புதன், 29 ஜூலை, 2020

சென்னையில் மேடையேறிய முதல் இலங்கைத் தமிழ் நாடகம்

சென்னையில் மேடையேறிய முதல் இலங்கைத் தமிழ் நாடகம்



ஒரு காலப்பகுதியில் மேடை நாடகங்கள் இலங்கையில் கொடிகட்டிப்பறந்தது. தென் பகுதியில் சிங்கள நாடகங்களும் வடக்கு கிழக்கில் தமிழ் நாடகங்களும் பிரபல நாடக தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு சிறந்த நாடக கலைஞர்களின் பங்களிப்போடு மேடையேற்றப்பட்டு வந்தன. தென் பகுதி சிங்கள நாடகங்களுக்கு இணையாக வடக்கு கிழக்கின் தமிழ் நாடகங்களும் சளைக்காமல் உருவாகி வந்தன் அறுபதுகளில் சற்று முன்னேற்றம் கண்டிருந்த தமிழ் நாடக மேடையேற்றங்கள் காலத்துக்கு காலம் மெருகேற்றப்பட்டு நாடக பாரம்பரிய வடிவங்கள் மாற்றம் பெற்று முன்னேற்றம் கண்டு வந்தன. இந்த வகையில் முன்னேற்றம் கண்ட தமிழ் நாடகங்கள் தமது சொந்தப்பிரதேசங்களில் மாத்திரமன்றி தென் பகுதியிலும் மேடையேற்றப்பட்டன.

இவ்வாறு வடபகுதியில் நாடகக் கலையை வளர்பதில் முன்நின்று தமது பங்களிப்பை வழங்கியவர்கள் பலர் அவர்களுள் ஒருவர்தான் திரு. வாசகர் அவர்கள். பல நாடகக் கலைஞர்களை உத்வேகமளித்து உயர் நிலைக்கு கொண்டு சென்ற பெருமையில் இவரது பங்கு மிகப் பெரியது என்றால் மிகையாகாது. கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடுடைய சொர்ணலிங்கம் அவர்களுக்கு அடுத்த படியாக இலங்கைத் தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சிபற்றி அதிகம் சிந்தித்தவர்களில் கே. எம். வாசகர் முக்கியமானவர். நாடக வடிவங்களில் மாற்றம் உருவாக்கப்பட்டு எமக்கே உரிய தனித்துவாமான நாடக வடிவம் உருவாக்கப்பட வேண்டும் என்ற அவாவும் இவரிடத்தில் இருந்தது. இவரது தயாரிப்பிலும் நெறியாள்கையிலும் உருவாக்கப்பட்டதுதான் “நீ இல்லையேல்” என்ற மேடை நாடகம். கே.எம். வாசகர் அவர்களின் இந்த “நீ இல்லையேல்” என்ற மேடை நாடகமே முதன் முதலில் சென்னை மாநகரில் மேடையேற்றப்பட்ட ஈழத் தமிழ் நாடகமாகும். இந்த நாடகம் சென்னையில் மிகவும் வரவேற்பைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.  அத்தோடு வாசகர் அவர்களால் தயாரித்து நெறியாழ்கை செய்யப்பட்ட இந்த நாடகம் சிங்கள மொழியில் “ ஒப நத்னம்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. செங்கை ஆழியான் எழுதிய “வாடைக் காற்று” நாடகத்தை திரைக் கதையாக எழுதியதின் முக்கிய பங்காளி என்ற பெருமையும் இவரையே சாரும்.


 தமிழ் பாணன்

தேர்தல்

பொழுது போக்கான

பேச்சுப் போட்டிக்கும்

கூட்டம் சேர்ப்பிற்கும்

வாக்குறுதி இறைப்பிற்கும்

வித விதமான

புகைப்பட காட்சிக்கும்

ஐந்தாடுக் கொருமுறை

கிடைக்கும்

சுதந்திரமான வாய்ப்பு

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

தென்னம் பிள்ளையாகி

எதையும் கொடுக்கத்

தயாரில்லை

ஆனால்

வாரி வாங்கத்

தயாராய் இருப்பதால்

அவர் மாப்பிள்ளை

 

மாப்பிள்ளை

பிழைப்பதற்கு

வரதட்சணை

கேட்கும் மா

அதனால்

மா-பிள்ளை


விண் மீன்







தூண்டில்

போட முடியாது

வலை

வீச முடியாது

புசித்துண்டு

பசியாற முடியாது

கைக்கெட்டாது

வாய்க்கும் எட்டாது

கடல் மீனல்ல

விண் மீன்

சனி, 25 ஜூலை, 2020

'கற்பகதரு' எனும் பனைவளம்

அறிமுகம்

ஆதி காலம்தொட்டு கற்பகதரு என்று அழைக்கப்படும் ஒரு பயிரினம் தான் இந்த பனை மரம். இது புல்லினத்தைச் சார்ந்த ஒரு பயிர் என்று ஆராட்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆயினும் நாம் பனை மரம் என்றே தற்போது பொதுவாக அழைத்து வருகின்றோம். இதன் மூலமாக பல்வேறு வகையான பயன்களை பெறக்கூடியதாக இருப்பதாலும் பனையை போல் வேறு பயிர்களோ மரங்களோ அதிக பயனைத் தராதமையாலும் இதனை கற்பகதரு என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. எந்தவிதமான உள்ளீடுகளுமின்றி அதனுடைய ஆயுட் காலம் முழுவதும் பல்வேறு விதமான பயன்களை இது வழங்கிவருகிறது. ஆயுள் முடிந்த பின்னரும் இதனுடைய ஒவ்வொரு பாகமும் எந்தவிதமான கழிவுகளுமின்றி பெறுமதிமிக்க பயன்களை தர வல்ல ஒரு மரம் என்றால் அது மிகையாகாது. இதனுடைய ஆயுட்காலம் ஏறத்தாள 100 வருடங்கள் வரை இருப்பதோடு அதனைத் தாண்டியும் உயிர்வாழும் பனைகளும் உண்டு.

திங்கள், 13 ஜூலை, 2020

உலகின் முதலாவது பரீட்சார்த்த துடுப்பாட்ட (Test Cricket) போட்டி

ஜேம்ஸ் லில்லி உவைட்
முன்பெல்லாம் அனேகமாக உதைபந்தாட்டத்திலேயே அனேகமான ரசிகர்கள் தமது ஆர்வத்தை வைத்திருந்தார்கள் பின்னர் படிப்படியாக இந்நிலை மாறி துடுப்பாட்டத்தில் (Cricket) நாட்டம்கொள்ள ஆரம்பித்து மற்ற விளையாட்டுக்களையெல்லாம் விட துடுப்பாட்டத்தை மட்டுமே ரசிக்குமளவுக்கு துடுப்பாட்ட (Cricket) மோகமும் வளர்ந்துவிட்டது. அத்தோடு அதன் ரசிகர் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

வெள்ளி, 10 ஜூலை, 2020

அதிகமான நாவல்களைப் படைத்த ஈழத்து தமிழ் எழுத்தாளினி

ந. பாலேஸ்வரி
அவ்வப்போது வெவ்வேறுவிதமான மிகவும் அவசியமிக்க மற்றும் ஒவ்வொரு தமிழ்பேசும் மக்களும் அறிந்திருக்கவேண்டிய விடயங்கள் என நான் கருதுபவற்றை சுருக்கமான கட்டுரைகளாக தொகுத்துத் தந்துகொண்டிருப்பது எனது எழுத்தை ரசிக்கும் நீங்கள் அறியாதவிடயமே அல்ல. அதுபோலவே தான் இந்த ஆக்கத்திலும் நான் ஒரு முக்கியமான நபரைப்பற்றி மிகச் சுருக்கமாக தர முயற்சித்திருக்கிறேன்.

புதன், 8 ஜூலை, 2020

உலகத்தமிழ் ஆராட்சி நிறுவன உதயம்

உலகளாவிய ரீதியில் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் அனேகமானவர்களுக்கு தமிழ் சார்பாக உருவாகி இயங்கிக்கொண்டிருக்கும் பல அமைப்புக்கள் பற்றி தெரியும். இவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு அமைப்புத் தான் உலக தமிழ் ஆராய்சி நிறுவனம் என்பதும் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதவேண்டும் ஏனெனில் அத்துணை பிரபல்யமானது இந்த அமைப்பு. இந்த அமைப்பானது 1964ஆம் ஆண்டு தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பல்வேறுபட்ட நாடுகளின் அறிஞர்களை இணைத்து அருட்திரு. சேவியர் நீக்கிலாஸ் ஸ்ரனிஸ்லாஸ் என்ற இயற் பெயர் கொண்ட தவத்திரு தனிநாயகம் என்ற உலகத்தமிழ் மக்களால் அறியப்பட்ட அடிகளார் அவர்களால் உருவாக்கப்பட்டது.