புதன், 10 ஜூன், 2020

இந்த ஆட்டத்தை நிறுத்து………!

















அசுரனாய் வந்து
ஆடினாய் எங்கும் நீ
கோரத் தாண்டவம்
கண்டங்கள் தாண்டி
வியாபித்தே காட்டினாய்
உன் ருத்ர தாண்டவத்தை
நெஞ்சிலே பயங் கொண்டு
ஒதுங்கினர் உலகோர்
வீட்டுக் கைதிகளாய்
தம் வாசஸ் தலங்களுக்குள்
அத்தனை மாந்தரும்
அரசாணை கூட
அதைத்தான் வேண்டிற்று
இயந்திரம் போலே
அவசர அவசரமாய்
ஓடிக் கொண்டிருந்த
மனித வாழ்க்கை
ஓய்வு கண்டது
ஒரு கணம் அல்ல
மாதங்கள் மூன்றையும்
கடந்து தாண்டி



உலகப் பொருண்மியம்
கட்டுண்டு போய்
ஆட்டம் கண்டிட
பிரபஞ்சம் மீளா
கலக்கத்தில் இன்று
ஆனாலும் நீ பல
வேண்டிய நலங்களை
கடந்து செல்ல முன்
தந்துவிட மறக்கவில்லை
உறவுகளோடு ஒன்றாக
பல நாட்கள்
குழந்தைகளோடு 
பெற்றோரும் உறவுகளும் 
கொஞ்சிப் பேசிட
கணவன் மனைவி
பேச மறந்தவைகள்
பலதும் பேசிட
மூவேளை உணவும்
வீட்டு சமையலாய்
சுவைக்க கிடைத்திட 
வழியானாய்
கெந்திப் பிடித்தலும்>
ஆடு புலி ஆட்டமும்
தாயக் கட்டையும்>
பாம்பும் ஏணியும்
கிட்டிப் புள்ளும்
கிளித்தட்டும் என்று
மறந்து போன
பாரம்பரிய விளையாட்டுக்கள்
மீண்டும் மீட்டிட
சிறந்த வாய்ப்பானாய்
அம்மியில் அரைத்தலும்
உரலில் இடித்தலும்
ஆடை துவைப்பதும்
விறகு வெட்டுவதும்
நீர் இறைத்தலும்
ஜிம்மை மறந்து
மீண்டும் அநேகரின்
உடற் பயிற்சியாகிட
வழி சமைத்தாய்
இந்த மாற்றங்கள்
அனைத்தும் உன்னால்
முன்னர் இருந்த
கொலைவெறிக் கோபம்
இவற்றால் இங்கு
(i)றந்து போனது
ஆனாலும் இந்த
ஆட்டத்தை நிறுத்து
கண்ணில் தெரியாத
கொராணாவே……! கொரோணாவே……!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக