சனி, 6 ஆகஸ்ட், 2022

பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள்

 பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் 

வரவும் செலவும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும். வேறொரு நிகழ்வில் வழங்கப்பட்ட தலைப்பிற்கு என்னால் உருவாக்கப்பட் பகிடி கலந்த சிந்தனைகள் சில. பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வரவு செலவு



1

வரவு: உனக்கென்ன ரொம்ப ஏறிட்டே போறே மனசாட்சியே இல்லாம

செலவு: ஹ… ஹ… உனக்கு ஏற வக்கில்ல ஏன் எங்கிட்ட ஏற வாறே

வரவு: வேற யார்கிட்ட ஏற… நீ வரவுக்கேற்றாபல இருக்கலாமில்ல

செலவு: போ.. போ… ஒன்னோடு முதலாளி கிட்ட போய் கேழு என்னை ஏத்த சொல்லி

வரவு: நல்லா சொன்னே… வாரதும் போய் பிச்ச பாத்திரம் தான் தூக்கனும்

செலவு: ஆகா… அது நல்ல ஐடியாவாச்சே… ட்ரை பண்ணு நான் கௌம்புறேன் 

2

வரவு: ரேசன் கடையில இருக்கிறது தப்பா போச்சு

செலவு: ஏன்.. என்ன பிரச்சனை

வரவு: அடிக்கடி ஆய்வாளர் செக் பண்ண வாறதால எடைய குறைக்கிறத மனேஜர் குறச்சிட்டார்

செலவு: அதனால

வரவு: மக்கு மக்கு… புரியலயா.. எடை கொறச்சா நான் எப்படி கூடுறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக