திங்கள், 22 ஜூன், 2020

தமிழ் சுகமான ரசனை

வைகறைப் பொழுதுகளில்
குளிர் சூரியக்
கதிர்களின் தழுவல்களாக
என் மனவானில்
சிறகடித்து நினைவுகளாய்
உலா வந்த பூபாளங்களை

மலர்ந்து மணம் வீசி
என்னை போசித்த
தமிழின் சுவையை
இலக்கியச் சாரல்களை
நான் ரசித்த
ரசனையோடு விதைத்திருக்கிறேன்
உனக்கும் இன்னும் பல
தமிழ் ஆர்வலர்க்கும்
இதமான தெண்றலூடு
சுகமான மணம் வீச
சுவைத்துப் பார்
சுகமாக இருந்தால்
பகிர்ந்து கொள்
உன் உறவுகளும்
போசித்துக் கொள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக