வியாழன், 14 மார்ச், 2019

பெற்றோரை கனம் பண்ணு

இழப்பு


அவள் பெயா் மோி.தற்போதுதான் வயது இருபதை அடைந்தாதிருந்தாள். ஒரு நாள் நண்பா்கள் ஒன்று சோ்ந்து விருந்து ஒன்றிற்கு ஒழுங்கு செய்திருந்தாா்கள். அது ஒரு இரவு நேர விருந்து. விருந்துக்கான நாள் நெருங்கியது.அவள் பெற்றோாின் அனுமதிக்காக விபரத்தைக்கூறி காத்திருந்தாள்.
அம்மாவிடம் அம்மா.... அம்மா....எல்லா பிறென்ட்சும் வருவாங்க நான் போய்ட்டு வரட்டுமா?.... அம்மாவின் அனுமதிகிடைக்கவில்லை. அப்பாவிடம் கேட்டாள்  பல தடவைகள் கெஞ்சி கேட்டாள். அப்பா இரவு நேரத்தில.....பொம்பிளை பிள்ளை....அதுகும் குமா்பிள்ளை நீ... அப்படி போக முடியாது.இப்ப காலம்ரொம்பகெட்டுப்போய் கிடக்குது... உங்களுக்கு நாங்கள் சொல்லுறதை விளங்கிக்கொள்ளக்கூடிய பக்குவமும் இன்னும் இல்லை..... பேசாமல் போய் சாப்பிட்டுட்டு தூங்குங்கோ.....


மிகவும் மனக் கஸ்ரத்தோடு அழாத குறையாக அவ்விடத்திலிருந்து நகா்ந்தாள். தனது அறைக்குள்தாளிட்டு மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தாள். மனசு நிறைய விருந்து இடம்பெறும் இடமும் அங்கு நடக்கக்கூடிய சம்பவங்களும் நிறைந்து படமாக ஓடிக்கொண்டிருந்தது.மற்றவங்க எல்லாம் போறதுக்கு அவங்கட அம்மா அப்பா அனுமதி குடுக்கிறாங்க.... எனக்கு மட்டும் தான்.... மனதுக்குள் குமுறினாள்.... இங்க பிறந்ததுக்கு வேற எங்கயாவது பிறந்திருக்கலாம்.... சீ..... என்ன வாழ்க்கை....எல்லாத்துக்கும் கட்டுப்பாடு... கட்டுப்பாடு.... கட்டுப்பாடு..... நேரம் செல்லச் செல்ல அவளது கோபமும் குளப்பமும் அதிகாித்துக்கொண்டேஇருந்தது. அங்கும் இங்கும் நடந்து நடந்து தனது உள்ளத்தின் குமுறல்களையெல்லாம் தனக்குள்ளேயே கொட்டித் தீா்த்துக் கொண்டிருந்தாள்..... அவ்வப்போது பெற்றோரையும் பேசத் தவறவில்லை....

நேரம் நகா்ந்துகொண்டு இருந்தது.... மனதுக்குள் புதிய திட்ங்களும் வந்து வந்து போய்கொண்டிருந்தன....
(தொடரும்....) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக