செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் 3

பரமபதம் (பாம்பும் ஏணியும்) சதுரங்கம் இரண்டும் சந்தித்தால் என்வெல்லாம் பேசிக்கொள்ளும் என்று சிந்தித்ததில் மனசில் பதிந்த சில சம்பாசணைகள் இங்கு உங்கள் ரசனைக்காக இங்கு பதிவு செய்கிறேன். சிரிப்புச் சக்ரா என்ற விருது இவ்வாறான சில பதிவுகளால் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி




1

பரமபதம்: ஏம்பா நீங்கள்ளாம் ரொம்ப வேஸ்டு

சதுரங்கம்: எதுக்கு அப்பிடி சொல்றே

பரமபதம்: எவ்ளோ ஆயுதங்களும் கவசங்களும் வாகனங்களும் இதெல்லாம் வச்சுக்கொண்டு தான் உங்க சண்டித்தனமெல்லாம் ஹாஹா

சதுரங்கம்: ஆமா அதெல்லாம் இருந்தாதானே எதிரிய சுலபமா வெல்லலாம்

பரமபதம்: ஹா..ஹா.. ஏய் நம்மள பாரு.. எதுவுமே இல்ல நம்ப பல்ல மட்டும் நம்பி எல்லா எதிரிகளையும் எதிர்க்கல்ல. அதுபோல நீயும் இருந்திட்டு போ.. இது வெக்கமா இல்ல உனக்கு உன்னோட பலத்த நம்பாம அதயெல்லாம் நம்பி இருக்கிறே

 

புதன், 10 ஆகஸ்ட், 2022

பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் (2)

 

பொன்னும் பெண்ணும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது சம்பந்தமான கற்பனைகளை பகடியாக உருவாக்க முனைந்ததில் கிடைத்த சில சுவாரஸ்யமான சம்பாசணைகள் இங்கு தருகிறேன். ரசிக்கக்கூடியதாக இருந்தால் அனுபவிப்பதோடு மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்



பொன்னும் (நகையும்) பெண்ணும்

1

பெண்: உனக்கு நகை என்னு பேரு வச்சது தப்பா போச்சு

பொன்: எதுக்கு அப்பிடி சொல்றே. உனக்கு பொறாமை போல

பெண்: போற வாற நேரமெல்லாம் என்னப்பாத்து நகைச்சுக்கிட்டே இருக்கே

பொன்: ஆமா நகைக்க தான் செய்வன் சும்மா பாத்திட்டு போறது தானே உன் வேலை

சனி, 6 ஆகஸ்ட், 2022

பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள்

 பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் 

வரவும் செலவும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும். வேறொரு நிகழ்வில் வழங்கப்பட்ட தலைப்பிற்கு என்னால் உருவாக்கப்பட் பகிடி கலந்த சிந்தனைகள் சில. பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வரவு செலவு



1

வரவு: உனக்கென்ன ரொம்ப ஏறிட்டே போறே மனசாட்சியே இல்லாம

செலவு: ஹ… ஹ… உனக்கு ஏற வக்கில்ல ஏன் எங்கிட்ட ஏற வாறே

வரவு: வேற யார்கிட்ட ஏற… நீ வரவுக்கேற்றாபல இருக்கலாமில்ல

செலவு: போ.. போ… ஒன்னோடு முதலாளி கிட்ட போய் கேழு என்னை ஏத்த சொல்லி

வரவு: நல்லா சொன்னே… வாரதும் போய் பிச்ச பாத்திரம் தான் தூக்கனும்

செலவு: ஆகா… அது நல்ல ஐடியாவாச்சே… ட்ரை பண்ணு நான் கௌம்புறேன்