கரங்கள்
கால்கள்
தோறும்
உழைப்பின்
தழும்புகள்
உடலெங்கும்
போட்டியிடும்
லீச்
அட்டை
குருதிப்பசி
யாறிய
காயங்கள்
ஊர்
தெருவோரங்களில்
மழைக்கு
நீர் ஒழுகும்
கூரைகள்
சிதைந்த
குடிசைகள்
நலிந்து
மெலிந்த
வறுமை
அரக்கனின்
ஆட்சியில்
வதைபடும்
உடல்
இவர்கள்
சிந்தும்
வியர்வைத்
துளிகள்
பொல்லாத
முதலாளிகள்
பரம்பரையை
வாழ்விக்கும்
சொத்துக்
குவியல்களாக
இவர்களுக்காகவென்று
அவ்வப்போது
ஓங்கி
ஒலிக்கும்
கபடக்
கர்ச்சனைகள்
அவரவர்
அரசியல்
பயணத்தை
அலங்கரிக்க
இன்னும்
விடை தெரியா
ஆதாரமற்ற
மனிதர்களாய்
மண்ணிற்குள்
புதைந்துபோகும்
காலம்வரை
சகிப்போடு
பயணம்
செய்ய
லயங்களில்
அடைந்து
கிடக்கும்
கூலித்
தொழிலாள
லயத்து மக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக