திங்கள், 12 டிசம்பர், 2022

மாற்றுத் திறனாளிகள்


இயற்கை

இயற்கையின் கோரத் தாண்டவங்கள்

மனிதம் தெரியா மனிதர்கள்

கணப்பொழுதின் விபத்துகள்

காரணம் காணாத நோய்த்தாக்கங்கள்

இவற்றால்

உருவாகியவர்கள் இவர்கள்

அவர்கள் மனம் நோகா

பெயர் வேண்டுமென

புதையல் தேடுபவர்களாய்

பல போராட்டங்கள் கடந்து

நாமம் சூட்டி மகிழ்ந்தோர்

வாழ்விற்கு ஆதாரமின்றி

வாழ்வதற்காய்

நாள்தோறும் போராடும்

இவர்களின் 

எதிர் காலக்கனவுகளுக்கு

சரியான நிரந்தரப் பாதை

உருவாக்கத் தவறியவர்கள் 

நாம் நாமே தான்

இவர்கள்

இந்த நிலையை 

தாமே தேடியவர்களல்ல

இன்னமும்

வாழ்ந்து முடிக்கும்வரை

இவர்கள் தேடுவது

தமக்கு மட்டும்

ஏன் இந்த நிலை

இவர்களை எப்போது விளங்கிக்கொள்வோம்

நாம் சூட்டிய

“மாற்றுத் திறனாளிகள்”

நாமம் மட்டும்

இறுதிவரை இவர்களோடு கூடவே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக