வியாழன், 18 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை ஆரம்பித்தவர்

சேர்சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினல்

சேர். சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினல் இவர் இலங்கையில் திரைப்படத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர்தான்  “சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டட்” எனும் நிறுவனத்தை 1928 செப்டெம்பர் 29இல் ஆரம்பித்தவர். இந்த நிறுவனம் தற்போதும் இலங்கையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.
இவர் தான் இலங்கையில் 2வது சிங்கள மொழித் திரைப்படமாகிய “அசோகமாலா” என்ற திரைப்படத்தை 1947இல் தயாரித்தார். சிலோன் ஸ்ரூடியோஸ் என்ற கலைக்கூடத்தையும் இவர் நிறுவினார் நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்ல 1951இல் பிரித்தானிய அரசின் சேர். பட்டத்தையும் இவர் பெற்றார்.

இலங்கை யாழ் மாவட்டத்தின் அச்சுவேலி கிராமத்தில் சாழுவேல் வைரமுத்து கார்டினர் மற்றும் சாலமோன் பிள்ளை பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு 1899இல் பிறந்தார். புனித யுவானியார் (சென். ஜோண்ஸ் கொலேஜ்) கல்லூரியில் ஆரம்ப கல்வியையும் உயர் கல்வியை கொழும்பு சென் யோசப் கல்லூரியிலும் கற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக