உலகத்த தமிழர் அறிந்திருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு சம்பவம்
இசையமைப்பாளர் டி. இமான் |
அண்மையில் ஒரு சம்பவகம்பற்றிய கற்கையின்போதுதான் இந்த சம்பவத்தை நான் அறிந்திருந்தேன். இதை உங்களுக்கு தெரியுமா என்ற தலைப்பில் பிரசுரிக்கலாமா என்று நினைத்தேன் பின்னர் வேண்டாம் தலைப்பை சற்று மாற்றி வித்தியாசமாக தருவோம் என முடிவெடுத்து மேற்காட்டியபடி தலைப்பிட்டேன்.
திரு. டி. இமான் அவர்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இது என்ன கேள்வி அவரை அறியாதவர்களுமுண்டா. தயவு செய்து நடிகர் மற்றும் தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி பற்றிதான் கேட்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.
இல்லை இவர் மற்றொரு இமான். இவரைப்பற்றி இசை ஆர்வம் மிக்கவர்கள் யாரிடம் கேட்டாலும் உடனடியாகவே கூறிவிடுவார்கள். ஆமாம் இவரை ஒரு இசையமைப்பாளராக மற்றும் பாடகராக அனைவருக்கும் தெரியும். இவர் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் பல பாடல்களை பாடியுமிருக்கிறார். இலங்கைத் தமிழர் சிலருக்கு தனது இசையில் பாடுவதற்கு வாய்ப்பளித்திருக்கிறார் லட்சுமி சிவனேஸ்வரலிங்கம் அவர்களுக்கு “செந்தூரா” என்ற பாடலை பாடுவதற்கு வாய்பளித்து அவரது திறனை உலகறிய வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் ஸ்ருதி பாலமுரளிக்கு நம்ம வீட்டுப்பிள்ளை என்ற படத்தில் வயலின் வாசிப்பதற்கு வாய்ப்பளித்திருக்கிறார்.
இவர் தமிழ் மீது பற்றுக்கொண்டு ஆற்றியிருக்கும் சப்தம் சந்தடியற்ற ஒரு மிகப்பெரிய உலகத் தமிழ் மக்கள் காலத்துக்கும் நினைவில் நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டிய விடயம் ஒன்று தான் இந்த சம்பவம். ரொறன்ரோ பல்கலைக்கழகம் தமிழ் இருக்கையை உருவாக்கும் பொருட்டும் அதை காலத்துக்கும் தக்க வைக்கும் பொருட்டும் நிலையான ஒரு தொகையை தமிழ் இருக்கை நிதியாக சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. தமிழ் இருக்கையின் அடையாளமாக இருக்கும் முகமாக ஒரு பாடலை உருவாக்க அதன் நிதிசேகரிப்பு பணியில் ஈடுபட்டோர் குழு தீர்மானித்தது. இந்த பாடல் நிதி சேகரிப்பு செயற்பாட்டை இலகுபடுத்துவதற்கும் இந்த செய்தியை உலகெங்கும் கொண்டுசெல்வதற்கும் இலகுவாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கைகொண்டிருந்தனர். பின்னர் பாடலுக்கு இசையமைப்பதற்காக நண்பர் ஒருவர் மூலம் இந்தக்குழு திரு டி. இமான் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அவர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அந்த பாடலுக்கான இசையை அமைத்து கொடுத்திருக்கிறார். இந்தப்பாடலின் வரிகளை திரு. யுகபாரதி அவர்கள் எழுதியிருக்கிறார். பாடலை சுப்பர் சிங்கர் திவாகர் அவர்கள் பாடிக்கொடுத்திருக்கிறார்.
பின்னர் இந்த குழு அவரிடம் நீங்கள் தான் கனடா வந்து இந்த பாடலை வெளியிட்டு வைக்கவேண்டும் எனக்கோரியிருக்கிறது. கனடா நாட்டிற்கு சென்று வருவதற்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடம் மற்றும் ஏனைய செலவுகள் என பெரும் செலவு தொகை தேவைப்படும் என்பது நான் சொல்லித் தெரியவேண்டுமென்பதில்லை இந்த தொகையை எப்படி திரட்டுவது என குழுவினர் யோசனையில் ஆழ்ந்தபோது திரு இமான் அவர்கள் அந்த செலவுகள் பற்றி ஏற்பாட்டு குழுவிடம் எந்த பேச்சும் இல்லாமல் தானே தனக்கான முழுச்செலவையும் செய்து கனடா சென்று பாடலை வெளியிட்டு வைத்திருக்கின்றாராம். இது ஒரு சாதாரண விடமாக யாரும் மறந்துவிட முடியாது ரொரன்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை இருக்குங்கால் எக்காலத்தும் மறத்தற்கரியதோர் மிகப்பெரும்செயலன்றோ இஃது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக