எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏதாவது உதவுங்கள். பிரான்ஸ் ஜனாதிபதியிடம் இலங்கைச் சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்
மேகா சந்திரகுமார் |
இலங்கை வடமானிலத்தின் தமிழ் பெண்ணான மேகா சந்திரகுமார் பிரான்சில் வசித்து வருகிறார். இவர் அண்மையில் பிரான்சில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கணிதப்பரீட்சையில் தோற்றியிருந்தார். இந்தப் பரீட்சையில் இவர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மிகப்பெரும் சித்தியை அடைந்து எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரருடைய இந்த சாதனையை கௌரவிக்கும்பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Immanuel Macron) அந்த மாணவியை அழைத்திருந்தார். அங்கு சென்றிருந்த மேகா சந்திரகுமாரிடம் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்ன பரிசு வேண்டும் எனக்கூறுங்கள் என வினவியிருக்கிறார். அவருக்கு பதிலளித்த மேகா 'நீங்கள் எனக்கு பரிசளித்தால் நானும் எனது குடும்பமும் மட்டுமே மகிழ்சியடைவோம். ஆனால் தற்போது எனது நாட்டு மக்கள் உணவிற்காக பெரும் கஸ்டப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக ஏதாவது உதவி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.
இவரது கோரிக்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சாதகமான சமிக்ஞையை காட்டியுள்ளதாக தெரிகிறது. இதன்பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதியால் வழங்கப்படவிருக்கும் பரிசு மிக விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளதாக நம்பத் தகுந்தவர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. சின்னஞ்சிறு வயதில் தனது நாட்டு மக்கள் மேல் இத்துணை அதீத அன்பு வைத்திருக்கும் மேகாவிற்கு எனது வாழ்ததுக்களும் ஆசிகளும் உரித்தாகட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக