நீண்ட
இடைவெளியின் பின்
முதல் பயணம்
இயற்கை ரசனைக்குள்
கண்களில் சிக்குண்ட
அந்தக் காட்சி
தலை சாய்ந்த
மொட்டை மரங்களாய்
மாவட்ட
வாயில் முதல்
நகரத்து
எல்லை வரை
சாலையோரமெங்கும்
பல நூறு
பயன்தரும்
கற்பகதருக்கள்
வீட்டுக் கூரைகளைத்
தாங்கிக்கொள்ள
யாரும்
சாய்க்காதவரை
சூரியனால்
சுட்டெரிக்கப்பட்டு
கருகிச்
சிதையாதவரை
அவை நாம்
கடந்து வந்த
வரலாற்றை
அடுத்த சந்ததிக்கு
காட்சிப்படுத்த
தலையிழந்தும்
கம்பீரமாக
இன்னமும்
நிமிர்து நின்று
காட்சிதரும்
அடையாளச் சின்னங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக