வியாழன், 23 ஜூன், 2022

போட்டியில் பங்குபற்றிய நூல்கள் சார் பகிர்வு கலந்துரையாடல் நிகழ்வு

 போட்டியில் பங்குபற்றிய நூல்கள் சார் பகிர்வு கலந்துரையாடல் நிகழ்வு



யாசகன் செப்புகிறான்




 யாசகன் செப்புகிறான்

இல்லை என்பதைத் தவிர

என்னிடம்

வேறேதும் இல்லை

உண்டு என்று சொல்வதாயின்

இல்லையென்பதே உண்டு என்பேன்

நான் உன்னிடம் யாசகத்திற்காய்

என் கைகளையேந்துகையில்

நீ இல்லை 

என்பதைத்தானே பகர்கிறாய்

இங்கு எனக்கும் உனக்கும்

வேற்றுமை யாதோ


திங்கள், 20 ஜூன், 2022

பணி ஓய்வு

 பணி ஓய்வு




இத்தனை காலம் 

கரங்களுக்கு ஆதாரமளித்த மேசை

என்னை சுமந்த நாற்காலி

என் கோவைகள் சுமந்த றாக்கை

பதிவுகளை தன்னகத்து வைத்திருந்த கணணி

சேர்ந்து பயணித்த பணியாளர்

கட்டளைகள் பிறப்பித்த

மேல் நிலை அதிகாரி

வெள்ளி, 17 ஜூன், 2022

எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏதாவது உதவுங்கள்

 எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏதாவது உதவுங்கள். பிரான்ஸ் ஜனாதிபதியிடம் இலங்கைச் சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்

மேகா சந்திரகுமார்


இலங்கை வடமானிலத்தின் தமிழ் பெண்ணான மேகா சந்திரகுமார் பிரான்சில் வசித்து வருகிறார். இவர் அண்மையில் பிரான்சில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கணிதப்பரீட்சையில் தோற்றியிருந்தார். இந்தப் பரீட்சையில் இவர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மிகப்பெரும் சித்தியை அடைந்து எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரருடைய இந்த சாதனையை கௌரவிக்கும்பொருட்டு  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Immanuel Macron) அந்த மாணவியை அழைத்திருந்தார். அங்கு சென்றிருந்த மேகா சந்திரகுமாரிடம் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்ன பரிசு வேண்டும் எனக்கூறுங்கள் என வினவியிருக்கிறார். அவருக்கு பதிலளித்த மேகா 'நீங்கள் எனக்கு பரிசளித்தால் நானும் எனது குடும்பமும் மட்டுமே மகிழ்சியடைவோம். ஆனால் தற்போது எனது நாட்டு மக்கள் உணவிற்காக பெரும் கஸ்டப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக ஏதாவது உதவி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.

இவரது கோரிக்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சாதகமான சமிக்ஞையை காட்டியுள்ளதாக தெரிகிறது. இதன்பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதியால் வழங்கப்படவிருக்கும் பரிசு மிக விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளதாக நம்பத் தகுந்தவர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. சின்னஞ்சிறு வயதில் தனது நாட்டு மக்கள் மேல் இத்துணை அதீத அன்பு வைத்திருக்கும் மேகாவிற்கு எனது வாழ்ததுக்களும் ஆசிகளும் உரித்தாகட்டும்

சனி, 11 ஜூன், 2022

பெண்


 

பெண்

பெண் என்றால்

ஏன் உன்னிடம்

இத்தனை சலனம்

இத்தனை குழப்பம்

இத்தனை தடுமாற்றம்

அவளை நீ ஏன் இன்னும்

சரியாக இனம்காண மறுக்கிறாய்

வெள்ளி, 10 ஜூன், 2022

விடுப்பு

 விடுப்பு



சுழன்று கொண்டிருக்கும்

காலச் சக்கரத்தில்

எத்தனை விதம் விதமான

விடுப்புக்கள் உங்களுக்கு

உங்கள் தொழில் கூடங்களில்

சாதாரண விடுப்பு, பண்டிகை விடுப்பு

சுகயீன விடுப்பு, வருடாந்த விடுப்பு

விடுப்புக்கு விடுப்பு என்று

எத்தனை விடுப்புகள்

புதன், 8 ஜூன், 2022

எழுத மறந்த கவிகள்

 



எழுத மறந்த கவிகள்

பனிக் குளிரில்
அணைத்தபடி தூங்கத் தவறியது
கோடைப் பௌர்ணமியில்
நிலா பார்த்து உறங்க மறந்தது
மாரிக் கடும் மழையில்
கைகோர்த்து நீரோடு 
விளையாடத் தவறியது
கல்லூரி நாட்களில்
உன் அருகமர்ந்து
கற்க மறந்தது
ஓடும் ரயிலில் ஒன்றாய்
உறங்கலிருக்கையில்
பயணிக்க மறந்தது
நீர் வீழ்சியொன்றில்
நனையாமல் போனது
இனியொருமுறை இவை 
நிகழத்தான் கூடுமோ
கடந்து வந்த
வாழ்க்கை பயணத்தில்
நான் எழுத மறந்த
கவிகள் இவை

புதன், 27 ஏப்ரல், 2022

கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.

 

அண்மையில் கனடாவில் இடம் பெற்ற கனடா சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றிய இந்தப்பதிவு "கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின்" தலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்களால் என்னுடன் பகிந்துகொள்ளப்பட்டது. அன்பு கனிந்த வாசகர்கள் நிகழ்வு பற்றி அறிந்துகொள்ளும்பொருட்டு என்னால் வைகறைத்தென்றல் பக்கத்தில் பகிரப்படுகிறது. பதிவை பகிர்ந்துகொண்ட குரு அரவிந்தன் அவர்களுக்கு எனது நன்றிகள் 

கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.

 


‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் அதனைப் பாராட்ட வேண்டும்’ இவ்வாறு சென்ற ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி 2022 கனடாவில் இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

 அண்மையில் நான்கு எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றியதான இணையவெளிக் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் பற்றிய சுலோச்சனா அருண் அவர்களால் படைக்கப்பட்ட கட்டுரை இங்கு ஆய்வாளர்களிற்கு நன்மை பயக்கலாம் என்ற நோக்கத்தில் பதிவிடப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் சுலோச்சனா அருண் அவர்களுடையதே எந்த மாற்றமும் இன்றி பிரசுரிக்கப்படுகிறது.



இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

 சுலோச்சனா அருண்

சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி சு.குணேஸ்வரன், குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி முனைவர். கோவிந்தராயூ (இனியன்), சாத்திரியின் ‘அவலங்கள்’ பற்றி தானாவிஷ்ணு, சயந்தனின் ‘பெயரற்றது’ பற்றி ந.குகபரன், ஆகியோர் உரையாற்றினார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு இதுபோன்ற மிகச்சிறந்த சிறுகதை வடிவங்களைத் தமிழில் உருவாக்கித் தந்த எழுத்தாளர்களையும், இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்து நடத்திய எழுத்தாளர் அகில் அவர்களையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள். சிலர், தமிழ் இலக்கியம் இன்னும் செழித்து வளர, இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம் பெறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.

தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துக


திங்கள், 7 மார்ச், 2022

எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல்

 




எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல்

அறிமுகம்

ஐம்பதாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி மற்றும் மகாஜனாக்கல்லூரிகளின்; பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 10 பிப்ரவரி, 2022

எங்கள் தாய் மொழி செம்மொழி வாழியவே

உலக தாய் மொழி தினத்தையொட்டி எழுதப்பட்ட எனது தாய்மொழி பற்றிய கவிதை



எங்கள் தாய் மொழி செம்மொழி வாழியவே

அகரமதில் ஆரம்பம் எங்கள் மொழி

ஆதியில் தோன்றிய மூத்த மொழி

இயல் இசை நாடகம் படைத்த மொழி

ஈசன் திருவாய் மலர்ந்த அமுத மொழி

உலகமெலாம் ஒலிக்கும் உலக மொழி

தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு

தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு



காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும் அவை சார் வெளியீட்டு நிகழ்வுகளையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுள் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய வெளியீடுகளில் நூல் வெளியீடுகள் முக்கிய இடம்பெறுகின்றன. நூல் வெளியீடுகளில் பல தரப்பினரும் அழைப்பிற்கு அமைவாக கலந்துகொள்வதுண்டு. அந்த வகையில் அண்மையில் எனக்கும் ஒரு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எனது மனதில் பதிந்த சில விடயங்களை வைத்துக்கொண்டு நூல் வெளியீடுகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் பொருட்டு இந்த ஆக்கத்தை படைத்துள்ளேன்.

வியாழன், 13 ஜனவரி, 2022

தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள்

உலகம் பூராவும் வாழும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தைத்திருநாளோடு கூடி வரும் வருடம் முழுவதும் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து அமைதியும் சமாதானமும் திளைத்தோங்க வேண்டுமென வாழ்துகிறேன். 

நரேஸ்



ஞாயிறு, 2 ஜனவரி, 2022

நமக்கு இன்னும் விடியவில்லை

 இனிய நந்தவனம் இதழில் வெளிவந்த எனது கவிதை ஒன்று உங்களுக்காய் இங்கே பதிவிடுகிறேன். நன்றி இனிய நந்தவனம் மாத இதழ்.




வியாழன், 2 டிசம்பர், 2021

ஹார்வார்ட்' பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்’ தமிழ் வளர்ச்சிக்கான இன்னொரு வடிவத்திலான முயற்சியே!

 


அண்மையில் பதிவுகள் இணையத்தளத்தில், கூவாமல் கூவும் கோகிலம் என்ற தலைப்பில், குயில் என்ற பெயரில் எழுதியுள்ள படைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தப்பதிவு எனக்கு சற்று ஆச்சரியத்தை தந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் தமிழ் ஆர்வலராகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். அதனால் தனது மனதில் பட்டதை பதிவு செய்திருக்கிறார். அந்தப்பதிவின் தலைப்பு ‘ஹார்வார்ட் பல்கலைக்களகத் தமிழ் இருக்கையும், மொழி வளர்ப்பும்’ என்பதாகும். இந்தப்பதிவின்மூலம் எனக்குள் எழுந்த கேள்வி இவர் பிறநாட்டு பல்கலைக்களகங்களில் தமிழுக்கான இருக்கைகள் அவசியமற்றது என சொல்லவருகிறாhரா என்பது தான்.