கல்லாமை நன்றோ
கல்லாமை நன்றோ கல்லாமை நன்றோ
பிச்சை புகினும் கல்லாமை நன்றோ
நிலம் உழுது பயிர் வளர்த்து
அப்பன் சேர்த்த பணம்
நிலமாய் வீடாய்
நகையாய் வாகனமாய்
சொத்துக்களாய் வளர்ந்திருக்க
கௌரவமும் நிலைத்ததுவே
தந்தை என்னோற்றான் கொல் எனும்
பெயர்பெறக் கற்கை புகுந்ததால்
சொத்தெல்லாம் சுருங்கிப்போக
ஊதாரி பிள்ளையென்று பட்டம்
கல்வி மாபியாக்களால்
இதனால் மனம் பகர்கிறது
கல்லாமை நன்றோ கல்லாமை நன்றோ
பிச்சை புகினும் கல்லாமை நன்றோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக