நினைவிலிருந்து மறையப்பார்க்கும் தமிழ் வளர்த்த முன்னோர்கள்
அறிமுகம்
இலங்கையில்
முன்னைய காலப்பகுதியில் தமிழ் வழர்த்த பெரியோர் பலர் இருந்துள்ளனர் என்பது வரலாறு.
இவர்கள் பற்றிய வெளியீடுகள் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வெவ்வேறு எழுத்தாளர்களினால்
வெவ்வேறு காலப்பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. சில எழுத்தாளர்கள் தமிழ் வழர்த்த பெரியோர்கள்
பலரை பற்றிய விடயங்களை கட்டுரைகளாக ஒரே நூலில் தொகுத்து வெளியிட்டுள்மை பல்வேறு பதிவுகள்
மூலம் அறியக்கூடியதாகவும் இருக்கிறது. சில நூல்கள் இன்னமும் நூல் நிலையங்களிலும், புத்தகசாலைகளிலும்
இணையத்தளங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடிகிறது. தமிழ் வளாச்சிக்காக பங்களிப்புச்செய்த
இந்த பெரியோர்கள் சிலர் இன்றும் மிகுந்த பிரபலம் மிக்கவர்களாக அனேகமானவர்களால் பேசப்படுபவர்களாகவும்
குறித்துரைக்கப் படுபவர்களாகவும் உள்ளனர். அத்தோடு இவர்களில் சிலர் சில எழுத்தாளர்கள்
மேற்கொள்கின்ற ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்படுகின்றவர்களாகவும் உள்ளனர். சில பெரியோர்கள்
பற்றி தற்காலத்தில் அறியக்கிடைக்கின்றபோது இப்படி ஒருவர் இருந்திருக்கின்றாரா இவர்
தழிழுகிற்கு தமிழ் வளர்ச்சியின்பொருட்டு இத்துணை பங்களிப்பு செய்திருக்கின்றாரா இவரைப்பற்றி
இதற்குமுன்னர் நாம் அறிந்திருக்கவில்லையே என்றெல்லாம் எண்ணத்தோன்றும் நிலையும் இருக்கிறது.
இந்த
21ஆம் நூற்றாண்டில் வாழும் எம் பரம்பரையினரில் பலருக்கு இலங்கையின் சில தமிழ் வளர்த்த
பெரியோரைத்தவிர ஏனைய மூத்தோர்களைபற்றி துளியளவும் தெரியாத நிலையும் காணப்படுகின்றது.
சாதாரணமாக அநேகமானவர்களுக்கு உடன் நினைவிற்கு வரும்பொருட்டு தெரிந்திருக்கக் கூடிய
முற்காலத்தின் தமிழ் வளர்க்க பங்களிப்பு வழங்கிய சில பெரியோர்களை குறிப்பிட்டு கூறலாம்.
அவர்கள் சுவாமி விபுலானந்தர், தவத்திரு தனிநாயகம் அடிகள், சுவாமி ஞானப்பிரகாசர், ஆறுமுகநாவலர்,
சோம சுந்தரப் புலவர், சி. வை. தாமோதரம் பிள்ளை, சேர் பொன். இராமநாதன், சேர் பொன். அருணாச்சலம்,
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை, சோமசுந்தர புலவர், சேர் முத்துக்குமாரசுவாமி, அறிஞர்
சித்திலெப்பை, குமாரசாமிப் புலவர், தாவீது அடிகள் போன்றவர்களாவர். மேற்போந்தவர்களின்
பெயர்களே அநேகமானவர்கள் அடிக்கடி கேள்விப்பட்ட பெயர்களாகவும் இருக்கிறது. அண்மைக்காலத்தய
புதியவர்கள் பெயர்கள் இங்கு உள்ளடக்கப்படவில்லை அவர்கள் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்
தேடி எழுதலாம் என எண்ணுகிறேன். புதியவர்கள் பற்றிய பதிவுகள் தற்காலத்து தொழில்நுட்ப
முன்னேற்றம் காரணமாக அதிகப்படியாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்பதும் இங்கு
குறிப்பிடவேண்டியதே.
இன்று
பல எழுத்தாளர்கள் இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும்பொருட்டு
பல்வேறுவிதமான ஆக்கங்களை வெளியிட்டே வருகின்றனர். அவர்களுள் குறிப்பிடக்கூடியளவானவர்கள்
மட்டுமே தமிழ் வளர்த்த நம் முன்னோர்கள் பற்றிய தேடல்களுக்குள் ஈடுபடுகின்றனர். கவிஞர்கள்
உள்ளனர் சிறுகதை மற்றும் நாவல்களை எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனர் புதினங்களை எழுதுவோர்
உள்ளனர் இவர்களில் அனேகமானோர் தாம் எழுதுகின்ற விடயங்கள் சார்ந்த விடயங்களை ஆய்ந்தறிந்து
தங்கள் கிதை;த பெறுபேறகளை வைத்துக்கொண்டு தமது ஆக்கங்களை சமர்ப்பிப்பதோடு அல்லது வெளியிடுவதோடு
தங்கள் தேடலை மட்டுப்படுத்திக்கொள்கின்றனர். கட்டுரையாளர்களில் ஒரு புகுதியினர் அனேகமாக
பொதுவான விடயங்களுக்குள் மட்டும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளப் பார்க்கின்றனர். மேலும்
ஒரு பகுதியினர் நவீன காலத்துடன் தொடர்புடைய விடயங்களுக்குள் தங்கள் கவனத்தை செலுத்தி
தங்கள் ஆக்கங்களை படைக்க முயற்சிக்கின்றனர். மற்றொரு பகுதியினர் உல்லாசப் பிரயாணம்
மற்றும் புதினங்கள் சார்பான விடயங்களுக்குள் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். மேலும்
சிலர் கல்வி சார் விடயங்களுடன் தொடர்பான கட்டுரைகளுடன் தங்கள் ஆக்கங்களை மட்டுப்படுத்துகின்றனர்.
மற்றொரு பகுதியினர் விரைவாக தங்கள் பெயரை எழுத்தாளராக நிறுத்திவிடுவதற்கு வாசகர்களை
கவரக்கூடிய சில விடயங்களை நோக்கி தங்கள் பார்வையைத் திருப்பி எழுதி வருகின்றார்கள்.
இங்கு
ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டு விடயங்களை தேடி கட்டுரைகளை படைப்போர் ஒரு குறிப்பிட்ட சிறிய
குழுவினராகவே காணப்படுகின்றனர். இவர்களில் குறுகிய எண்ணிக்கையிலானோர் தவிர்ந்த ஏனையோர்
அனைவரும் அனேகமாக பாண்டித்தியம் பெற்ற கல்விமான்களாகவே இருக்கின்றனர். அவர்களால் அவ்வப்போது
குறிப்பிடக்கூடிய மூத்தோர் சார்பான கட்டுரைகள் ஆய்வு செய்து வெளியிடப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
தற்காலத்தில் யாராவது தமிழ் வளர்த்த மூத்தோர் பற்றி ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிடுவதாயின் தனித்தனியாக பல தலைப்புக்களிலான பல நூல்களைத் தேடி ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் ஒரே வெளியீட்டில் பலரைப்பற்றிய விடயங்களை அறிவதற்கு ஏதுவான நூல்களோ படைப்புக்களோ இல்லை என்ற அர்தம்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் பல பெரிஆய்வாளர்கள் சார்பான விபரங்களையுடைய தனிப்படைப்புக்கள் தேடலின் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆகவே இவற்றை அறிவதற்கு சோம்பல்தனமின்றிய தேடல் இன்றியமையாதது. இந்தக் கட்டுரையில் என்னால் முடிந்தவரை தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இருப்பிலும் இலக்கிய முன்னேற்றத்திலும் தங்கள் பங்களிப்பை வழங்கிய முற்காலத்து பெரியார்கள் சிலர் பற்றிய விடயங்களை முயன்று தேடி தர முயற்சி செய்திருக்கின்றேன். இது எதிர்கால ஆய்வாளர்களுக்கும் வரலாற்றுப் பதிவாளர்களுக்கும், கற்போர்க்கும், வாசிப்போர்க்கும் மற்றும் எழுத்தாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்பிக்கைகொள்கிறேன். இதேபோல் மேலும் பலர் பற்றிய விபரங்களை ஏனையவர்களும் தேடி ஆய்ந்து எழுதி வெளியிட்டு ஆவணப்படுத்துவது சாலச் சிறந்ததும் வரலாற்று பதிவுக்கும் அவசியமானதுமாகும் என்பது எனது அசராத நம்பிக்கையாகும்.
(தொடரும்.........)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக