ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்



புகைப்படம் சொல்வனம் இணையத்திலிருந்து - நன்றி சொல்வனம்.கொம்

அண்மையில் கவியோகி ரவீந்திரநாத் தாகூர் அவர்களது கீதாஞ்சலி கவிதை தொகுப்பு நூல் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதன் மீது ஏற்பட்ட ஆர்வ மேலீட்டால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைக்குமா என தேடினேன். மொழிபெயர்ப் புக்களும் அதனை மொழிபெயர்த்தோர் சிலரது விபரம் கிடைத்தது. பிரதியை பெறுவதற்காக முயற்சித்தபோது முதலில் எழுத்தாளர் சி. ஜெயபாரதன் அவர்களின் தொகுப்பு கிடைத்தது. அதனை படிக்க தொடங்கிய வேளை சொல்வனம் சஞ்சிகையில் வெளிவந்த 240ஆவது வெளியீடாகிய “வங்காள இலக்கிய சிறப்பிதழ்” பற்றிய அறிவிப்பைக் காணும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அப்போது அந்த வெளியீட்டிற்கு ஒரு கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடவே என்ன தலைப்பில் எழுதுவது என்ற கேள்வி உருவாகியது. கீதாஞ்சலியை படித்துக்கொண்டிருந்த எனக்கு அதைப்பற்றியே எழுதினால் சிறப்பாக இருக்குமே என்ற பதில் மனதில் தோன்றவே உடன் எழுத ஆரம்பித்துவிட்டேன். இவ்வாறு எழுதத்தொடங்கியதே “கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள் ஒரு தேடலும் பதிவும்” என்ற இந்த ஆக்கம். எனது தேடலின் விளைவாக அடுத்ததாக இரு மொழிப் புலவர் சோ. நடராசன் அவர்கள் மொழிபெயர்த்த “கீதாஞ்சலி” தமிழ் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கவே இந்த ஆக்கத்தை மேலும் சிறப்பாக எழுதுவதற்கான ஒரு தெம்பு கிடைத்தது.

படைப்பை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துக

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

முடிவுகள் தவறானால்….

சிறுகதை 



முடிவுகள் தவறானால்….

நேரம் காலை பத்து மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. காலை வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக முடித்து தனது இரண்டாவது பணியாகிய மதிய உணவுக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தாள் சரசு. இன்றைக்கு மதியம் கத்தரிக்காய் பிரட்டலும் பருப்பும் அப்பளப் பொரியலும் செய்தால் போதும் என்று மனதில் ஒரு திட்டத்தைப் போட்டுக்கொண்டு பொதியில் இருந்த சிவப்பு புளுங்கல் அரிசியில் மூன்று சுண்டு அரிசியை அரிக்கன் சட்டியில் போட்டு நீர் விட்டு கல் அரித்து அப்படியே நன்றாக கழுவி முற்கூட்டியே கழுவி வைத்திருந்த பானையில் போட்டு அடுப்பில் வைத்தாள்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

ஆண் அடிமை

பல லகரங்கட்டு
விலைபோகும்
ஆடவர்
ஆனால் வரனுக்கு
தட்சணை என்று
இதற்கு பெயர்
விலைபோனது

லயத்து மக்கள்



 கரங்கள் கால்கள்

தோறும்

உழைப்பின் தழும்புகள்

உடலெங்கும்

போட்டியிடும்

லீச் அட்டை

குருதிப்பசி யாறிய

காயங்கள்

நமக்கு இன்னும் விடியவில்லை



 சூரியக் கதிர்கள்
மேலெழுந்து
பரவுமுன் குளிரோடு
போராட்டம்
காலை கடன்
முடித்து
பணியிடம் நோக்கி
தோட்டத்துள்
நுளைகையில்
கற்பாறைகள் முட்புதர்களுடன்
போராட்டம்

தேனீ

பூஜைக்கு

வர முன்பே

இருட்டுக்

குழிக்குள்

முகம் புதைத்து

முகர்ந்த மகரந்தத்

தேனை சுவைத்து

மலர்களின்

கற்பை துவம்சம்

செய்த அரக்கன்

தேனீ

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

தன் படைப்புக்களால் இன்றும் வாழும் அணைந்தும் அணையாத இலக்கியச் சுடர்

 



தன் படைப்புக்களால் இன்றும் வாழும் அணைந்தும் அணையாத இலக்கியச் சுடர்

தமிழ் இலக்கிய உலகிற்கு மல்லிகை என்ற சஞ்சிகையை  1966 இல் ஆரம்பித்து 2012ஆம் ஆண்டுவரை தன்னந்தனியானாக தனது அயராத உழைப்பினால் இடைவிடாது எந்த தடையுமின்றி வெளியிட்டு வந்த எழுத்தாளரும் மல்லிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமாகிய திரு. டோமினிக் ஜீவா அவர்கள் கடந்த 28ஆம் திகதி (28 தை 2021) தனது இவ்வுலக பயணத்தை நிறைவுசெய்து தனது 93ஆவது அகவையில் கொழும்பு காக்கை தீவிலுள்ள தனது மகனின் இல்லத்தில் இறைபதமெய்தினார். இவரது இழப்பு தமிழ் படைப்புலகிற்கு மிப்பெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இவரின் பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் வைகறைத்தென்றல் வலைப்பூவும் நானும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.