புதன், 10 ஆகஸ்ட், 2022

பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் (2)

 

பொன்னும் பெண்ணும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது சம்பந்தமான கற்பனைகளை பகடியாக உருவாக்க முனைந்ததில் கிடைத்த சில சுவாரஸ்யமான சம்பாசணைகள் இங்கு தருகிறேன். ரசிக்கக்கூடியதாக இருந்தால் அனுபவிப்பதோடு மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்



பொன்னும் (நகையும்) பெண்ணும்

1

பெண்: உனக்கு நகை என்னு பேரு வச்சது தப்பா போச்சு

பொன்: எதுக்கு அப்பிடி சொல்றே. உனக்கு பொறாமை போல

பெண்: போற வாற நேரமெல்லாம் என்னப்பாத்து நகைச்சுக்கிட்டே இருக்கே

பொன்: ஆமா நகைக்க தான் செய்வன் சும்மா பாத்திட்டு போறது தானே உன் வேலை

2

பெண்: ஏய் பொன்னே பாரு ஏங்கழுத்தில உன்ன போட்டதும் எவ்வளவு ஜொலிக்கிறேன்னு

பொன்: ஹா..ஹா…ஹா… என்ன போட்டப்புறம் தான் நீ அழகா இருக்க என்னு சொல்லு

பெண்: ஏய் அடக்கி வாசி கடையில சும்மா தொங்கிக்கிட்டு இருந்தப்ப கண்ணாடிய பாத்தியா

பொன்: தொங்கிக்கிட்டிருந்தப்ப அழகா இருந்ததால தானே நீயே வாங்கிக்கிட்ட

3

பெண்: உன்னால என்னோட வாழ்க்கையே போச்சு உன்னயெல்லாம் இந்த உலகத்திலயே இல்லாம ஒளிச்சாதான் நிம்மதி

பொன்: ஏன் நான் என்ன பண்ணினன் உன்னோட வாழ்க்கை வீணாப்போக

பெண்: பெண் பாக்க வாறவனெல்லாம் ஐம்பது சவரண் நூறு சவரண் வேணுங்கிறானுக. நீ இருக்கிறதாலதானே இப்பிடி கேக்கிறானுக

பொன்: ஆகா.. இப்பவாவது புரிஞ்சுக்கோ நான் இருக்கமட்டும் தான் உனக்கு மவுசு உன்னோட வீட்ட சொல்லி உன்ன வாங்கிக்கோ மவுச ஏத்திக்கோ

4

பெண்: ஆமா உனக்கென்ன லட்சக்கணக்கில குடுத்து வாங்கி ரொம்ப உசக்க வச்சிருக்காங்க.

பொன்: சும்மா கெட புள்ள எவ்வளவு லச்சம் குடுத்தாலும் உன்னப்போலதான என்னையும் வச்சிருக்கானுக.

பெண்: என்ன புதுசா கதை சொல்றே. அதெப்பிடி என்னபோல உன்னையும்….

பொன்: உண்மையதான் சொல்றேன் உன்ன வீட்டுக்குள்ள பூட்டி சுதந்திரமில்லாம வச்சிருக்கிறாபோலதான் என்னையும் ஒன்னு கடை கண்ணாடி பெட்டில வச்சிருகானுக இல்ல வூட்ல இரும்பு பெட்டில பூட்டி வச்சிருக்கானுக.

பெண்: ஆமா ஆமா.. அது உண்மைதான் நம்மளால சுதந்திரமா வெளிய நடமாட முடியாதது போல உன்னாலயும் முடியாது தான். தனியா கெடச்சா துவம்சம் பண்ணிடுவானுக… 

5

பெண்: இந்தாபார் இனிமே நீ தான் பெரிசு என்னு பந்தா காட்டாதே என்ன புரியுதா

பொன்: இஞ்சார்ரா இவவோட கதைய அதெப்பிடி… நான் தான் பெரிசுன்னு உலகமே கொண்டாடுதே நீ எப்பிடி அப்பிடி சொல்லலாம்

பெண்: இந்தா பார் உன்ன சின்ன பெட்டியில இல்ல சின்ன கண்ணாடி அலுமாரில அதுவுமில்லன்னா இரும்பு பெட்டில பூட்டி வச்சிருக்காங்க. என்னய அப்பிடி இல்லாம வீடு வளவுக்குள்ள தான் அடச்சிருக்காங்க

பொன்: ஆகா… ஆ… அவ்ளோதானா

பெண்: உன்னால தனியா வெளிய போக முடியுமா.. என்னய போல தான் நீயும் வெளிய தனியா போனா… தூக்கிண்டுபோய் உரு மாத்திடுவானுக.. இப்ப என்ன சொல்றே..

பொன்: ம்… வாஸ்தவம்தான் இன்னும் என்ன சொல்லபோறாளோ…(மனதுக்குள்)… 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக