ஜேம்ஸ் லில்லி உவைட் |
முன்பெல்லாம் அனேகமாக உதைபந்தாட்டத்திலேயே அனேகமான ரசிகர்கள் தமது ஆர்வத்தை வைத்திருந்தார்கள் பின்னர் படிப்படியாக இந்நிலை மாறி துடுப்பாட்டத்தில் (Cricket) நாட்டம்கொள்ள ஆரம்பித்து மற்ற விளையாட்டுக்களையெல்லாம் விட துடுப்பாட்டத்தை மட்டுமே ரசிக்குமளவுக்கு துடுப்பாட்ட (Cricket) மோகமும் வளர்ந்துவிட்டது. அத்தோடு அதன் ரசிகர் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்துவிட்டது என்றால் அது மிகையாகாது.
ஜேம்ஸ் லில்லி உவைட் என்பவரின் தலைமையில் 1876ஆம் ஆண்டு இங்கிலாந்தின்; துடுப்பாட்ட (Cricket) வீரர்கள் குளாம் ஒன்று அவுஸ்திரேலியாவிற்கு துடுப்பாட்டம் (Cricket) விளையாடச்சென்றது. அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 15ஆம் திகதி பங்குனி மாதம் 1877இல் இங்கிலாந்து அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் பரீட்சார்த்த துடுப்பாட்ட (Test Cricket) போட்டி ஒன்று இடம்பெற்றது இதுவே உலகின் முதலாவது இரண்டு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பரீட்சார்த்த துடுப்பாட்டப் (Test Cricket) போட்டித்தொடராகும். இந்தப்போட்டியில் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலிய அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணியின் வீரர் சாள்ஸ் பனர்மன் |
அவுஸ்திரேலிய அணியின் வீரர் சாள்ஸ் பனர்மன் என்பவர் 165 ஓட்டங்களை இந்த பரீட்சார்த்த போட்டியில் பெற்றார். இதனால் இவரே துடுப்பாட்ட பரீட்சார்த்த (Test Cricket) போட்டி வரலாற்றில் முதலாவது 100 ஓட்டங்களைப் பெற்ற வீரராக போற்றப்படுகிறார். அப்பொழுதிருந்தே இந்த இரு அணிகளும் தங்களை உலகில் துடுப்பாட்ட (Cricket) விளையாட்டின் ஜாம்பாவான்களாக கருதிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற நாட்டு வீரர்களை பெரிதாக கணக்கெடுக்காது துச்சாமாக கருதுகிறார்கள். இந்த இரு நாடுகளும் தமக்கிடையிலான துடுப்பாட்டப் (Cricket) போட்டிகளை ஒரு புனிதபோராகவே கருதுகின்றனர் இதனால் இந்த நாடுகளுக்கிடையிலான போட்டிகள் “சாம்பலுக்கான போர்” (“Battle for the Ashes”)
என்று வர்ணிக்கப்படுவதும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக