சனி, 13 ஜூன், 2020

தேடலில் கிடைத்த முத்து ஒன்று அப்பாத்துரை முத்துலிங்கம் - எழுத்தாளர்


அறிமுகம்



ஆழமான நீர் தடாகத்துக்கடியிலே உறுதியாக வேர் பதித்து சலனமின்றி நீரின் அசைவுகளோடு இலைகளால் நீச்சலடித்து மிதந்து பூஜை பீடத்திற்கு வைப்பதற்கென்றே பூத்த அந்த மலரைபோல உலகு பார்க்க மலர்ந்து தேவையுள்ள அனைவருமே தேடி ரசிக்கும்படியாக வாழ்ந்து தன் தாய்மொழிக்கு தரவேண்டிய கௌரவத்தை பல்வகைப்பட்ட வடிவங்களில் தன் எழுத்துக்களால் இன்றுவரை தூரத்து தேசத்திலிருந்து தந்துகொண்டிருக்கும் ஓர் சிறந்த எழுத்தாளர் பற்றியதே இந்த கட்டுரை.

யார் அந்த தூரத்து எழுத்தாளர்? அவர்தான் பல்வேறு நாடுகளிலும் தற்போது பலராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும், கௌரவிக்கப்படும் மற்றும் தேடப்படும் பல்வேறுபட்ட பல்சுவை எழுத்துக் கலைப் படைப்புக்களுக்கு சொந்தக்கார னாகிய திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் அவர்கள். 1980களில் இவரது வெளியீடாகிய அக்கா சிறுகதைத் தொகுப்பு படைப்பில் வெளியிட்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தததுண்டு. பின்னர் இவரது வெளியீடுகள் பற்றி அறியக்கிடைக்காததால் இவர் படைப்புகள் பற்றிய நினைவு மெல்ல மெல்ல மறந்து போயிற்று. அண்மையில் தமிழகத்தின் பிரபல மேடைப் பேச்சாளரும் பட்டிமன்ற விற்பன்னருமான மிகப் பிரபலமான திருமதி பாரதி பாஸ்கரன் அவர்களுடைய கண்ணதாசன் நிகழ்வுகளை மீட்டும் பாட்டுமன்றம் சார் பேச்சு நிகழ்வு ஒளிப்படம் ஒன்றை யூரியூப் (YouTube) இணையதள பகுதியில் பார்க்கக் கிடைத்தது. அதிலே தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய 5 எழுத்தாளர்களில் ஒருவராக திரு. . முத்துலிங்கம் என்ற கனடாவில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் பார்க்கப்படுகிறார் என்ற கருத்தை பாரதி பாஸ்கர் அவர்கள் முன்வைத்திருந்தார். இந்த தகவலே என்னை எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றிய நினைவுக்குள் மீண்டும் கொண்டுசென்றதோடு அவர் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் தேடவும் தூண்டியதோடு நின்றுவிடாமல் அவர்பற்றிய இந்த கட்டுரையையும் எழுதத் தூண்டியது என்று சொன்னாhல் அது மிகையாகாது. இவர் பற்றிய விடயங்கள் பலவற்றையும் இந்த கட்டுரையில் ஒரே பார்வையில் தரவேண்டும் என்ற ஆர்வத்தால் சற்று விரிவாகவே இந்த கட்டுரையை எழுத முயற்சித்திருக்கிறேன்.
. முத்துலிங்கம் அவர்கள் 1937ஆம் ஆண்டு தை மாதம் (ஜனவரி) 19ஆம் திகதி பிறந்தார். இவர் இலங்கையின் வடமாகாணத்தின் பிரபல்யம் பெற்ற மாவட்டமாகிய யாழ்ப்பாணத்தில் நகரை அண்டிய கொக்குவில் எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்பாத்துரை தாயார் இராசம்மா.  ஏழு பிள்ளைகளை பெற்ற அப்பாத்துரை இராசம்மா தம்பதியர்க்கு இவர் ஐந்தாவது மகனாக அவதரித்தவர். இவர் கமலரஞ்சினி என்பவரை மணமுடித்து அவருடன் தனது இல்லற வாழ்வை ஆரம்பித்து இனிதே இன்றுவரை வாழ்ந்து வருகின்றார். முத்துலிங்கம் கமலரஞ்சினி தம்பதியர்க்கு இரண்டு பிள்ளைகள் ஒரு ஆண்மகன் மற்றயவர் பெண் பிள்ளை அவர்கள் முறையே சஞ்சயன் மற்றும் வைதேகி என்ற பெயர்களை பெற்றிருந்தனர். வைதேகியின் மகள் அதாவது முத்துலிங்கத்தின் பேத்தி அப்சரா. பேத்தியின் பெயராகியஅப்சராஎனும் பெயரையே அவ்வப்போது இவருடையை சில கதைகளில் பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

இவரது கல்வி
இவர் தனது ஆரம்பக் கல்வியை முதலில் கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் தொடர்ந்தார். தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 1959ம் ஆண்டு விஞ்ஞானத்தில் பட்டம் பெற்று பட்டதாரியானார்விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றதன் பின்னர் பட்டயக் கணக்காளருக்கான கல்வியை கற்று இலங்கையின் பட்டயக் கணக்காளராகவும் இங்கிலாந்தில் முகாமைத்துவக் கணக்காளராக பயின்று இங்கிலாந்தின் முகாமைத்துவ கணக்காளராகவும் பட்டம் பெற்றிருந்தமையும் இவரது அறிவு வளர்ச்சிப் பகுதியின் மற்றொரு முன்னேற்றமாக குறிப்பிடத்தக்கது.

இலக்கியப் படைப்புகளின் ஆரம்பம்
இவர் சிறு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதி பிரபல்யமானதோடு இலங்கை மற்றும் இந்தியாவில் பல சான்றுகளையும் விருதுகளையும் வென்றார். இவர் எழுத்துத் துறையில் ஆர்வம்கொண்டு எழுத தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே பரிசு வென்று அங்கீகாரத்தை பெற்றமை இவரை மேலும் எழுதுவதற்கு தூண்டியது. 1960களில் இவர் தனது எழுத்து பணியை சிறு கதை எழுதுவதன் மூலம் ஆரம்பித்ததார் . முத்துலிங்கம் அவர்கள் எழதிய சிறுகதைகளுள் அக்கா எனும் சிறுகதை 1961இல் அக்காலத்தில் இலங்கையின் பிரபல தமிழ் பத்திரிகையாகிய தினகரன் பத்திரிகையால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசையும் தட்டிச்சென்றார். இந்தஅக்காஎனும் சிறுகதையின் பெயரே பின்னர் 1964ஆம் ஆண்டில் இவரால் வெளியிடப்பட்ட முதலாவது சிறுகதைத் தொகுப்பின் நூல் தலைப்பாக இடம்பெற்றிருந்ததும் இவருடைய இந்த வெளியீட்டின் அணிந்துரையை . கைலாசபதி அவர்கள் எழுதியருந்தைமையும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக திரு. . கைலாசபதி அவர்களே இவரை எழுத்தாளராக அறிமுகம் செய்து வைத்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

தொழிலும் வளர்ச்சியும்
1965ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளராக நியமனம் பெற்ற இவர் தனது பணியில் அக்கறை காட்டத்தொடங்கியதால் தனது எழுத்துப்பணியில் கவனம் செலுத்தவில்லை. அத்தோடு அவர் 1972இல் நாட்டை விட்டு வெளியேறினார் அதன்பின்னர் ஆசிய மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களைச் சார்ந்த வெவ்வேறு நாடுகளுக்கு பணியின் நிமித்தம் பயணித்தார்;. உலகவங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் போன்ற நிறுவனங்களும் இவர் பணிபுரிந்த நிறுவனங்களுக்குள் அடங்கும். இந்த நிறுவனங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இவர் பணியினை மேற்கொண்டிருந்தார். பணியில் ஈடுபட்டிருந்த இந்த காலப்பகுதியில் இவர் எழுத்துத் துறையில் அதிகளவில் நாட்டம் கொள்ளவில்லை இவ்வாறு ஏறத்தாள 30 வருடங்களை இவர் தனது முதன்மைப் பணியின் நிமித்தம் கழித்தார். இவர் பணியின் நிமித்தம் கழித்த காலங்களில் இவர் கண்டவைகள், கேட்டவைகள், ரசித்தவைகள், அனுபவித்தவைகள், மற்றும் கற்றுக்கொண்டவைகள் யாவற்றையும் மனதிலே ஆழமாக பதித்து வைத்திருந்தார் என்பதை பிற்காலத்தில் இவர் எழுதியுள்ள ஆக்கங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

இலக்கிய வளர்சியில் முழுமையான பங்களிப்பு
இவ்வாறு தனது பணியில் காலத்தை கடத்திய இவர் மீண்டும் 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் எழுதத்தொடங்கினார். . முத்துலிங்கம் அவர்கள் மீண்டும் எழுத ஆரம்பித்த அடுத்த மூன்று ஆண்டு காலப் பகுதிக்குள் 3 தொகுப்புகளை எழுதி வெளியிட்டிருருந்ததார். வடக்கு வீதி,” “திகட சக்கரம் மற்றும் வம்ச விருத்தி போன்ற நூல்கள் இவற்றில் அடங்கும். இலங்கையில் அவர்களது இளமைக்காலத்தையும் மற்றும் வெளிநாட்டில் வாழ்ந்த காலத்தையும் முன்நிலைப்படுத்தி எழுதிய படைப்புகளின் தொகுப்பு ஒன்றும் இக்காலப்பகுதியில் இவரால் வெளியிப்பட்டது. இந்நூல் தமிழ் நாட்டின் லில்லி தேவசிகாமணி விருதை வென்ற நூல் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. “வம்ச விருத்திஎன்ற நூல் 1996இல் வெளியிடப்பட்டு தமிழ் நாடு அரசின் பரிசையும் இந்திய ஸ்டேட் வங்கியன் பரிசையும் வென்றமையும் மறந்துவிடற்கரியதாகும். அது மட்டுமல்லாதுவடக்கு வீதிஎனும் நூல் இலங்கை அரசின் கலாசார விருதை வென்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் பல படைப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது ஏனைய படைப்புக்கள்
மேற்குறிப்பிட்ட நான்கு சிறுகதைத் தொகுப்பு வெளியீடுகளோடு மேலும் 11 சிறுகதை தொகுப்புகள் இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளன. இவர் இதுவரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை அனைத்தும் அனேகமாக இந்த தொகுப்புக்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள. அவரால் வெளியிடப்பட்ட தொகுப்புக்களின் மிகுதி 11 தொகுப்புக்களும் வருமாறு:
1.            மகாராஜாவின் ரயில் வண்டி 2001ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
2.            . முத்துலிங்கம் கதைகள் 2004 வரை எழுதப்பட்ட சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு
3.            ஒலிப்புத்தகம் சிறுகதைகளின் தொகுப்பு 2008இல் வெளியிடப்பட்டது
4.            அமெரிக்காக்காரி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது 2009ஆம் ஆண்டு
5.            பத்மா நாராயணன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 2008இல் வெளியிடப்பட்ட ஐயெரளிiஉழைரள வுiஅநள அப்பாத்துரை முத்துலிங்கத்தின் சிறுகதைகள்
6.            2012இல் வெளியிடப்பட்ட குதிரைக்காரன் தொகுப்பு
7.            தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக 2013இல் வெளியிடப்பட்ட கொழுத்தாடு பிடிப்பேன் (இது காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடு - தொகுப்பாசிரியர் . மோகனரங்கன்)
இந்த கொழுத்தாடு பிடிப்பேன் தொகுப்பில் முத்துலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 45 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புக்கான கதைகள் மிகுந்த கருசனையோடு தெரிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளமையை தொகுப்பில் உள்ள கதைகளைப் படித்தால் புலப்படும். 
8.            பிள்ளை கடத்தல் காரன் தொகுப்பு 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
9.            ஆட்டுப்பால் புட்டு சிறுகதைத் தொகுப்பு 2016இல் வெளியிடப்பட்டது
10.          . முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது
11.          தமிழ் சிறுகதைகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு 2017இல் வெளியிடப் பட்ட After Yesterday  போன்றவையே அவை.

சிறுகதைகள் மட்டுமல்லாது பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார் அத்தோடு அவை வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றிருந்தன. சிறுகதை தொகுப்புகளைப்போலவே இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளும் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவரால் தொகுப்புக்களாக வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பு வெளியீடுகளின் விபரம் வருமாறு:
1.            2005ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அங்க இப்ப என்ன நேரம்
2.            மதிப்புரைகளின் தொகுப்பாக வெளிவந்த கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது 2006இல் வெளிவந்தது
3.            வியத்தலும் இலமே என்ற நேர் காணல்களின் தொகுப்பு (காலச்சுவடு பதிப்பகம்) 2006இல் வெளியிடப்பட்டுள்ளது
4.            பூமியின் பாதி வயது (உயிர்மை பதிப்பகம்) 2007இல் வெளியிடப்பட்டுள்ளது
5.            அமெரிக்க உளவாளி (கிழக்கு பதிப்பகம்) 2010இல் வெளிவந்தது
6.            ஒன்றுக்கும் உதவாதவன் தொகுப்பு (உயிர்மை பதிப்பகம்) 2011இல் வெளிவந்தது
7.            தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை நேர்காணல்களின் தொகுப்பு 2013ஆம் ஆண்டு வெளிவந்தது
8.            தோற்றவர் வரலாறு 2016இல் வெளிவந்தது
9.            . முத்துலிங்கம் கட்டுரைகள் முழுத் தொகுப்பு 2018இல் வெளியிடப்பட்டது இரண்டு பாகம்

இவர் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என்று தனது படைப்புக்களை மட்டுப்படுத்தி விடவில்லை. மாறாக புதினங்கள், நேர்காணல்கள் போன்றவற்றையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புக்களில் புதினமாக வெளிவந்த படைப்புகளாவன உண்மை கலந்த நாட்குறிப்புகள் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக 2008இல் வெளிவந்தது மற்றொன்று கடவுள் தொடங்கிய இடம் போன்றவையாகும்.

இவர் முதன் முதலில் எழுதிய ஆக்கமாக தனது பாடசாலையில் கற்பித்த கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் மாற்றலாகிச் செல்லவிருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை வைபத்தின்போது ஒரு வெண்பா எழுதியதாகவும் அப்போது அவருக்கு எட்டு வயது இருக்கும் எனவும் அந்த படைப்பே தனது முதல் படைப்பாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தனது 16வது வயதில் பாடசாலையில் வைக்கப்பட்ட ஆங்கிலச் சிறுகதைப் போட்டிக்காக தமிழிலே யோசித்து ஆங்கிலத்தில் சிறுகதை எழுதியதாகவும் இவையே தன்னை எழுதத் தூண்டியிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளார். மேற்படி விடயமானது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட . முத்துலிங்கத்துடனான செவ்வியில் ஜெயமோகன் அவர்களால் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் எப்படி ஏற்பட்டது என முத்துலிங்கம் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதிலாக அவரால் குறிப்பிட்டபட்டுள்ளது.

படைப்புக்களின் போக்கு
ஒரு எழுத்தாளனுக்கு சொற்களஞ்சியம் எவ்வளவு முக்கியம் என்பதை இவர் தனது ஆக்கங்களில் பயன்படுத்தும் சொற்களின் மூலமும் கதைகளை ஆரம்பிக்கும் சொற் பிரயோக முறைமையின் தனித்துவத்தின் மூலமும் ஒப்புவிப்பதில் மிகவும் கவனமாய் இருக்கிறார் என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் தானாகவேவார்த் தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம், ஒரு நடுநிசியில்  அபூர்வமான ஒரு வார்த்தை வந்து என்னை குழப்பிவிடும், அது என்னை வசீகரிக்கும், சிந்திக்க வைக்கும், பிறகு என்னை ஆட்கொள்ளும் என குறிப்பிட்டு அதை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

உண்மை கலந்த நாட்குறிப்புக்கள் நாவலில் தாமரை பூத்த தடாகம் என்ற அத்தியாயத்தை ரசனையோடு அனுபவித்து படிக்கின்றபோது தாயகத்தின் ஒரு சுவாரஸ்யமான இசைச் சூழலை நம் கண்முன்னே கொண்டு வருகிறார். வேலுச்சாமி பாத்திரத்தை அப்படியே இசைச் சூழலை விபரிப்பதற்காகவே படைத்ததுபோல் கதைக்குள் உலவ விட்டிருக்கிறார். இந்த உண்மை கலந்த நாட்குறிப்புக்கள் மூலம் அவர் தாயகத்தில் வாழ்ந்த காலப்பகுதியில் நினைவில் ஒன்றித்துப்போன பல விடயங்களை வெளிக்கொணர்ந்துள்ளார் என்றுதான் கூறவேண்டும் இதனால்தான் இதற்கு இந்த பெயரை பொருத்தமாக சூட்டியிருக்கிறார் போலும்.

தாய் நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து வேறு ஒரு நாட்டில் வாழுகின்ற வாழ்க்கை முறை பற்றிபூமாதேவிஎனும் கதையில் தன்னுடைய அனுபவத்தை கலந்து மெல்லத் தவளவிட்டிருக்கிறார். இவர் தன்னுடைய கதைகளுக்குள் புராணங்கள் மற்றும் காவியங்கள் பற்றிகூட பேசுவதற்கு மறந்ததில்லை என்று கூறும்படியாக அங்காங்கே அவற்றையும் கதையின் பாத்திங்களின் போக்குக்குள் கலந்துவிட்டிருக்கிறார். தாயகத்தில் நிகழ்ந்த யுத்தம் சார் சூழலைப்பற்றியும் அதன் பாதிப்புகளைப் பற்றியும் ஒரு படைப்பில் மிகவும் சாதுரியமாக பல விடயங்களை எதிர்கால சந்ததிகள் தெரிந்துகொள்ளும் பொருட்டு காட்சிப்படுத்தியிருக்கிறார்.

தாயினுடைய வடிவங்களை முத்துலிங்கம் அவர்களுடைய பல படைப்புக்களில் பல்வேறு வடிவங்களில் காணக்கூடியதாக இருக்கும். இவர் அனுபவங்கள் சிலவற்றையும் எழுதிப் பகிர்ந்துள்ளார் அப்படி எழுதிய அனுபவங்களைகூட கதை சொல்வது போன்று மிக சுவாரஸ்யமாக வடிவமைத்திருப்பதை அந்த அனுபவப் பகிர்வில் கவனிக்கலாம். அநேகமான கதைகளை இவர் ஒருவர் இன்னொருவருக்கு கதைசொல்லும் வழிமுறையை (பாணியில்) பின்பற்றியே தான் சொல்லவந்த கதையை சொல்லி முடித்திருக்கிறார். சில சந்தர்ப்பத்தில் கதையின் போக்கை பார்த்தால் அவர் சுயசரிதை சொல்கிறார் என்றும் எண்ணத்தோன்றுகிறது.

அவரது படைப்புக்களில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருப்பதில்லை சில விடயங்களை நாசூக்காக நகைச்சுவை வடிவிலே சொல்லி முடித்துவிடுவார். சாதாரணமான நகைச்சுவைக்கு ஒரு உதாரணமாக  வெளிச்சம்என்ற கதையில் வரும் ஒரு சிறியவிடயத்தை பார்க்கலாம், கதையின் பிரதான பாத்திரம் வைத்தியசாலை ஒன்றிற்கு சென்றபோது அந்த வைத்தியசாலையில் தனது மகிழூர்ந்து (கார்) வண்டியை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் விடுகிறார் பின்னர் விட்ட இடத்தை மறந்து தேடும்போது அவ்வளியால் வந்த ஒருவர் காரைத் தொலைத்துவிட்டீர்களா என கேட்க அதற்கு பதிலை வழங்கும்பொருட்டு கார் எங்கோ நிற்கிறது, நான்தான் தொலைந்துவிட்டேன் என்று நகைச்சுவையாக கூறிமுடிக்கிறார். இவ்வாறான நகைச்சுவைகளை ஏனைய படைப்புக்களிலும் ஆங்காங்கே காணலாம்.

திரு. முத்துலிங்கம் அவர்களுடைய படைப்புக்களில் அனேகமானவை வெவ்வேறு விதமான சூழலையும் வாழ்வியல் முறைமையையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளதை படைப்புக்கள் ஊடாக பயணிக்கும்போது கண்டு உணரக்கூடியதாக இருக்கும். அவருடைய படைப்புக்கள் அவர் பயணித்த நாடுகiளையெல்லாம் எவ்வளவு ஆளமாக ரசித்து அனுபவித்து சுவைத்து கடந்து வந்திருக்கின்றார் என்பதை படம்போட்டு காட்டுகின்றன. வெவ்வேறு நாடுகள் பற்றியும் அவற்றின் சூழல், பழக்கவழக்கங்கள்;, உணர்வுகள், நாகரிகம், பண்பாடுகள், கலாசாரம் போன்றவற்றைப் பற்றியும் அவைபற்றி அறிய விரும்புவோரும் இவை பற்றி ஆய்வு செய்ய முனையும் ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்றவர்களும் இவருடைய படைப்புக்களை வாசிப்பதன் மூலம் அவர்களுக்கு வேண்டிய பல சுவார~;யமான விடயங்களையும் தகவல்களையும் இவரது படைப்புகளிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பது எனது கருத்து. காரணம் அவ்வளவு தூரம் தனது ஆழமான அனுபவங்களை படைப்புக்களில் மிகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் வெளிப்படுத் தியிருக்கின்றார்.

மேற்போந்த விபரங்களை வாசித்து அறிந்துகொள்வதற்கு இவரின் சில வெளியீடுகளை அவை தொடர்புபட்டுள்ள நாடுகளுடன் சேர்த்து இங்கே குறிப்பிடவிளைந்துள்ளேன்.
அவையாவன: போரில் தோற்றுப்போன குதிரை வீரன், வடக்கு வீதி மற்றும் துரி எனும் சிறுகதைகள் அமெரிக்காவினதும் மற்றும் லண்டன் நாடுகளினதும், காபூல் திராட்சை மற்றும் குங்கிலியக் கலய நாயனார் போன்ற படைப்புக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டினதும்;, குதம்பேயின் தந்தம் மற்றும் வையன்னா கானா ஆகிய கதைகள்  ஆபிரிக்காவினதும், கிரகணம் என்னும் கதை பாக்கிஸ்தான் நாட்டினதும், அமெரிக்காக் காரி என்னும் சிறுகதை இலங்கை, அமெரிக்கா மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளினதும், ராகுகாலம் படைப்பானது நைரோபி;; மற்றும் இந்திய நாட்டினதும், அடைப்புக்குள் என்ற ஆக்கம் ஜமைக்காவினதும்;; மற்றும் கொம்புளானா என்ற சிறுகதை கனடா நாட்டினதும் பின்புலம், வாழ்கைமுறை, நாகரீகம் மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவற்றை முன்நிலைப்படுத்தி அனுபவித்து அவற்றினூடா ஆசிரியர் தனது அனுபவங்களை தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்து எழுதப்பட்டுள்ளமையை காணலாம். இந்தப் படைப்புக்களில் தமிழ் மக்களின் நாகரிகம், கலை, கலாசாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாடு போன்றவற்றை வெவ்வேறு பாத்திரங்களின் மூலமாக ஆசிரியர் இந்த படைப்புக்களிலே வெளிப்படுத்தி வேறுபாட்டை உணர்த்த தவறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவரைப்பற்றிய ஏனையவர்கள்
தமிழ் நாட்டில் இவர் தடம் பதிக்காத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு அனேகமான பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் போன்றவை வெளிவந்திருந்தன. இவரைப் பற்றி பல்வேறு நாடுகளையும் சார்ந்த பல்வேறு எழுத்தாளர்கள் மிகச்சிறப்பான பல கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார்கள்.
அம்பை என்று எழுத்துலகால் அறியப்படும் பெண்ணியவாதி சி. எஸ். லக்ஷ்மி அவர்கள் முத்துலிங்கம் பற்றிய பதிவில். முத்துலிங்கத்தின் கதைகள் நம்மை நாம் அறியாத பாதைகளில் நாம் அறிந்த உலகிற்கு இட்டுச்செல்பவை, நாம் அறியாத உலகின் கதவுகளையும், சாளரங்களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவைஎன குறிப்பிடுகிறார்.

. முத்துலிங்கம் அவர்களின் கதைகளை வாசிக்கின்றபோது அவர் தனது கற்பனைகளை எவ்வாறு புனைகதைகளுக்குள் உலவ விடுகின்றார் என்பதை எழுத்தாளர் கிரிதரன் அவர்கள் தனதுபதிவுகள்எனும் இணையத்தள பக்கத்தில்வாசிப்பும் போசிப்பும் 311’ என்ற பகுதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “.மு அவர்கள் தனது கற்பனையைத் தொய்வில்லாமல் கதைக்கு மேல் கதையாக நகர்த்திச் செல்வதில் வல்லவர். புனை கதைகளை வாசகர்களின் சுவைகளின் அடிப்படையில் எழுதுவதனாலோ என்னவோ சில வேளைகளில் அப்புனைவுகளைப்பற்றி விபரிக்கையிலும் அவற்றிலும், வாசிக்கும் அல்லது கேட்டுக்கொண்டிருக்கும் வாசகர்களைக் கவரும் வகையில் புனைவுகளைக் கலந்துவிடுகின்றாரோ என்றொரு சந்தேகம் எனக்குண்டு என குறிப்பிடுகிறார்.

திரு. பழனிவேல் என்னும் எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றி குறிப்பிடுகையில், அவருடைய படைப்புக்கள் மகத்தானவைகளாக தனக்கு தெரிவதற்கு காரணம் அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம் தொடங்கியதிலிருந்து அந்தப் பயணத்தின் இலக்கை சென்று அடையும் வரை  பயணப் பாதையை சுற்றியிருக்கும் அனைத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வெளிச்சத்தை தூவிக்கொண்டே வருகிறார், உரக்க பேசாமல் புன்னகையுடன் நம்முடன் சகபாணியாக வருகிறார் எனவும் நம் வாழ்க்கையில் முன் நிற்கும் நம்மால் அதி முக்கியம் எனக்கருதப்படும் பல வினாக்களும் விழுமியங்களும் புரிதல்களும் காணாமல் போகும் மாயமும் பயணத்தில் நடக்கிறது  எனவும் சொல்வனம் இணைய சஞ்சிகையில் இதழ் 223 முத்துலிங்கம் படைப்புகள் என்ற பகுதியில் தெரியப்படுத்தியுள்ளார். இவ்வாறு பிலபலமான பல படைப்பாளர்களும் இவரைப்பற்றி தமது ஆக்கங்களில் எழுதியுள்ளமை இவரது படைப்புக்கள் இவ்வாறான பலருடைய மனங்களை ஊடுருவியுள்ளமையை எமக்கு அறியத்தருகின்றன. இங்கு நான் குறிப்பிட்டுள்ளவை பெருமறைச்சாரலில் கண்ட சில தூறல்கள் மட்டுமே.

இவர் பெற்ற பரிசுகளும் விருதுகளும்
இவர் இதுவரை பல்வேறு விருதுகளையும் பரிசுகiயும் இலங்கையிலும் இந்தியாவிலும் பெற்று தனது தனித்துவத்தையும் திறனையும் தமிழ் படைப்புலகிற்கு வெளிப்படுத்தியதோடு தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தனது பங்களிப்பை நிறைவாக வழங்கி உறுதியாக தனது தடங்களைப் பதித்துள்ளார். இவர் பெற்றுக்கொண்ட விருதுகளும் பரிசுகளும் வருமாறு:
தினகரன் பத்திரிகையால் 1961இல் நடாத்தப்பட்ட போட்டியில் அக்கா எனும் சிறுகதைக்காக பரிசை வென்றார் இது இவரது ஆரம்ப எழுத்துக்கு கிடைத்த வெற்றி எனலாம். அடுத்து கல்கி சிறுகதைப் போட்டிக்கான பரிசை வென்றிருந்தார்.
1995ஆம் ஆண்டு திகடசக்கரம் எனும் தனது படைப்புக்காக லில்லி தேவசிகா மணி பரிசை வென்றார்.
வம்சவிருத்தி சிறுகதைத் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் பரிசை முதல் பரிசாகவும் இந்திய ஸ்டேட் வங்கியின் முதற்பரிசையும் (இரண்டு பரிசுகளையும்) 1996ஆம் ஆண்டு பெற்றார்.
மற்றொரு படைப்புக்காக 1997ஆம் ஆண்டு ஜோதிவிநாயகம் பரிசை பெற்றார்.
1999இல் இலங்கை அரசின் சாகித்திய பரிசை வடக்கு வீதி சிறுகதைத் தொகுப்புக்காக பெற்றுக்கொண்டார்.
நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச்சாதனை விருதை கனடா தமிழர் தகவல் அமையத்திடமிருந்து 2006ஆம் ஆண்டு பெற்றார்.
திருப்பூர் தமிழ் சங்க விருதையும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக குதிரைக்காரன் சிறுகதைத் தொகுப்பிற்கு விகடன் விருதையும் 2012இல் பெற்றார்.
தொடர்ந்து 2013இல் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்திடமிருந்து தமிழ்பேராய விருதையும் 2014இல் மார்க்கம் நகரசபை இலக்கிய விருதையும் பெற்றுக்கொண்டார். இவர் மென்மேலும் பலவிருதுகளையும் பரிசுகளையும் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது அத்தோடு இவர் அதற்கு தகுதியானவரும்கூட.

தீராநதிஎன்ற இதழுக்காக கிருஸ்ணா டாவின்சி என்பவருக்கு இவர் அளித்த பேட்டியொன்றில் ஒரு எழுத்தாளராவதற்கு தேவையான தகுதிபற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். ஒன்றைப் பதிப்பித்தால் தான் அவர் எழுத்தாளர் என்பதில்லை. அவர் எழுதினாலும் எழத்தாளர்தான் எழுதாமல் சிந்தித்தாலும் அவர் எழுத்தாளர்தான். இவ்வாறு சில எழுத்தாளர்கள் இருப்பதாக நானும் அறிந்திருக்கின்றேன். அவர்கள் என்ன செய்வார்களென்றால் அவ்வப்போது சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்கள் பின்னர் சிறந்த ஒரு எண்ணக்கரு விடயமாக கிடைத்தவுடன் அவற்றுக்கு தனது கற்பனைகளால் சிறந்த முழுமையான வடிவம் கொடுத்து உடனடியாக உதவியாளர் ஒருவருடைய துணையுடன் அதற்கு எழுத்துரு கொடுத்துவிடுவார்கள். பின்னர் அதனை வெளியிடுவார்கள்.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் இவர் பல கதைகள், கட்டுரைகளை எழுதி அதனை தனது கதைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகளாக வெளியிட்டதோடு அமெரிக்காவின் சமகால இலக்கிய வெளியீடுகளில் தெரிவு செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் சிலவற்றை சரிபார்த்து திருத்தியுமுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து ஹவாட் பல்கலைக்களகத்தின் தமிழ் இருக்கையின் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார்.

தற்போது கனடாவின் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியக் குழுமம் எனும் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினராக செயற்படுவதோடு ரொறன்டோ ஒன்டாறியா எனும் பிரதேசத்தில் அவரும் அவரது மனைவியும் வசித்து வருகிறார் அதேவேளை தன்னுடைய எழுத்துத் துறையையும் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார். அவ்வப்போது சில நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிதை அறியக்கூடியதாக இருக்கிறது. இவரது படைப்புக்களின் எண்ணிக்கை இவரை ஒரு தனியான நூலகமாகவே காட்டி நிற்கின்றது. கூறப்போனால் இவர் தமிழ் இலக்கியப் படைப்புலகத்திற்கு கிடைத்த கிடைத்தற்கரிய ஒரு விலை மதிக்கப்படமுடியாதமுத்துஎன்பதில் ஐயமேகிடையாது. இவர் இன்னும் இன்னும் பல வெவ்வேறுவிதமான படைப்புக்களை வெளியடுவதன்மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு தன்னுடைய பங்களிப்பை தடையின்றி நல்கவேண்டுமென்ற கோரிக்கையோடு இவரை வாழ்த்தி இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.  

பின்னிணைப்பு
இங்கு இவரது தொகுப்புகளில் உள்ளடக்கப்பட்ட தனி ஆக்கங்களின் பட்டியலை பயன்பெறுவோரின் தேவையை கவனத்தில்கொண்டு வேறாக தந்திருக்கிறேன்.
1.            மகாராஜாவின் ரயில் வண்டி
1.            மகாராஜாவி; ரயில் வண்டி 2. நாளை 3. தொடக்கம் 4. ஆயள் 5. விருந்தாளி 6. மாற்று 7. அம்மாவி; பாவாடை 8. செங்கல் 9. கடன் 10. பூர்வீகம் 11. கறுப்பு அணில் 12. பட்டம் 13. ஐவேசு 14. எதிரி 15. ஐந்தாவது கதிரை 16. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் 17. கல்லறை 18. கொம்புளானா 19. ராகு காலம் 20. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும்
2.            அக்கா தொகுப்பு
1.            கடைசி கைங்கரியம் 2.  ஊர்வலம் 3. கோடைமழை 4. அழைப்பு 5. ஒரு சிறுவனின் கதை 6. அனுலா 7. சங்கல்ப நிராகரணம் 8. இருப்பிடம் 9. பக்குவம் 10. அக்கா 11.
3.            திகடசக்கரம் தொகுப்பு 1995
1.            பார்வதி 2. குங்குலிய கலய நாயனார் 3. பெருச்சாளி 4. மாற்றமா? தடுமாற்றமா? 5.வையன்னா கானா 6. குதம்பேயின் தந்தம் 7. செல்லரம்மான் 8. திகடசக்கரம் 
4.            வம்சவிருத்தி தொகுப்பு 1996
1.            துரி 2. ஒருசாதம் 3. கிரகணம் 4. விழுக்காடு 5. பீனக்ஸ் பறவை 6. முழுவிலக்கு 7. முடிச்சு 8. ஞானம் 9. சிலம்பு செல்லப்பா 10. வம்சவிருத்தி 11. பருத்தி பூ 12. வடக்கு வீதி
5.            வடக்குவீதி தொகுப்பு 1998
1.            எலுமிச்சை 2. குந்தியின் தந்திரம் 3. வசியம் 4. பூமாதேவி 5. யதேச்சை 6. கம்ப்யூட்டர் 7 ரி 8. உடும்பு 9. மனுதர்மம் 10. விசா 11. ஒட்டகம்
6.            குதிரைக்காரன் தொகுப்பு 2012
1.            குதிரைக்காரன் 2. குற்றம் கழிக்க வேண்டும் 3. மெய்க்காப்பாளன் 4. பாரம் 5. ஐந்து கால் மனிதன் 6. ஜகதலப்ரதாபன் 7. புளிக்கவைத்த அப்பம் 8. புது பெணண்சாதி 9. 22 வயது 10. எங்கள் வீட்டு நீதிவான் 11. தீர்வு 12. எல்லாம் வெல்லும் 13. மூளையால் யோசி 14. ஆச்சரியம் 15. கனகசுந்தரி
7.            கொழுத்தாடு பிடிப்பேன் 2013
இந்த கொழுத்தாடு பிடிப்பேன் தொகுப்பில் முத்துலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட 45 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த தொகுப்புக்கான கதைகள் மிகுந்த கருசனையோடு தெரிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளமையை தொகுப்பில் உள்ள கதைகளைப் படித்தால் புலப்படும். இத்தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள கதைகளாவன:
1. குதம்பேயின் தந்தம், 2. ஒரு சதம், 3. வம்சவிருத்தி, 4. வடக்கு வீதி, 5. பூமாதேவி, 6. யதேச்சை, 7. ஒட்டகம், 8. கொழுத்தாடு பிடிப்பேன், 9. அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை, 10. மொசு மொசுவென்று சடை வைத்த வெள்ளைமுடி ஆடுகள், 11. தாத்தா விட்டுப்போன தட்டச்சு மெசின், 12. போரில் தோற்றுப்போன குதிர வீரன், 13. பூமத்தியரேகை, 14. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை, 15. மகாராஜாவின் ரயில் வண்டி, 16. நாளை, 17. தொடக்கம், 18. ஆயுள், 19. விருந்தாளி, 20. அம்மாவின் பாவாடை, 21. கறுப்பு அணில், 22. எதிரி, 23. ஐந்தாவது கதிரை, 24. தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில், 25. ராகு காலம், 26. தாழ்ப்பாள்களின் அவசியம், 27. புவியீர்ப்புக் கட்டணம், 28. வேட்டை நாய், 29.புகைக்கண்ணர்களின் தேசம், 30. சுவருடன் பேசும் மனிதர், 31. பராமரிப்பாளர், 32. அமெரிக் காக்காரி, 33. குதிரைக்காரன், 34. மெய்க்காப்பாளன், 35. ஐந்து கால் மனிதன், 36. புளிக்கவைத்த அப்பம், 37. எங்கள் வீட்டு நீதவான், 38. தீர்வு, 39. எல்லாம் வெல்லும், 40. மூளையால் யோசி, 41.சூனியக்காரியின் தங்கச்சி, 42. நிலம் என்னும் நல்லாள், 43. ரயில் பெண், 44. ஓணானுக்குப் பிறந்தவன், 45. எலி மூஞ்சி
அ. முத்துலிங்கம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக