மகா கவி சுப்ரமணிய பாரதியார் 101வது நினைவு தினம் (2022)
இன்று மகா கவி சுப்ரமணிய பாரதியாரின் நூற்றாண்டு தினம் (2021). இந்த நாளில் அவரை நினைவுறுத்தி இந்த படைப்பை இங்கு பதிவுசெய்கிறேன்.
பாரதியார் தந்த தமிழ் வாழ்த்து
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
– மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
தமிழ் வாழ்த்து
1. | வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழிய வே! | |
2. | வான மளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழிய வே! | |
3. | ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி இசைகொண்டு வாழிய வே! | |
4. | எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய வே! | |
5. | சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! | |
6. | தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நா டே! | |
7. | வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே! | |
8. | வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே! |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக