புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இணைபிரியா உறவுகள்


வைகறைப் பொழுதில்

ஜன்னல் இடைவெளியில்

ஊடறுத்து என் முகம் வருடும்

இளஞ்சூட்டு ஒளிக்கீற்றுகள்

இதமாயென் காதருகில் 

ஓலைக்கீற்றுக்களின்

ஓசையொடு இசைமீட்டும்

இனிய தென்றல்

அந்த தென்றலோடு

மெல்ல மிதந்து வந்து

சுவாசத்தைப் புதுப்பிக்கும்

முன் முற்றத்து

மல்லிகையின் மலர்வாசம்

என் விசிலுக்கு

எசப்பாட்டு போடும்

வேப்பம் மரத்தடி

அணில் குஞ்சுகள்

இவர்களுடன் சேர்ந்து

தத்தித் தத்தி வந்து

பாட்டுக்கு பாட்டெடுக்கும்

சிட்டுக்களும் புனில் குஞ்சுகளும்

அழைப்புக்கு செவிசாய்த்து

ஹலோ ஹாய் சொல்லும்

தென்னம் பிள்ளையில்

கொட்டமைத்து

குஞ்சுடன் குடியிருக்கும்

செவ்வளையக் கிளிப்பிள்ளை

இருந்திருந்து கூ.. கூ... 

வெனக் கானமழைபொழியும் 

தொலை தூரத்தில்

துணையுடன் வாழும் 

குயில் அம்மா

சுற்றிச் சுற்றி என்

காலை வட்டமிட்டு

நன்றியுடன் வாலாட்டும்

என்செல்ல நாய்குட்டி

இவைகள் தான் இப்போது

என் இணை பிரியா

உறவுகள் இந்த உறவுகள்

ஒருபோதும் மனம்

மாறுவதில்லை


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

வரலாற்றுச் சுவடுகள்

 









வரலாற்றில்
மீண்டுமோர் தடவை
கிடைத்தற் கரிய
வாய்ப்பு இந்த
ஆற்றைக் கடப்பது
இங்கு நான்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
வரலாற்றுப் பதிவாகும்
சுவடுகளே
உள் மனசு
பேசிக்கொள்ள
பாதம் பக்குவமாய்
நகர்கிறது
மூட்டை முடிச்சுச்
சுமைகளை
தோள்களில் தாங்கியபடி

வியாழன், 25 ஜூன், 2020

தலையிழந்தும் கம்பீரமாக.......



நீண்ட
இடைவெளியின் பின்
முதல் பயணம்
இயற்கை ரசனைக்குள்
கண்களில் சிக்குண்ட
அந்தக் காட்சி
தலை சாய்ந்த
மொட்டை மரங்களாய்

திங்கள், 22 ஜூன், 2020

தமிழ் சுகமான ரசனை

வைகறைப் பொழுதுகளில்
குளிர் சூரியக்
கதிர்களின் தழுவல்களாக
என் மனவானில்
சிறகடித்து நினைவுகளாய்
உலா வந்த பூபாளங்களை

சனி, 13 ஜூன், 2020

தேடலில் கிடைத்த முத்து ஒன்று அப்பாத்துரை முத்துலிங்கம் - எழுத்தாளர்


அறிமுகம்



ஆழமான நீர் தடாகத்துக்கடியிலே உறுதியாக வேர் பதித்து சலனமின்றி நீரின் அசைவுகளோடு இலைகளால் நீச்சலடித்து மிதந்து பூஜை பீடத்திற்கு வைப்பதற்கென்றே பூத்த அந்த மலரைபோல உலகு பார்க்க மலர்ந்து தேவையுள்ள அனைவருமே தேடி ரசிக்கும்படியாக வாழ்ந்து தன் தாய்மொழிக்கு தரவேண்டிய கௌரவத்தை பல்வகைப்பட்ட வடிவங்களில் தன் எழுத்துக்களால் இன்றுவரை தூரத்து தேசத்திலிருந்து தந்துகொண்டிருக்கும் ஓர் சிறந்த எழுத்தாளர் பற்றியதே இந்த கட்டுரை.

யார் அந்த தூரத்து எழுத்தாளர்? அவர்தான் பல்வேறு நாடுகளிலும் தற்போது பலராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும், கௌரவிக்கப்படும் மற்றும் தேடப்படும் பல்வேறுபட்ட பல்சுவை எழுத்துக் கலைப் படைப்புக்களுக்கு சொந்தக்கார னாகிய திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் அவர்கள். 1980களில் இவரது வெளியீடாகிய “அக்கா” சிறுகதைத் தொகுப்பு படைப்பில் வெளியிட்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தததுண்டு. பின்னர் இவரது வெளியீடுகள் பற்றி அறியக்கிடைக்காததால் இவர் படைப்புகள் பற்றிய நினைவு மெல்ல மெல்ல மறந்து போயிற்று. அண்மையில் தமிழகத்தின் பிரபல மேடைப் பேச்சாளரும் பட்டிமன்ற விற்பன்னருமான மிகப் பிரபலமான திருமதி பாரதி பாஸ்கரன் அவர்களுடைய கண்ணதாசன் நிகழ்வுகளை மீட்டும் பாட்டுமன்றம் சார் பேச்சு நிகழ்வு ஒளிப்படம் ஒன்றை யூரியூப் (YouTube) இணையதள பகுதியில் பார்க்கக் கிடைத்தது. அதிலே தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய 5 எழுத்தாளர்களில் ஒருவராக திரு. அ. முத்துலிங்கம் என்ற கனடாவில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் பார்க்கப்படுகிறார் என்ற கருத்தை பாரதி பாஸ்கர் அவர்கள் முன்வைத்திருந்தார். இந்த தகவலே என்னை எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றிய நினைவுக்குள் மீண்டும் கொண்டுசென்றதோடு அவர் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் தேடவும் தூண்டியதோடு நின்றுவிடாமல் அவர்பற்றிய இந்த கட்டுரையையும் எழுதத் தூண்டியது என்று சொன்னாhல் அது மிகையாகாது. இவர் பற்றிய விடயங்கள் பலவற்றையும் இந்த கட்டுரையில் ஒரே பார்வையில் தரவேண்டும் என்ற ஆர்வத்தால் சற்று விரிவாகவே இந்த கட்டுரையை எழுத முயற்சித்திருக்கிறேன்.

புதன், 10 ஜூன், 2020

இந்த ஆட்டத்தை நிறுத்து………!

















அசுரனாய் வந்து
ஆடினாய் எங்கும் நீ
கோரத் தாண்டவம்
கண்டங்கள் தாண்டி
வியாபித்தே காட்டினாய்
உன் ருத்ர தாண்டவத்தை
நெஞ்சிலே பயங் கொண்டு
ஒதுங்கினர் உலகோர்
வீட்டுக் கைதிகளாய்
தம் வாசஸ் தலங்களுக்குள்
அத்தனை மாந்தரும்
அரசாணை கூட
அதைத்தான் வேண்டிற்று
இயந்திரம் போலே
அவசர அவசரமாய்
ஓடிக் கொண்டிருந்த
மனித வாழ்க்கை
ஓய்வு கண்டது
ஒரு கணம் அல்ல
மாதங்கள் மூன்றையும்
கடந்து தாண்டி

சனி, 6 ஜூன், 2020

தோப்போரம் இளைப்பாறலாம்

தொலை வானில்

பட்சியொன்று

சிறகடித்ததை

கண்ணுற்ற

உன் விழிகள்

இணையானது

துணையானது!

சஞ்சரிக்கிறேன் நான்

உன் சிறகுகளுடன்

நீண்ட நெடு வானில்.....!