வியாழன், 10 பிப்ரவரி, 2022

எங்கள் தாய் மொழி செம்மொழி வாழியவே

உலக தாய் மொழி தினத்தையொட்டி எழுதப்பட்ட எனது தாய்மொழி பற்றிய கவிதை



எங்கள் தாய் மொழி செம்மொழி வாழியவே

அகரமதில் ஆரம்பம் எங்கள் மொழி

ஆதியில் தோன்றிய மூத்த மொழி

இயல் இசை நாடகம் படைத்த மொழி

ஈசன் திருவாய் மலர்ந்த அமுத மொழி

உலகமெலாம் ஒலிக்கும் உலக மொழி

ஊர்கோ ளாயெங்கும் மிளிரும் மொழி

எத்திக்கும் ஏகாங்கம் எங்கள் மொழி

ஏற்றம் இறைத்திட ஏற்ற மொழி

ஐம்பெரும் காப்பியம் கண்ட மொழி

ஒன்றாரோ டொப்புரவு செப்பும் மொழி

ஓம் எனும் பிரணவம் மொழிந்த மொழி

ஒளசத மாயிரம் படைத்த மொழி

ஃ எனும் ஆயுதம் தரித்த மொழி

திக்கெட்டும் தித்திக்கும் இனிய மொழி

சங்கத் தமிழ் மொழி எங்கள் செம்மொழி

வாழிய வாழிய வாழிய வாழியவே

அவனியெலாம் என்றென்றும் வாழியவே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக