வெள்ளி, 8 மார்ச், 2024

பெண்ணினமே உன்னிடமே தீர்வுண்டு

 



மாதர் தம்மை இழிவு செய்யம்

மடமையை கொழுத்துவோம்

என்பார்

வாய்வார்த்தையாய் நிற்கும்

நடைமுறையில் காணோம்

பெண் விடுதலை வேட்கையோடு

கோசங்கள் முழங்கும்

மறுநாள்

ஊருக்கே ஊபதேசம்

என்றாகிப் போகும்

சிங்கப்பெண்ணே வீர முழக்கம்

வானை முட்டும் வீதிதோறும்

பெண் என்றால்

அடங்கிப்போக வேண்டும்

என்று வீட்டுக்குள்ளே 

உபதேசம் முடிந்தபாடில்லை

ஆணும் பெண்ணும் சமமென்பார்

சம உரிமை சட்டம்

சடுதியாக வேண்டுமென்பார்

அதிகாலை பொழுதுமுதல்

பின்னிரவு நேரம்வரை

வீட்டைச்சார்ந்த முழச்சுமையும்

அவள் தலையில் திணிப்பர்

நான் 

ஆண் என்பார்

வேலைப்பழு அதிகம் என்பார்

குடும்பப்பாங்கான பெண்ணாய்

இருப்பதே சமூகத்தின்

வழக்கென்பார்

என் சொல்வேன்

பெண்ணினமே

உன்னிடமே தீர்வுண்டு

விழித்தெழு

வீறுகொண்டெழு

ஐக்கியமாய் சமத்துவத்தை

சமூகம் முன் நிறுத்து


புதன், 31 ஜனவரி, 2024

பெண் சாதனையாளர் விருதுக்கான அழைப்பை விடுத்துள்ள இனிய நந்தவனம் இதழ்

 

பெண் சாதனையாளர் என்ற விருதுக்கு தகுதியுடையவர் என கருதினால் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.  நீங்கள் அடையாளம் கண்டவர்கள் இருப்பின் அவர்களை விபரங்களை அனுப்பி சிபார்சு செய்யலாம். மேலதிக விபரம் அறிவத்தலில் உள்ளது



வியாழன், 13 ஜூலை, 2023

கருப்பு வைரத்திற்கு கவிதாஞ்சலி

 கருப்பு வைரத்திற்கு கவிதாஞ்சலி




கருமை மேனியுடை செவ்விழியோனே

நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட நோக்கம் உடையோனே

ஆழ்ந்த நோக்குகளால் ஆயிரம் திருப்பங்கள் தந்தோனே

வெள்ளாடை பூண்டு இதயத்தை என்றும் களங்கமின்றி

கச்சிதமாய் காத்து காலமெல்லாம் மக்களுக்கான

நேர்மைச் சேவகனாய் வாழ்ந்து கழித்தோனே

மாணவச் செல்வங்கள் கல்வியில் உச்சம் தொட

இலவசமாகவே போசிக்கும் திட்டத்தில் வெற்றி கண்டவனே

உலகம் துறக்கையில் வெறும் கையனாய் விண்ணேற்றம் கண்டு

மக்கள் மனதில் இன்றும் வாழ்பவனே அஞ்சலிகள் உனக்கு 


வியாழன், 9 மார்ச், 2023

உண்மை விடுதலை காண்போம்

 



சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எழுதிய கவிவரிகள்


உண்மை விடுதலை காண்போம்


உதிரத்தால் உடல் நெய்து

மூச்சால் உயிர் ஈர்ந்து

பிறப்பெடுக்க

தன்னுயிர் பாராமல்

வழி திறந்து

சுதந்திரமாய் எங்கும்

சிறகடித்து பறக்கவிட்ட

பெண்மைக்கு 

விடுதலை கொடுத்தோம்

சுதந்திரம் கொடுத்தோம்

என்றும்

சிறகுகள் கொடுத்தோம்

என்றும் பாசாங்கு செய்து

பறக்க எத்தனிக்கையில்

கால்களில் 

இரும்புக் குண்டுகள் கொண்டு

விலங்கிட்டு

சுதந்திரத் தணிக்கை செய்து

இன்னமும் வீட்டுக்கைதிகளாய்

வைத்திருத்தல்

பெண் விடுதலையாமோ

விழித்தெழுக

உண்மை விடுதலை

காண்போம்


செவ்வாய், 24 ஜனவரி, 2023

சிவசங்கரியின் - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022

 தமிழ் நாட்டு இதழ்களில் 2022, நவம்பர் மாதம் வெளிவந்து, தெரிந்தெடுக்கப்பட்ட 69 சிறுகதைகளில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'தாயகக் கனவுடன்' என்ற சிறுகதை சிறந்த கதையாகத் தெரிவாகியுள்ளது.


சிவசங்கரியின் - குவிகம் சிறுகதைத் தேர்வு – நவம்பர் 2022  
சுரேஷ் ராஜகோபால்



 

எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய “தாயகக் கனவுடன்” – திண்ணை 27 நவம்பர் 2022  கதையை நவம்பர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்!

நவம்பர் மாதம் 2022ல் வந்த வாராந்திர, மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த சிறுகதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.

இந்த நவம்பர் மாதம் 2022ல், 69 சிறுகதைகள் தேர்விற்கு வந்தன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சுவை அல்லது சிறப்பம்சம் இருக்கின்றன. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தன. குறையாகத் தெரியவில்லை.

சனி, 31 டிசம்பர், 2022

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது உளம் நிறைந்த புது வருட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வருடத்தில் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிறந்த முயற்சியும் வெற்றி பெறவும் குடும்பத்தில் மகிழ்ச்சியை தரவும் இறை ஆசிகளை வேண்டிநிற்கிறேன்.




வியாழன், 22 டிசம்பர், 2022

ஜாதியம்

 


உள்ளே 

சிலருக்கு மட்டும் தான் இடம்

வெளியே பலருக்கிடம்

உண்டியல்கள் நிறையும்போது

தீட்டுக்கள் கிடையாது

பூஜையில் மட்டும்

தீட்டுக்கள் ஒவ்வாது


வறுமை



கோவில்கள் தோறும்

பாலாபிசேக படையலும்

தீபாராதனைப் பூஜைகளும்

குறைவில்லை

ஆம் குறைவில்லை

தாகமும் பசியும் நிறை

ஒட்டிய வயிறுகளும் தான்


எழுதுகோல்

 



அறிவுப் பெருக்கத்தை

மனச்சிறையில் கடிகொண்ட 

சிந்தனைகள் கற்பனைகளை

உலகுக்குணர்த்த

தன் குருதி முற்றிலும் ஈந்த

தற் கொடையாளி

திங்கள், 12 டிசம்பர், 2022

விண்ணும் விண் மீனும்

 



அழகழகாய் பல ஆயிரம் கோடி

வெளியாய் விரிந்து பரந்திருக்கும் விண்ணில்

கண் சிமிட்டி அசைபோடும் விண்மீன்கள்

அற்புதக் காட்சிதனை ஒவ்வொரு இரவிலும்

பசும் புற்றரையில் பாய் விரித்து

எதிர்காலக் கனவுகளை நமக்குள் மீட்டி

கனிவோடு கதைகள் பல பேசி

ரசித்தபடி கண்ணயரும் நாளுக்காய் காத்திருப்பேன்

வாராயோ என் வண்ணமயில் ஆரணங்கே


மாற்றுத் திறனாளிகள்


இயற்கை

இயற்கையின் கோரத் தாண்டவங்கள்

மனிதம் தெரியா மனிதர்கள்

கணப்பொழுதின் விபத்துகள்

காரணம் காணாத நோய்த்தாக்கங்கள்

இவற்றால்

உருவாகியவர்கள் இவர்கள்

அவர்கள் மனம் நோகா

பெயர் வேண்டுமென

புதையல் தேடுபவர்களாய்

வெள்ளி, 18 நவம்பர், 2022

உலக நாயகனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்திய தமிழ் திரைத்துறையில் மற்றொரு பரிணாமம்

 



அறிமுகம் (Introduction)

கமல் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த ஆனி மாதம் 3ஆம் திகதியன்று உலகம் பூராக உள்ள பல திரயரங்குகளில் வெளிவந்த திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளி வந்ததைத் தொடர்ந்து பல்வேறு விமர்சகர்களால் இப்படத்திற்கான திறனாய்வுகள் வெளியிடப்பட்டு வருவது நாம் அறிந்ததே. அவர்களைப்போலவே நானும் இந்தப்படத்திற்கான திறனாய்வு ஒன்றை எழுதும்பொருட்டு எடுத்த முயற்சியின் வெளிப்பாடே இந்த கட்டுரை. சாதாரணமாக ஒரு படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சில படங்களுக்குதான் ஏற்படும். அவ்வாறான எண்ணம் இந்தப்படத்தின் மீதும் ஏற்பபட்டதால் முதல் நாள் முதல் காட்சியை நீண்ட நாட்களுக்கு முன் முன் பதிவு செய்து பார்த்துவிட்டு வெளியே வந்தால் எப்படியும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதை உறுத்தி;கொண்டிருக்க இரண்டாவது மூன்றாவது தடவையும் பார்த்துவிட்டேன். இதற்கு முன் இப்படி அடுத்தடுத்து மூன்று தடவை எந்தப்படத்தையும் பார்த்ததில்லை. இதுவே முதற் தடவை ஆனாலும் இன்னும் ஒரு தடவை பார்க்கக் கிடைத்தால் பார்த்துவிடவேண்டும் என்ற ஆதங்கம் இன்னும் மனதில் உள்ளது. இந்த ஒரு விடயமே படம் எப்பேற்பட்டது என்பதை கட்டியம் கூறிவிடும். இருந்தாலும் இன்னும் சற்று ஆளமாக படத்திற்குள் புகுந்து படம் பற்றிய பல விடயங்களை ஆய்ந்து இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

தமிழுக்காய் தமிழ் அன்னை தந்த தவப்புதல்வா (அந்தாதி)

 



தமிழுக்காய் தமிழ் அன்னை தந்த தவப்புதல்வா (அந்தாதி)


தமிழுக்காய் தமிழன்னை தந்த தவப்புதல்வா

தவமிருந்தும் கிடைத்தற்கரிய பொக்கிசமே

பொக்கிசமாய் அருளிச் சென்றாய் புதுக்கவிகள்

புதுக்கவிகளுக்கு உயிர் கொடுத்த தீரன் நீ

நீ படைத்த கவிகளாலே தலை நிமிர்ந்தோம்

நிமிர்ந்த நடையோ டெதிரியை நாம் நேர்கொண்டோம்

நேர்கொண்ட பார்வையோடு ஞானச் செருக்கும்

செருக்கோடு பாக்களாலே அகிலம் ஆண்டோhம்

ஆண்டிடுவோம் உன் அருளால் காலமெல்லாம்

காலமெல்லாம் நிலைத்திருக்கும் உந்தன் புகழ்

உந்தன் புகழ் பிரபஞ்சத்தை ஆட்சிசெய்யும்

ஆட்சி செய்யும் நின் கவிகள் என்றும் தமிழை 


திங்கள், 5 செப்டம்பர், 2022

பாரதியின் பிறந்ததினத்தையிட்டு சில ஹைக்கூ கவிகள்

 





பாரதியின் பாடல்கள்
புரட்சித் தீயைக்கிளப்புகிறது
மாணவர் எழுச்சி

வறுமையுடன் பாரதி
பல கவிகளை படைத்தான்
ஆஸ்தான கவிஞன்

பாரதியின் பிறந்ததினம்
விமரிசையாக கொண்டாடப்படும்
சுதந்திர தினம்

பாரதி கவிகளால் புதுமைப்பெண்கள்
நாள்தோறும் பிறக்கிறார்கள்
வறுமையுடன் குழந்தைகள்

நகைச் சுவை கலந்த சில சம்பாசணைகள் 4

 

இளமையும் முதுமையும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனைகள் சில எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக




1

இளமை: என்னா பெரிசு உனக்கு தான் வயசு போச்சில்ல.. சும்மா போய் ஒரு மூலைல ஒக்காந்து ஓய்வெடுக்கிறத விட்டிட்டு எல்லா விசயத்திலயும் தலைய போட்டிக்கிட்டிருக்கே

முதுமை: நானும் உன்னைய போலதான் ஒரு காலத்தில உசாரா தான் இருந்தேன் இப்ப தான் கொஞ்சம் சோர்வாயிட்டன். அதுக்காக என்னோட உணர்வெல்லாம் போயிடுமா அது சாகும் மட்டும் இருக்கத்தானே செய்யும்