திங்கள், 31 ஆகஸ்ட், 2020

குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று

பெண் இலக்கிய படைப்பாளினி பத்மா சோமகாந்தன்

அறிமுகம்

“கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக”

எனும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கொப்ப தமிழ் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர்களாக வலம் வந்து பல படைப்புக்களை தமிழ் வளர்ச்சிக்காய் தந்த பல எழுத்தாளர்கள் பற்றி யாம் அறிவோம். இவர்களுட் பலர் இவ்வுலகை நீத்தோராகிவிட்ட அதேவேளை இன்னும் பலர் வாழும் எழுத்தாளர்களாக பல்வேறு விடயங்களை படைத்து தமிழுலகிற்கு ஈந்து கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வாறு படைப்புலகில் இலுக்கும் எழுத்தாளர்களுள் பலர் பெண் படைப்பாளிகாளாக மிகச்சிறந்த பல படைப்புக்களை தந்து சாதனை படைத்திருக்கிறார்கள் பலர் சாதனைகளை இன்னமும் படைத்து வருகின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சாதனை படைத்து வரும் பெண் படைப்பாளர்களுள் மிகப்பிரபல்யமான அதேவேளை தமிழ் உலகால் வியந்து பராட்டப்படும் மற்றும் கௌரவிக்கப்படும் தனித்துவமான ஒரு பெண் படைப்பாளிதான்பத்மா சோமகாந்தன்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

இணைபிரியா உறவுகள்


வைகறைப் பொழுதில்

ஜன்னல் இடைவெளியில்

ஊடறுத்து என் முகம் வருடும்

இளஞ்சூட்டு ஒளிக்கீற்றுகள்

இதமாயென் காதருகில் 

ஓலைக்கீற்றுக்களின்

ஓசையொடு இசைமீட்டும்

இனிய தென்றல்

அந்த தென்றலோடு

மெல்ல மிதந்து வந்து

சுவாசத்தைப் புதுப்பிக்கும்

முன் முற்றத்து

மல்லிகையின் மலர்வாசம்

என் விசிலுக்கு

எசப்பாட்டு போடும்

வேப்பம் மரத்தடி

அணில் குஞ்சுகள்

இவர்களுடன் சேர்ந்து

தத்தித் தத்தி வந்து

பாட்டுக்கு பாட்டெடுக்கும்

சிட்டுக்களும் புனில் குஞ்சுகளும்

அழைப்புக்கு செவிசாய்த்து

ஹலோ ஹாய் சொல்லும்

தென்னம் பிள்ளையில்

கொட்டமைத்து

குஞ்சுடன் குடியிருக்கும்

செவ்வளையக் கிளிப்பிள்ளை

இருந்திருந்து கூ.. கூ... 

வெனக் கானமழைபொழியும் 

தொலை தூரத்தில்

துணையுடன் வாழும் 

குயில் அம்மா

சுற்றிச் சுற்றி என்

காலை வட்டமிட்டு

நன்றியுடன் வாலாட்டும்

என்செல்ல நாய்குட்டி

இவைகள் தான் இப்போது

என் இணை பிரியா

உறவுகள் இந்த உறவுகள்

ஒருபோதும் மனம்

மாறுவதில்லை


இன்னும் பிரசவிக்கும் வறுமையின் பிரபுக்கள்

 

வறுமை ஒழிப்பிற்கு ஒன்று

அகதிகள் புனர்வாழ்வுக்கு ஒன்று

சிறுவர் பாதுகாப்புக்கு ஒன்று

மகளிர் மேம்பாட்டுக்கு ஒன்று

வயோதிபர் உதவிக்கு ஒன்று

எயிட்ஸ் தடுப்புக்கு ஒன்று

மனித உரிமைக்கு ஒன்று

சௌக்கிய மேம்பாட்டுக்கு ஒன்று

உளநலனுக்கு ஒன்று

இளையோர் அபிவிருத்திக்கு

மேலுமொன்று

……………………

இப்படி இன்னும் எத்தனை

எத்தனை ஸ்தாபனங்கள் 

எல்லாம் இந்த

குவலயம் முழுக்க

பரந்தும் பரவியும் 

வியாபித்து கிடக்கின்றன

வறுமை ஒளிந்தபாடில்லை

அகதிகள் புனர்வாழ்வு பெறவில்லை

சிறுவர் பாதுகாப்பாய் இல்லை

மகளிர் மறுமலர்சி

கண்டதாய் இல்லை

வயோதிபரிடத்து பெரிதாய்

ஏதும் மாற்றம் கிiடாது

எயிட்ஸ் அழிந்தபாடில்லை

மனித உரிமைகள் நிலைமை

முன்னையிலும் மோசமாய்

சௌக்கிய நிறுவனங்கள்

வளர்ந்த அளவுக்கு

சௌக்கியத்தில் வளர்ச்சியில்லை

உளநல நிலைமை

தற்கொலைகள் தெரிகரிப்பில் தெரிகிறது

இளையோர் முன்னேற்றம்

வேலை தேடுவதில்

ஒவ்வொரு பிரிவிற்கும்

வருடம் தோறும் 

தின விழாக்கள் எங்கும்

அமர்க்களமாய் நடக்கிறது

ஐநாவின் பிரகடனங்கள்

காகித கதைகளாயும்

பிரபுக்களின் ஓசைகளாயும்

வருடந்தோறும் பல

கோடி மில்லியன் 

டொலர்கள் 

கரைவதில் மட்டும்

குறைவு இல்லை

இன்னும் எத்தனை

வறுமையின் பிரபுக்கள்

எதிர்காலத்தில் பிரசவிப்பரோ?....


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

வரலாற்றுச் சுவடுகள்

 









வரலாற்றில்
மீண்டுமோர் தடவை
கிடைத்தற் கரிய
வாய்ப்பு இந்த
ஆற்றைக் கடப்பது
இங்கு நான்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
வரலாற்றுப் பதிவாகும்
சுவடுகளே
உள் மனசு
பேசிக்கொள்ள
பாதம் பக்குவமாய்
நகர்கிறது
மூட்டை முடிச்சுச்
சுமைகளை
தோள்களில் தாங்கியபடி

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கற்பகதரு

 














பசியால வாடேக்க
வாய்க்கு ருசியான
பழமானாய்
பனங்காய்ப் பணி யாரமானாய்
களைப்பால சோரேக்க 
தலை சாய்க்க
சுருண்டு தலையணையாய் 
நீயானாய்
இரவானால் கண்ணயர
ஆளளவு பாயானாய்
தாகம் எடுக்கயில
பதநீராகி குளிர்வித்தாய்
உடலுக்கு சக்திதர
போசாக்கு மாவானாய்
ஆழ் கிணற்றில்
நீர் மொள்க
பெரிய கடகமானாய்
மாரி மழைபெய்யேக்க
நீ நனைந்து கூரையானாய்
கோடை வெயிலடிக்கேக்க
நிழல்தரும் குடையானாய்
மனை வாசல் அழகாக்க
அலங்காரப் பொருளானாய்
விலங்கினின்று பயிர்காக்க
நாற்றிசையும் வேலியானாய்
பூரணை நாள் மகிழ்சிக்கு
ஒடியற் கூழானாய்
நண்பரோட களிப்புறேக்க
சோமபான கள்ளானாய்
விழாக்கள் சோபிக்க
தொங்கு தோ ரணமானாய்
ஊரூராய் ஓடேக்க
எம்முன்னே நீ நின்று
காவல் அரணானாய்
இப்படி எங்களுக்கு 
எல்லாமாய் நீ ஆனதால
உயிர் காக்கும் பயிரானாய்
கற்பகதருவானாய்


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

எஸ். பி. பாலசுப்ரமணியம்

 













எஸ். பி. பாலசுப்ரமணியம்;

நீ வான் 

நிலா அல்ல 

தமிழ் இசை

மொழியின் நிலா

உன் விழிகள்

வான் வெள்ளியின்

ஒளிக்கீற்றுகள்

கவிஞன் உணர்வுகளை

குரலிசை நயத்தால்

நிஜமாக்கும் சிற்பி

நடிப்புக்கு சிவாஜி

பாடலுக்கு நீ

பாலா – ஜீ

மூச்சுக் காற்றிலே

வித்தை காட்டிய

வித்தகன்

குரல் வளத்தால்

தமிழை 

நீரோட்டமாய் அசைபோட 

வைத்த ஞானி

அந்நிய மொழிக்கு

சொந்தக்காரன்

ஆனால் தமிழின்

தவப்புதல்வன்

மொத்தத்தில் நீ

கான மழையால்

உலகம் வென்ற

சாதனைச் சிகரம்


திங்கள், 10 ஆகஸ்ட், 2020

"கம்பான்" பற்றி அறிந்துகொள்வோம்

"கம்பான்" பற்றி அறிந்துகொள்வோம் 


 கரைவலை
கம்பான் என்ற சொல்லை இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனேகமாக இதனோடு தொடர்புபட்டவர்களுக்கு இதை தெரிந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கும். ஆனால் தொடர்பற்றவர்களில் அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தவிர்ந்த ஏனையோர் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. நான் கூட இந்த சொல்லை இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. அண்மையில் தான் நான் இந்த சொல்லை அறிந்தேன். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு சஞ்சிகையில் கட்டுரையொன்றை படிக்கின்ற போது இந்த சொல் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. நம்மில் அநேகருக்கு சொல் அகராதிகளுடன் அதிகம் பரீட்சயமில்லை. சொல் அகராதிகளுடனான பரீச்சயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் இந்த சொல்லைப் பார்த்தபோது தான் புரிந்துகொண்டேன். உண்மையிலேயே கம்பான் என்ற சொல்லானது ஒருவகையான கயிறைக் குறிக்கிறது. அனேகமாக கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களில் ஒரு பகுதியினர் கரைவலை என்ற வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபடுகிறார்கள்.