யட்சி
நலன் விரும்பியாய்
எனை நாடி
தோழியாகி பின்
நண்பியாய் இடம் பிடித்து
என் மனையுள் நுளைந்து
என்னவனோடும் நெருக்கமாகி
என் பள்ளியறைக்குள் புகுந்து
என் துணையை தனதாக்கி
பறந்து செல்ல முயற்சித்த
பலருள் நீ
வெற்றி பெற்ற யட்சி
நேசத்திலும் கோபத்திலும் மட்டுமல்ல
சூழ்ச்சியிலும் துரோகத்திலும்
நயவஞ்சகத்திலும் பலருள் நீ
வெற்றி பெற்ற யட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக