இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை
“சத்திய வேத பாதுகாவலன் (“The Catholic Guardian”) என்பது இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க சமயத்தின் பரப்புரைக்கான பத்திரிகையாகும். இது 1876ஆம் ஆண்டு மாசி மாதம் 19ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது தமிழ் கத்தோலிக்க பத்திரிகை ஆகும். ஆரம்பத்தில் “சத்திய வேத பாதுகாவலன்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுவந்த இந்தப்பத்திரிகை பின்னர் “பாதுகாவலன்” என்னும் பெயரில் பெயர் மாற்றப்பட்டு வெளிவந்தது. இந்த பத்திரிகையானது ஆரம்பத்தில் இரண்டு
