வறுமை ஒழிப்பிற்கு ஒன்று
அகதிகள் புனர்வாழ்வுக்கு ஒன்று
சிறுவர் பாதுகாப்புக்கு ஒன்று
மகளிர் மேம்பாட்டுக்கு ஒன்று
வயோதிபர் உதவிக்கு ஒன்று
எயிட்ஸ் தடுப்புக்கு ஒன்று
மனித உரிமைக்கு ஒன்று
சௌக்கிய மேம்பாட்டுக்கு ஒன்று
உளநலனுக்கு ஒன்று
இளையோர் அபிவிருத்திக்கு
மேலுமொன்று
……………………
இப்படி இன்னும் எத்தனை
எத்தனை ஸ்தாபனங்கள்
எல்லாம் இந்த
குவலயம் முழுக்க
பரந்தும் பரவியும்
வியாபித்து கிடக்கின்றன
வறுமை ஒளிந்தபாடில்லை
அகதிகள் புனர்வாழ்வு பெறவில்லை
சிறுவர் பாதுகாப்பாய் இல்லை
மகளிர் மறுமலர்சி
கண்டதாய் இல்லை
வயோதிபரிடத்து பெரிதாய்
ஏதும் மாற்றம் கிiடாது
எயிட்ஸ் அழிந்தபாடில்லை
மனித உரிமைகள் நிலைமை
முன்னையிலும் மோசமாய்
சௌக்கிய நிறுவனங்கள்
வளர்ந்த அளவுக்கு
சௌக்கியத்தில் வளர்ச்சியில்லை
உளநல நிலைமை
தற்கொலைகள் தெரிகரிப்பில் தெரிகிறது
இளையோர் முன்னேற்றம்
வேலை தேடுவதில்
ஒவ்வொரு பிரிவிற்கும்
வருடம் தோறும்
தின விழாக்கள் எங்கும்
அமர்க்களமாய் நடக்கிறது
ஐநாவின் பிரகடனங்கள்
காகித கதைகளாயும்
பிரபுக்களின் ஓசைகளாயும்
வருடந்தோறும் பல
கோடி மில்லியன்
டொலர்கள்
கரைவதில் மட்டும்
குறைவு இல்லை
இன்னும் எத்தனை
வறுமையின் பிரபுக்கள்
எதிர்காலத்தில் பிரசவிப்பரோ?....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக