன்ன நோக்கி இடையில இருக்கிற தடைகளையெல்லாம் தாண்டி போறதுபற்றிதான் சொல்றேன். அதோட அவங்க எத்தன தடவை தடுக்கி விழுந்தாலும் திரும்ப எழும்பி முன்நோக்கி செல்ல கத்துக்குடுக்கிறேன் புரியுதா
சதுரங்கம்: ஆகா… அப்பிடியா சங்கதி…???
3
சபாஸ் சரியான போட்டி நீயா நானா பாத்திடலாம் வா
சதுரங்கம்: ஏய் கனக்க அலட்டாத சரியா? என்னப்போல பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் உன்ன விiளாடுவாங்களா?
பரமபதம்: ஆஹா.. என்னத்தான் சிறுசில இருந்து பெரிசு வரை எல்லாரும் விளையாடுவாங்களே
சதுரங்கம்: அப்பிடியா… நான் உலகம் முழுவதும் சுத்திவாறனே போட்டிகளுக்கு உன்னால அது முடியுமா?
பரமபதம்: சும்மா கெட என்னையும் உலகம் பூரா உள்ள நம்ம மக்கள் எப்பவும் விiயாடுறாங்களே அது போறாதா?
சதுரங்கம்: ம்.. நான் எத்தனை பரிசுகளை வாங்கிக் குடுக்கிறன் தெரியுமா?
பரமபதம்: இந்த… பார்றா…. நான் எத்தனை பேரோட மனசில சந்தோசத்த உருவாக்கியிருக்கன் தெரியுமா
சதுரங்கம்: என்ன போல வேற விளையாட்டு பாத்திருக்கியா
பரமபதம்: ஏன் இல்ல.. டாம் விளையாட்டில அடுத்த படிதானே நீ.., என்னய அடிப்படையா வச்சு இன்னும் எத்தனை விளையாட்டு வந்துடிச்சு தெரியுமா உனக்கு
சதுரங்கம்: என்னய விளையாடினா புத்திக் கூர்மைய சோதிக்கலாம் தெரியுமா? உன்னால அது முடியுமா?
பரமபதம்: ஐயய்யோ… என்னய விளையாடினா அவங்க அவங்களோட அதிர்ஸ்டத்தையே சோதிச்சு பாத்திடலாம் தெரியுமா?
சதுரங்கம்: ஐயய்யோ போதும்பா உன்னோட ஏலாது
பரமபதம்: ம்…ம்… அது அப்பிடியே அடங்கிகோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக