ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

நமக்கு இன்னும் விடியவில்லை



 சூரியக் கதிர்கள்
மேலெழுந்து
பரவுமுன் குளிரோடு
போராட்டம்
காலை கடன்
முடித்து
பணியிடம் நோக்கி
தோட்டத்துள்
நுளைகையில்
கற்பாறைகள் முட்புதர்களுடன்
போராட்டம்கொழுந்தெடுத்து
முடியும் வரை
சுட்டெரிக்கும் சூரியனோடு
போராட்டம்
தோட்டத்துள் நுளைந்ததும்
குருதி உறிஞ்சும்
அட்டை அரக்கருடன்
போராட்டம்
லயங்களுக்குள் நாள்தோறும்
இடமின்றி போராட்டம்
மழை பெய்யும்
வேளையெல்லாம்
வெள்ளம் மண் சரிவோடு
போராட்டம்
நாளாந்தம் நாம்
போதாத ஊதியத்தால்
வறுமையோடு போராட்டம்
பெண் பிள்ளை
வயதானால்
வரண் தேடி
வர தட்சணைக்காய்
போராட்டம்
ஊதியம் அதிகரிக்க
தோட்ட நிர்வாகத்தோடு
போராட்டம்
போராட்டம் போராட்டம்
இப்படியே கழிகிறது
நம் காலமெல்லாம்
போராடியே இன்னும்
நாள் தோறும்
விடிந்தாலும்
நமக்கு இன்னும்
விடியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக