பெண்
பெண் என்றால்
ஏன் உன்னிடம்
இத்தனை சலனம்
இத்தனை குழப்பம்
இத்தனை தடுமாற்றம்
அவளை நீ ஏன் இன்னும்
சரியாக இனம்காண மறுக்கிறாய்
உன்னை ஈன்றவளாயின் தாய்
உன்னால் உயிர் பெற்றிருப்பின்
மகள்
உன் தாயினால்
பிரசவிக்கப்பட்டிருப்பின் சகோதரி
நீ கரம் பிடித்தவளாயின் மனையாள்
அவ்வளவுதான்
அவள் மின்மினி பூச்சியாய்
பிரகாசிக்கும் இருள்
உனது மனத்திரையை சரிசெய்
அவள எப்போதும்;
உனது மதிப்புக்குரியவளாவாள்
உன் பார்வையை தூய்மையாக்கு
இச்சையும் காமமும்
கலைந்து போகும்
அவள் தெய்வமாய் தெரிவாள்
உனக்குள் இருக்கும்
எல்லா உணர்வுகளும்
அவளிடத்தில் அமைதியாய்
உறங்கிக் கிடக்கிறது
அது அப்படியே இருக்கட்டும்
மீண்டும் மீண்டும் சுனாமிகளை
இந்த தேசம் தாங்காது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக