நெருக்கடிகள் நமக்கு புதியதல்ல புதிருமல்ல
பத நீரில் இனிப்பை
சுவைக்கத் தெரிந்துகொண்டோம்
மரவள்ளி அவியலில்
காலை உணவு கண்டோம்
தேங்காய் சொட்டோடு
பயறும் உழுந்தும் சேர்த்தே
ஒடியல் சத்துணவு கண்டோம்
பனங்கழியில் விழாக்களுக்கு
பணியாரம் பொரித்தோம்
மிதிவண்டி மிதித்தே
மின்சாரம் கண்டோம்
விறகு வெட்டியே
புஜங்களை இறுக்கினோம்;
அடுப்பூதி நாங்கள்
மூச்சுப் பயிற்சி செய்தோம்
கூட்டெரு சேர்த்தே
சேனை வளர்த்தெடுத்தோம்
இறுதி வரை உறுதியுடன்
கஞ்சியால் உயிர் வாழ்ந்தோம்
தடைகள் பல இருந்தபோதும்
தட்டுப்பாடுகளும் வரிசைகளும்
ஒருபோதும் கண்டதில்லை
நெருக்கடிகள் நமக்கு
புதிதல்ல புதிருமல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக