இலக்கை நோக்கி
தொடர்ந்து சிந்தித்தேன்
சிந்தனைகளை உருவகித்தேன்
உருவகித்தவற்றை தேடினேன்
தேடிக்கொண்டே ஓடினேன்
நெடுந்தூரம் ஓடிவிட்டேன்
நான் உருவகித்த
இலக்கை கண்டடைய
இன்னும் ஓடுவேன்
மிக அருகில்
நெருங்கிய கனவோடு
தொடர்ந்து ஓடுவேன்
கால்கள் தளர்ந்தாலும்
பார்வை மங்கினாலும்
உடல் சோர்வுற்றாலும்
தொடர்ந்து ஓடுவேன்
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக