ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021
தேனீ
பூஜைக்கு
வர
முன்பே
இருட்டுக்
குழிக்குள்
முகம்
புதைத்து
முகர்ந்த
மகரந்தத்
தேனை
சுவைத்து
மலர்களின்
கற்பை
துவம்சம்
செய்த
அரக்கன்
தேனீ
வெள்ளி, 5 பிப்ரவரி, 2021
தன் படைப்புக்களால் இன்றும் வாழும் அணைந்தும் அணையாத இலக்கியச் சுடர்
தன் படைப்புக்களால் இன்றும் வாழும் அணைந்தும் அணையாத இலக்கியச் சுடர்
தமிழ் இலக்கிய உலகிற்கு ‘மல்லிகை’ என்ற சஞ்சிகையை 1966 இல் ஆரம்பித்து 2012ஆம் ஆண்டுவரை தன்னந்தனியானாக தனது அயராத உழைப்பினால் இடைவிடாது எந்த தடையுமின்றி வெளியிட்டு வந்த எழுத்தாளரும்
மல்லிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமாகிய திரு. டோமினிக் ஜீவா அவர்கள் கடந்த 28ஆம் திகதி (28 தை 2021) தனது இவ்வுலக பயணத்தை நிறைவுசெய்து தனது 93ஆவது அகவையில் கொழும்பு காக்கை தீவிலுள்ள தனது மகனின் இல்லத்தில் இறைபதமெய்தினார். இவரது இழப்பு தமிழ் படைப்புலகிற்கு மிப்பெரும் ஈடு செய்ய முடியாத இழப்பு. இவரின் பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும்
வைகறைத்தென்றல் வலைப்பூவும் நானும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஞாயிறு, 31 ஜனவரி, 2021
லச்சுமியின் கனவு கனிந்தது
லச்சுமியின் கனவு கனிந்தது
சூரியனின் கதிர்கள் மெதுவாக அந்த தகரக் கொட்டகை மீது இருந்த சிறிய துவாரங்கள் வழியாக உள்ளே நுளைந்து ஆங்காங்கே நிலத்தில் பட்டு தெறிக்கத் தொடங்கியிருந்தது. உள்ளே சூழ்ந்திருந்த இருள் மெதுவாக அகன்று வெளிச்சம் வர ஆரம்பித்தது. நாள்தோறும் இந்த மெல்லிய வெளிச்சம்தான் அவளை துயிலெழுப்பி விடும். இன்றும் அதேபோலவே ஓரிரு கதிர்கள் அவளது உடலை வருடவே சடுதியாக கண்விழித்து எழுந்தாள்.
ஐயய்யோ…. கனக்கா நேரம் அயந்து தூங்கிட்டனோ….
தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அவசர அவசரமாக எழுந்தாள் லச்சுமி.
சனி, 30 ஜனவரி, 2021
கவியோகியின் கீதாஞ்சலி ஒரு பாடல் - மொழிபெயர்ப்பு - இது ஒரு ஆரம்பம் மட்டுமே
![]() |
| வங்கக்கவி ரவீந்திரநாத் தாகூர் |
வங்கக் கவி தாகூரின் ‘கீதாஞ்சலி’ என்னையும் விட்டுவைக்கவில்லை. ஒரு தடவை பார்த்தவுடனேயே அதனை முற்றாக படித்து அதன் ரசத்தை சுவைத்து விடவேண்டும் என்ற ஆர்வத் தூண்டல் மேலோங்க மெல்லப் படிக்கலானேன். இடையிலே ஒரு ஆர்வம் இதன் தமிழை தேடலாமோ என்று. தேடினேன் கிடைத்தது. அதையும் படித்தேன். படிக்கும்போது மீண்டுமோர் நப்பாசை. இதனை நானும் மொழி பெயர்த்துப் பார்க்கலாமாவென்று. இது ஒரு விசப் பரீட்சை தான். இருந்தாலும் எனக்கு ஒரு குணம் ஒரு விடயத்தை முயற்சிக்க வேண்டும் என எண்ணினால் முயற்சித்துப்பார்துவிடுவேன். எல்லா விடயங்களிலுமல்ல. இந்த தூண்டுதல் என்னையும் மொழி பெயர்க்க வைத்தது. தவறாயின் பொறுத்துக்கொள்க. முயற்சி திருவினையாக்குமல்லவா? சிறப்பென கருதினால் ஊக்கம் தருக.
My song has put off her adornments.
She has no pride of dress and decoration.
Ornaments
would mar our union; they would
come between thee and me;
வியாழன், 28 ஜனவரி, 2021
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50வது ஆண்டு நிறைவையொட்டி அவரது தமிழ் இலக்கிய சேவைக்கான பங்களிப்பை பராட்டும் முகமாகவும் வாசிப்பு மற்றும் எழுத்துப் பழக்கத்தை ஊக்குவிக்கு முகமாகவும் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ ஒரு போட்டியை அறிவித்துள்ளது. மொத்தம் இலங்கை நாணயப்பெறுமதி ரூபா 110,000 பெறுமதியான 13 பரிசுகளை அறிவித்துள்ளனர் இந்த குழுவினர். இது நாவல் சிறுகதை திறனாய்வுப்போட்டியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை கீழே உள்ள விளம்பரத்தைப்பார்த்து அறிந்து கொள்ளுங்கள். எழுத்தார்வம் மிக்கவர்களே இப் போட்டியில் பங்குபற்றி நீங்களும் ஒரு வெற்றியாளராக மாறி பரிசிலை வெல்லுங்கள்.
நான் ரெடி…. நீங்க ரெடியா?......
வியாழன், 21 ஜனவரி, 2021
சிறுகதைகள் இணையத் தளத்திற்கு வாழ்த்துக்கள்
பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ‘சிறுகதைகள்’ இணையத்தளத்திற்கும் அதனது பிரதம ஆசிரியர், ஆசிரியர் குழாம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
1400ற்கும் அதிகமான எழுத்தாளர்கட்கு களம் அமைத்துக்கொடுத்து தமிழ் உலகிற்கு சிறந்த பணியினை ஆற்றி வருவது சாதாரணமான விடயம் அல்ல. அத்தனை எழுத்தாளர்களும் உங்களை நன்றியுடன் நினைவுகூருவர். உங்கள் தமிழ்பணி மூலமாக 11,200ற்கும் அதிகமான சிறுகதைகளை எழுதி அவற்றை வெளியிடுவதற்கு தங்கள் தளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்ளித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அது மட்டுமன்றி பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகள் 29 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் இலக்கிய ஆர்வலர்கட்கும் வாசகர்கட்கும் பல்வேறு வகையான அனைத்து படைப்புக்களையும் படிப்பதற்கு சிறந்த பாலமாக தங்கள் தளம் அமைந்திருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்கவும் மேலும் பல எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்கவும் அத்தோடு நின்றுவிடாது இன்னும் பல இலட்சக்கணக்கான தமிழ் இலக்கிய ஆர்வலர் வாசகர்கட்கு பாலமாக அமையவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
http://www.sirukathaigal.com/
நன்றி
த. நரேஸ் நியூட்டன்
வியாழன், 14 ஜனவரி, 2021
தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்
தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
திங்கள், 16 நவம்பர், 2020
சூரரைப்போற்று இலக்குகள் இல்லாது வாழும் நபர்களுக்கு ஒரு நல்ல படிப்பினை
திரைப்பட விமர்சனம்
பொதுவான விபரங்கள்
தயாரிப்பு : 2டி என்டர்டெயின்ட்மன்ட் மற்றும் சிக்கியா
என்டர்டெயின்ட்மன்ட்
பிரதான நடிகர்கள் : சூர்யா,
அபர்ணா பாலமுரளி, ஊர்வசி மற்றும் பரேஸ் ராவல்
இயக்குனர் : சுதா
கொங்காரா
இசையமைப்பாளர் : ஜி.
வி. பிரகாஷ்குமார்
வெளியீட்டு
திகதி :
12 கார்த்திகை 2020
அறிமுகம்
விமர்சனங்கள் அனேகமாக பல்வேறு விதமான படைப்புக்களுக்கும் பொதுவான ஒன்று. இது ஒருவகையான மீளாய்வு முறைமையே என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமாக தங்களது மீளாய்வை மேற்கொண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். ஒவ்வொரு ஆய்வாளர்களினதும் பார்வைக்கும் எதிர் பார்ப்புக்கும் ஏற்ப விமர்சனங்கள் வேறுபடுகின்றன. விமர்சனங்கள் எப்போதும் சாதக பாதக விளைவுகளைத் தோற்றுவிப்பதுண்டு. விமர்சனங்கள் வசைபாடுவதை அல்லது குற்றம் கண்டுபிடிப்பதை விடுத்து மாற்றங்கள் எவ்வாறு அமைந்தால் படைப்பாளரின் எதிர்கால படைப்புக்கள் மேலும் சிறப்பாக அமைய வழவகுக்கும் என்பதை சொல்லும்போது அது சிறந்த படைப்புக்களை வெளிக்கொணர்வதற்கு ஒரு ஊன்றுகோலாக அமையும்.
செவ்வாய், 22 செப்டம்பர், 2020
மன்மதக் கலப்பு
மன்மதக் கலப்பு
கங்குல் மெல்ல
கவியத் தொடங்கியது
அத்தத்தின் ஊடாக
நெடுந்தூரம் பயணித்த
களைப்பு நீங்க
சிற்றில் ஒன்று கண்ணில் படவே - அக்
குரம்பையின் வாயிலில்
உள்ளே நுளைந்தனர்
புன்னகை கமழும்
காந்த விழிகளால்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அவன் விரல் நுனிகள்
இதமான வருடல்களால்
அந்த யாழினை
மீட்ட தொடங்கியது
வதனங்கள் நெருக்கமாகி
மன்மதத்தின் அயில் பருக
அவள் அங்கமெல்லாம்
மோகம் மேலீட்டால்
அமைதியாய் நெளிந்தது
மறுகரம் அவள்
காழகம் கழைய
மன்மத அசும்பில்
புதைந்தது ஆண்மை
பொங்கியெழும் அலையாக
மோக நீர் முட்டிபோத
அடங்கியது தாகம்
அல்கள் தோறும்
இவ்வின்பம் கிடைத்திலதோ
எனும் ஏக்கம் மேலோங்க
இதனால் நான்
கவ்வைக்காளாகி விடுவேனோ
என்ற ஓர்வுக் குழப்பத்துடன்
அந்த இறுக்கப் பிணைப்பில்
உணர்வுகள் அடங்க
ஆழ்ந்த உறக்கத்தில்
அமிழ்ந்து போயினர்
அதிகாலை கண் விழிக்கையில்
சிந்திக் கிடந்த
மதன வாடை நோக்கி
- தமிழ் பாணன்-
திங்கள், 21 செப்டம்பர், 2020
சிவராசுவின் தீர்ப்பு
வெள்ளி, 11 செப்டம்பர், 2020
ஆறு
முகம் கறுத்து
அழுத
வானம்
சொரிந்த
கண்ணீர்த்
துளிகள்
வரைந்த
கிளைக்
கோடுகள்
சங்கமித்த
சந்தியில்
திரண்டு
புரண்டோடிய
வெள்ளப்பெருக்கு
கவிதை மொழி
காதலித்தோர்க்கு
மட்டும்
புரிந்த
ஒரே
மொழி
அதன்
இன்பத்திலும்
துன்பத்திலும்
வெற்றியிலும்
தோல்வியிலும்
கவிதையின் உச்ச வலி
எழுது கோல்
முனை
கவிதையின்
கடைசி
வரியை
எழுதும்
போது
தான்
கவிதை
வலியின்
உச்சத்தை
கண்ணீர்
கவலையின்
வெளிப்பாடு
பிரிவின்
புறப்பாடு
ஆனந்தத்தின்
ஈரலிப்பு
உணர்ச்சியின்
தூறல்
கோபத்தின்
பெருக்கெடுப்பு
கண்ணீர்









