செவ்வாய், 21 ஜூலை, 2009

மூடப்பட்ட மனச்சிறைக்குள் நான்


உன்
உணர்வுகளை நான் 

ஆராதிக்கிறேன்
பகல் பொழுதில் 

நீ காணும் 
சொப்பனங்கள்
என் உள்ளத்து
உணர்வுகளை

கைதி

என்
மனக் கூட்டுக்குள்ளே
ஏனோ நீ
என்னும் எனது
நட்புக் கைதியாக

திங்கள், 20 ஜூலை, 2009

என் ஆசிரியை

திருமலை வளனார் பாடசாலை
நான்
நினைவுகளால் 
மீட்டுகிறேன் தினமும்
இன்றைய ஒவ்வொரு 
முயற்சியிலும் 
நான் 
வெற்றியோடு முன்னேறுகையில்
உன்  திருவுரு 
என்முன்னே என்னை 
ஆசித்துக்கொண்டிருக்கிறது
ன்னிடம் பயின்றோரின்
குளிர்மையான 
வாய் மொழிகளில்
நான் பூரித்துபோகிறேன்
அப்போதும்
என்னுள் ஓர் 
உணர்வு
உன் கரங்கள் 
என் கரம் கோர்த்து
எனை வாழ்த்துவதாக
அன்று 
உன்கரம் 
என்கரம் பற்றி
அகரத்தை 
உருவாகியதால் தான்
நான்
இன்று சிகரத்தில்
நீ எங்கிருக்கிறாயோ
அன்றேல் 
இப்புவியில்
என்றும் நீ என்னுள்
வியாபித்திருக்கிறாய்
என்ன........
யாரிவளோ என 
சிந்திக்கிறாயோ
இவள் யாருமல்ல
என்னில் 
கல்வி விதையை 
பயிரிட்ட
திருமலையின் சூசையப்பர் 
பாடசாலையின்
ஆசிரியை 
திரேசம்மா தான்

வியாழன், 2 ஜூலை, 2009

வேதமும் கீதையும்

நான் தட்டவில்லை
உன் இதயக் கதவுகள்
எனக்காய் திறந்து என்னை
உள் வாங்கிக்கொண்டன
கேட்கவில்லை
உன்னை எனக்கு தந்தாய்
தேடவில்லை
நீயாகவே கிடைக்கப் பெற்றாய்
சமுக அந்தஸ்தும்
உறவுகளின் பற்றும் உன்
முகத்திரையை மறைக்க
நீ
கீதையை எனக்கு
உபதேசம் செய்கிறாய்
எது இன்று உன்னுடையதோ
அது நாளை
வேறொருவருடையதாகும் என்று?........

திசை மாறிய பயணம்


உன்
கால் தடங்களை
தொடர்ந்தே
என்
பாதச் சுவடுகள்
நகர்ந்தன
அப்போது....
இந்தப் பாதையில் தான்
எமது பயணம்
ஆயுள் முழுக்க என்றாய் நீ....
ஏனோ
இன்று உனது
பயணத் திசையை
திடீரென மாற்றி விட்டாய்
இப்போது.....
எனது
பயணத் திசை
எதுவென்று அறியாது
தடுமாறுகின்றன
பாதங்கள்...........

திங்கள், 29 ஜூன், 2009

சுதந்திரக் காற்றை சுவாசிப்பது எப்போ

இப்போதெல்லாம்

நிலா வெளிச்த்திற்காய்

காத்திருக்கிறோம் கற்பதற்கு

மழை நீருக்காய்

காத்திருக்கிறோம்

குளிப்பதற்கும் குடிப்பதற்கும்

நீண்ட வரிசைகளில் நாம்

உணவுத் தட்டுகளோடு............

போறணைக்குள் அடுக்கப்பட்ட

விறகுகள் போல

இன்று எம் உறக்கம்

ஓடி உலாவுவது

நாலு பக்கம் எழுப்பப்பட்ட

முள் கம்பி வேலிகளுக்குள்

மட்டுமே.......

எப்போதுமே எமக்கு

காவல் காரர்கள்

ஆயிரத்துக்கும் அதிகம்

நாள் தோறும் இங்கு

ஏக்கத் தவிப்புகளோடு நாம்

எப்போது எமது

சொந்தங்களோடு சொந்த மண்ணில்

சுதந்திரக் காற்றை

சுவாசிப்போம் என்று............

ஆணாதிக்கம்


உல்லாசமாக
சிட்டுகளாய் பறந்த
காலம் போய்
குடும்ப வலைக்குள்
சிக்குண்டதால்
ஆணாதிக்க
அராஜகப் பிடிக்குள்
அகப்பட்டு மவுனித்து போனது
உன்
குரல் மட்டுமல்ல
உன்
பசுமையான வாழ்கையும் தான்
இந்த
சிறைக் கம்பிகளை
உடைத்தெறிந்து விடு
மீண்டும்
சுதந்திரப் பறவையாக
சிறகடிக்க.......

காதலின் சுகம்

காதலின்

முடிவுகள்கசப்பாகலாம்ஆனால்காதல் சுகமானதே

உன் ஆசிகள்

விடியல்

உன் நினைவுகளோடுதான்

விடிகிறது

உனது

ஸ்பரிசங்கள்தான்

நாள் முழுதும்

என்னை ஆசிக்கின்றது