உயிர்ப்பு
நீர் மூன்றாம் நாள் உயிர்த்ததாய்
பதிவுகள் பறைசாற்றுகின்றன
நீர் எப்போது மரணித்தீர்
உயிர்த்தெழுவதற்கு
உமது வாழ்வினாலும்
உறுதியான மனத்தினாலும்
உயிர் பெறச்செய்யும் போதனைகளாலும்
வல்லமை பொருந்திய வார்த்தைகளாலும்
எப்போதும் உலகில்
எல்லா உயிர்களிடத்தும்
வாழ்ந்துகொண்டல்லவா இருக்கிறீர்
உமக்கேது மரணம்
இது தெரியாமலோ இன்னும்
நீர் மரணித்ததாகவும் உயித்தெழுந்ததாகவும்
இந்த உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறதே
மரணம் அது எப்போ
உமை ஆட்கொண்டது
நீர் உயிர்த்தெழுவதற்கு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக