பனை மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனை மரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கற்பகதரு

 














பசியால வாடேக்க
வாய்க்கு ருசியான
பழமானாய்
பனங்காய்ப் பணி யாரமானாய்
களைப்பால சோரேக்க 
தலை சாய்க்க
சுருண்டு தலையணையாய் 
நீயானாய்
இரவானால் கண்ணயர
ஆளளவு பாயானாய்
தாகம் எடுக்கயில
பதநீராகி குளிர்வித்தாய்
உடலுக்கு சக்திதர
போசாக்கு மாவானாய்
ஆழ் கிணற்றில்
நீர் மொள்க
பெரிய கடகமானாய்
மாரி மழைபெய்யேக்க
நீ நனைந்து கூரையானாய்
கோடை வெயிலடிக்கேக்க
நிழல்தரும் குடையானாய்
மனை வாசல் அழகாக்க
அலங்காரப் பொருளானாய்
விலங்கினின்று பயிர்காக்க
நாற்றிசையும் வேலியானாய்
பூரணை நாள் மகிழ்சிக்கு
ஒடியற் கூழானாய்
நண்பரோட களிப்புறேக்க
சோமபான கள்ளானாய்
விழாக்கள் சோபிக்க
தொங்கு தோ ரணமானாய்
ஊரூராய் ஓடேக்க
எம்முன்னே நீ நின்று
காவல் அரணானாய்
இப்படி எங்களுக்கு 
எல்லாமாய் நீ ஆனதால
உயிர் காக்கும் பயிரானாய்
கற்பகதருவானாய்


சனி, 25 ஜூலை, 2020

'கற்பகதரு' எனும் பனைவளம்

அறிமுகம்

ஆதி காலம்தொட்டு கற்பகதரு என்று அழைக்கப்படும் ஒரு பயிரினம் தான் இந்த பனை மரம். இது புல்லினத்தைச் சார்ந்த ஒரு பயிர் என்று ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆயினும் நாம் பனை மரம் என்றே தற்போது பொதுவாக அழைத்து வருகின்றோம். இதன் மூலமாக பல்வேறு வகையான பயன்களை பெறக்கூடியதாக இருப்பதாலும் பனையை போல் வேறு பயிர்களோ மரங்களோ அதிக பயனைத் தராதமையாலும் இதனை கற்பகதரு என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. எந்தவிதமான உள்ளீடுகளுமின்றி அதனுடைய ஆயுட் காலம் முழுவதும் பல்வேறு விதமான பயன்களை இது வழங்கிவருகிறது. ஆயுள் முடிந்த பின்னரும் இதனுடைய ஒவ்வொரு பாகமும் எந்தவிதமான கழிவுகளுமின்றி பெறுமதிமிக்க பயன்களை தர வல்ல ஒரு மரம் என்றால் அது மிகையாகாது. இதனுடைய ஆயுட்காலம் ஏறத்தாள 100 வருடங்கள் வரை இருப்பதோடு அதனைத் தாண்டியும் உயிர்வாழும் பனைகளும் உண்டு.