#ஈரவலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
#ஈரவலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

"கம்பான்" பற்றி அறிந்துகொள்வோம்

"கம்பான்" பற்றி அறிந்துகொள்வோம் 


 கரைவலை
“கம்பான்” என்ற சொல்லை இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனேகமாக இதனோடு தொடர்புபட்டவர்களுக்கு இதை தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால் தொடர்பற்றவர்களில் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தவிர்ந்த ஏனையோர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. நான் கூட இந்த சொல்லை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. அண்மையில் தான் நான் இந்த சொல்லை அறிந்தேன். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சஞ்சிகையில் கட்டுரையொன்றை படிக்கின்ற போது இந்த சொல் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்மில் அநேகருக்கு சொல் அகராதிகளுடன் அதிகம் பரீட்சயமில்லை. சொல் அகராதிகளுடனான பரீச்சயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் இந்த சொல்லைப் பார்த்தபோது தான் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே ‘கம்பான்’ என்ற சொல்லானது ஒருவகையான கயிறைக் குறிக்கிறது. அனேகமாக கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களில் ஒரு பகுதியினர் ‘கரைவலை’ என்ற வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபடுகிறார்கள்.