ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
“ஓடவும் முடியாது
ஒழியவும் முடியாது”
என்பது மறக்கமுடியாத மிகவும் பிரபலமான ஒரு வசனம் என்பது நாம் அறிந்த ஒன்று. இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் உலக
நாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் பிரபல தென்னிந்திய நடிகர் கமலஹாசன்
அவர்களால் உச்சரிக்கப்பட்ட மிகப்பிரபல்யமான வாசகம். இந்த வாசகம் தமிழ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பெரும்
தலை - பிக்போஸ் (Bigg
Boss) உண்மை காட்சி (Reality
Show) என்ற நிகழ்ச்சியின் மூலமே பிரபல்யமானது.
கடந்த 2017இல்
முதல் தடவையாக தமிழில் விஜய் தொலைகாட்சி நிறுவனத்தால் 1வது பருவம் ஆரம்பிக்கப்பட்டு நடிகர் கமலகாசன் அவர்கள் தொகுத்து வழங்க
மிக வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டிரு;தது. இது பலராலும் வரவேற்கப்பட்டதோடு மிகவும் ஆவலுடன் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இடம்பெற்றது. அதே போல் இந்நிகழ்சியின் இரண்டாவது பருவம் 2018இல்
நடிகர் கமலகாசன் அவர்கள் தொகுத்து வழங்க நடாத்தி முடிக்கப்பட்டது. முதலாவது பருவத்தைப்போல் இரண்டாவது பருவம் அவ்வளவு சிறப்பாக சோபிக்கவில்லையாயினும் 100 நாட்கள்
சிறப்பாக நடந்தது என்றுதான் கூறவேண்டும்.
மேற்படி நிகழ்வின் மூன்றாவது பருவம் இந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம்
திகதி உலக நாயன் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றுவருகிறது. இரண்டாவது பருவம் சற்று சுவாரஷ்யம் குறைவாக இருந்தமையால் இம்முறை பார்ப்பதற்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாதபோதிலும் இம்முறை நிகழ்வுகளில் நாளுக்கு நாள் ஏற்படும் சுவாரஷ்யமான நிகழ்வுகளால் படிப்படியாக பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருகின்றது என்றே கூறவேண்டும்.
இது எவ்வாறான நிகழ்ச்சி
பொதுவாக இந்த பிக்காஸ் நிகழ்வானது பிரபலமான பல தொலைக்காட்சிகளால்
நிகழ்த்தப்படும் உண்மைத்துவ நிகழ்வுகள் பல இவற்றுள் இது இன்னொருவகையான புதிய நிகழ்வுதான். தமிழில் இது புதிய நிகழ்வாக இருந்தாலும் தற்போது பிரபல்யமான அனேக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் சிறப்பான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இது கலைத்துறையிலும் வேறு பொது துறையிலும் பிரபல்யமாக வலம் வந்துகொண்டிருக்கக்கூடிய பிரபலங்கள் பலரை ஒரே வீட்டில் 100 நாட்கள்
வெளி உலக தொடர்பு இன்றி வாழவைப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக இருக்கிறது.
இந்த வீட்டுக்குள் சகல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருக்கும் அத்தோடு இங்கு வசிக்கும் அத்தனைபேரும் ஒவ்வொரு நொடியும் அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒளிப்பட (Video
Camara) கருவிகளால் அவவதானிக்கப்பட்டுக்கொண்டிருப்பர். இவ்வாறு அவதானிக்கப்
படுவதால்தான் – “ஓடவும்
முடியாது ஒளியவும் முடியாது” என்ற வாசகம் கமலால் அவ்வப்போது உச்சரிக்கப்பட்டுவந்தது.
இந்த நிகழ்வின் சுவாரஷ்யத்தை அதிகரிப்பதற்காக பங்குபற்றனர்களுக்கு அவ்வப்போது சில செற்பாடுகள் இலக்குகளாக (Tasks)
வழங்கப்படுகிறது. இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக செய்யும்போது பங்கு
பற்றுனர்களுக்கு சில விசேட சலுகைகள், வாய்ப்புகள்
அல்லது புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பங்குபற்றுனர்கள் பெறும் வாய்ப்புகளில் மிக முக்கியமானது ஆடம்பர நிதி (Luxury
Budget) ஒதுக்கம் இதனை பெறும் அவர்கள் பெற்றுக்கொள்ளும் தொகைக்கமையவாக தாங்கள் விரும்பும் ஆடம்பர பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஆடம்பர பொருள் பட்டியலில் வெவ்வேறுவிதமான உணவுப்பொருட்களே உள்ளடக்கப்பட்டிருக்கும்.
இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் 15–17
வரையானவர்கள் பங்குபற்றுனர்களாக உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வாரம் தோறும் இவர்களுக்குள் ஒருவர் வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்படுபவர் யார் என்பதை பங்குபற்றுனர்கள் மூலம் தெரிவுசெய்து பார்வையாளர்களின் வாக்களிப்புக்கமைவாக குறைவான வாக்குகளை பெற்றவர் வெளியேற்றப்படும் முறை பின்பற்றப்படுகிறது. வெளியேற்றப்படுபவர் உள்ளே இருக்கின்ற பங்குபற்றுனர்ளின் தனிப்பட்ட விருப்பத்துக்கமைய தெரிவுசெய்யப்படுவர். அதற்கு தகுந்த காரணத்தை தெரிவு செய்பவர் வெளிப்படுத்தியே தனது தெரிவுப் பிரேரணையை முன்வைப்பார். இவ்வாறு வாரம்தோறும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட இறுதியாக எஞ்சியிருப்போர் வெற்றியாளர் தெரிவுக்கான இறுதிப்போட்டியில் பங்குபற்றுவர். இதன் முதல் வாரத்தில் யாரும் வெளியற்றப்படுவதில்லை. பங்குபற்றுனர்களுக்கிடையில் ஒரு சரியான புரிந்துணர்வை ஏற்பத்துவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூறு நாட்கள் அல்லது 14 வாரங்கள்
இடம்பெறும் இந்த நிகழ்வில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட இறுதியாக மூவர் அல்லது இடையில் புதிதாக ஒருவர் புகுத்தப்படும் பட்சத்தில் நால்வர் இறுதிப் போட்டியின் பொருட்டு எஞ்சியிருக்க வாய்ப்பு உண்டு.
ஆரம்ப நிகழ்வும் இறுதி நிகழ்வும் மிகப்பிரமாண்டமாக பல்வேறு வகையான சுவாரஷ்யமான நிகழ்வுகளோடு இடம்பெறும். ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுனர்களின் அறிமுகமும் இறுதி நிகழ்வில் வெற்றியாளர் அறிவிப்போடு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெறும். அதே போல் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உலக நாயகன் தொகுத்து வழங்கும் விசேட வாராந்த நிகழ்வு இடம்பெறும். வாராந்த நிகழ்வில் வீட்டிற்குள் அந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய தொகுப்பும் மற்றும் சிறப்பான விடயங்கள் மற்;றும் பிரச்சனைகள் குழப்பங்கள் என இன்னோரன்ன பலவிடயங்கள் அலசி ஆராயப்படும்.
இது ஒரு கதையாக எழுதப்பட்ட நிகழ்வா?
பொதுவாக இந்த நிகழ்சியை ஒளிபரப்புகின்ற தொகை;காட்சி நிறுவனங்கள் இது கதையெழுதப்படாத உண்மை நிகழ்வு என்று தான் விளம்பரம் செய்கின்றன. அதேபோல் தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் அதை வழி மொழிவதுபோல்தான் தனது கருத்துக்களை பதிவுசெய்கிறார் அது ஒரு வகையில் உண்மையானதாகவே உணரப்பட்டாலும் இதில் ஆழமான சந்தேகம் அனேகமானவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. இதுபோன்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் கண்டிப்பாக அதற்கு ஒரு எண்ணக்கருவும் (Concept)
அந்த எண்ணக்கருவுடன் தொடர்புபட்ட பிரதான திரைக்கதையும் (Screen
Play) இருந்தேயாக வேண்டும் என்பதே எனது கருத்து.
இந்த நிகழ்வு எப்படி அமையவேண்டும்? இதில் எப்போதெல்லாம் மாறுதல்கள் ஏற்படவேண்டும்?, பங்குபற்றுனர்கள் எவ்வாறு செயற்படவேண்டும்?, எவ்வாறான முறைகளிலெல்லாம் அவர்களுக்குள் திடீர் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்?, ஒவ்வொருவரும் எவ்வாறு இயங்கவேண்டும்?, எவ்வாறான வசதிகள் இருக்கவேண்டும்?, எப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும்? போன்ற பலவிதமான விடயங்கள் எண்ணக்கருவுக்குள் உள்வாங்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு அவற்றுக்
கமைவாக இந்த நிகழ்வு சிறப்பாக மக்கள் ஆதரவை அதிகரித்துக்
கொண்டு செல்வதற்கு ஏற்றமுறையிலான பிராதான கதை ஒன்று இதற்கு உருவாக்கப்பட்டே இந்த நிகழ்சி நடாத்தப்படுகின்றது என்பது தான் எனது வாதம். ஆகவே இந்த நிகழ்சிக்கான பிரதான கதை இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.
இந்தக்கதையை நடிப்பதற்கான பாத்திரங்கள் தான் இதன் பங்குபற்றுனர்கள். பங்கு பற்றுனர்கள் என்ன பேச வேண்டும் என்பது நேரடியாக எழுதப்படவில்லை. ஆகவே அவர்களுக்கான கதைவசனம் இந்த நிகழ்வில் இல்லை என்பதுதான் உண்மை. அப்படி பங்குபற்றுனர்கள் என்ன கதைக்க வேண்டும் என்பது எழுதப்படாவிட்டாலும் அவர்கள் இப்படித்தான் பேசகூடியதாகவும் நடந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எண்ணக்கருவில் ஊகிக்கப்பட்டே எண்ணக்கரு உருவாக்கப்பட்டிருக்கும். ஆகவே அதை ஒத்ததாகவே நிகழ்வு நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கும். சிலசமயம் எண்ணக்கருவின் எதிர்
பார்ப்பு மாறக்கூடியமாதிரியான நிலைமை ஏற்படும்போது அதை மீட்பதற்கு பொருத்தமான பங்குபற்றுனர்களுக்கான செயற்பாடுகள் உள்ளே புகுத்தப்படும். இந்நிலைமையை கொண்டுவருவதற்கான முக்கிய நிகழ்வுகள்தான் இலக்குசார் செயற்பாடுகளும் (Task
Activities) கமல்தொகுத்து வழங்கும் நிகழ்வும், அதன்போது வெளியிடப்படும் குறும்படமும் ஆகும்.
யார் பிக்பாஸ்?
இந்த நிகழ்வு உலக நாயகன் கமல் அவர்களால் தொகுத்து வழங்கப்படுவதால் அவர் தான் பெரும் தலை (பிக்பாஸ்) என்று கருத முடியாது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது அறிவுறுத்தல்களை வழங்கும்பொருட்டு ஒரு கம்பீரமான மர்மக் குரல் (Ventriloquist) ஒலிக்கிறது. அநேகமானவர்கள் பங்கு பற்றுனர் அடங்கலாக அந்தக்குரலுக்கு உரியவரைதான் பிக்பாஸ் என்று எண்ணுகிறார்கள் அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரும் பிக்பாஸ் கிடையாது என்பதே எனது அபிப்பிராயம். இந்த நிகழ்வின் பிரதானியாகிய இந்த எண்ணக்கருவை கதையாக்கி அதனை நடைமுறைப்படுத்திக்கொண் டிருப்பவரே பிக்பாஸ். பாவம் அந்த மனிதர் அவர் யாரென்பதையே உலகம் அறியாதவாறு இவ்வளவு பெரிய பொறுப்புவாய்ந்த மற்றும் பல கோடிக்கணக்கான ரசிக பார்வையாளர்களின் ஆதரவை பெற்ற நிகழ்வை நடாத்திக்கொண்டு இருக்கிறார். அத்தனை கோடிக்கணக்கான ரசிகர் களினதும் உள்ளத்தில் பங்குபற்றுனர்கள் இடம் பிடித்துவிடுகிறார்கள் அதேபோல் தொகுப்பாளர் இடம் பிடித்துவிடுகிறார் ஆனால் பிரதானி அவர் மட்டும் ஒரு புள்ளியளவிலாவது ரசிகர் மத்தியில் இடம்பிடிக்கிறாரா என்றால் சந்தேம்தான். மேற்படி விடயங்கள் தான் பொதுவாக பெரும் தலை (Bigg Boss) உண்மை நிகழ்ச்சி (Reality Show) பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விடயங்களாகும்.
vOj;J Mf;fk;
eNu];
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக