வியாழன், 18 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

இலங்கை அரசாங்க சபையின் முதல் தமிழ் சபாநாயகர்


சேர். வை. துரைசுவாமி
இலங்கை அரசாங்க சபையின் முதலாவது தமிழ் சபாநாயகராக இருந்தவர் சேர். வைத்திலிங்கம் துரைசாமி அவர்கள்.1936  முதல் 1947வரை சபாநாயகராகவும் இலங்கையின் முதல் பிரசையாகவும் விளங்கினார். 1920 முதல் 1940 வரையான காலப்பகுதியில் இலங்கையின் அரசியலிலும் இவர் முன்னணி வகித்தவராக காணப்பட்டார்.
இவர் யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை  எனும் ஊரின் மைந்தன். ஆனி மாதம் 8ஆம் திகதி 1874ஆம் ஆண்டு தமிழ் சைவ மரபில் சிறந்த தனிநாயக முதலி யார் குடியில் அவதரித்தார். தந்தை ஐயம்பிள்ளை வைத்திலிங்கம். இவருக்கு சகோதரர்கள் ஐந்துபேர் பொன்னுத்துரை, பொன்னம்மா, விஜயரத்னம், இரத்தினகோபால் மற்றும் ராஜகோபால் ஆகியோரே அவர்கள். 

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டட் நிறுவனத்தை ஆரம்பித்தவர்

சேர். சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினல்

சேர். சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினல் இவர் இலங்கையில் திரைப்படத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர்தான்  “சிலோன் தியேட்டர்ஸ் லிமிட்டட்” எனும் நிறுவனத்தை 1928 செப்டெம்பர் 29இல் ஆரம்பித்தவர். இந்த நிறுவனம் தற்போதும் இலங்கையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் ஆகும்.

இலங்கையின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது தமிழ் பத்திரிகை

முன்பு ஒரு காலத்தில் பத்திரிகைகள் என்று ஏதும் இருந்ததில்லை. எல்லா தகவல்களுமே அநேகமாக வாய் வழியாகவே பரவி வந்தன என்பது யாவரும் அறிந்ததே. கட்டுரைகள், கவிதைகள், கதைகள், வரலாறுகள் மற்றும் தகவல் பதிவுகள் போன்றவை வாய்வழியாகவும், கல்வெட்டுக்களாகவும் செதுக்கப் பட்டிருந்தன அன்றேல் ஓலைச் சுவடிகளில் எழுத்தாணியினால் செதுக்கப்பட்டிருந்தன. இவையே அக்காலத்தில் வழக்கத்திலிருந்த எழுத்தூடகங்களாக இருந்தமை நான் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. இவை கூட பெருமளவில் இல்லாது குறிப்பிடக் கூடிய சில பிரமுகர்களால் மிகச்சொற்ப அழவிலேயே அந்த நாட்களில் உருவாக்கப்பட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. இவ்வாறு உருவாக்கப் பட்டவை அனைத்தும் அனேகமாக ஒரேயொரு பிரதியாக மட்டுமே உருவாக்கப்பட்டிருந்தன. இந்த காரணத்தால் பல்வேறு வகையான வரலாற்று முக்கியத்துவவம் வாய்ந்த பல தகவல்கள் மற்றும் வரலாறுகள் இன்றும் கிடைத்தற்கரியனவாக காணப்படுகின்றன.

திங்கள், 15 ஜூன், 2020

இந்த விடயம் தெரியுமா உங்களுக்கு

மின் அஞ்சல் (ஈ மெயில்) முகவரி முறைமையை கண்டு பிடித்தவர்:

வி. ஏ. சிவா ஐயாத்துரை

வெள்ளையப்பா ஐயாத்துரை மற்றும் மீனாட்சி ஐயாத்துரை ஆகியோருக்கு 1963ஆம் டிசம்பர் (மார்கழி) மாதம் 2ஆம் திகதி மும்பை இந்தியாயாவில் அவதரித்தவர் வி. ஏ. சிவா ஐயாத்துரை அவர்கள். இவர் 1978இல் தனது 14வது வயதின்போது மருத்துவ பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளின்பொருட்டு மின் அஞ்சல் (ஈ மெயில்) முறைமையை பயன்படுத்தத் தொடங்கினார். 

சனி, 13 ஜூன், 2020

தேடலில் கிடைத்த முத்து ஒன்று அப்பாத்துரை முத்துலிங்கம் - எழுத்தாளர்


அறிமுகம்



ஆழமான நீர் தடாகத்துக்கடியிலே உறுதியாக வேர் பதித்து சலனமின்றி நீரின் அசைவுகளோடு இலைகளால் நீச்சலடித்து மிதந்து பூஜை பீடத்திற்கு வைப்பதற்கென்றே பூத்த அந்த மலரைபோல உலகு பார்க்க மலர்ந்து தேவையுள்ள அனைவருமே தேடி ரசிக்கும்படியாக வாழ்ந்து தன் தாய்மொழிக்கு தரவேண்டிய கௌரவத்தை பல்வகைப்பட்ட வடிவங்களில் தன் எழுத்துக்களால் இன்றுவரை தூரத்து தேசத்திலிருந்து தந்துகொண்டிருக்கும் ஓர் சிறந்த எழுத்தாளர் பற்றியதே இந்த கட்டுரை.

யார் அந்த தூரத்து எழுத்தாளர்? அவர்தான் பல்வேறு நாடுகளிலும் தற்போது பலராலும் விரும்பப்படும், ரசிக்கப்படும், கௌரவிக்கப்படும் மற்றும் தேடப்படும் பல்வேறுபட்ட பல்சுவை எழுத்துக் கலைப் படைப்புக்களுக்கு சொந்தக்கார னாகிய திரு. அப்பாத்துரை முத்துலிங்கம் அவர்கள். 1980களில் இவரது வெளியீடாகிய “அக்கா” சிறுகதைத் தொகுப்பு படைப்பில் வெளியிட்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தததுண்டு. பின்னர் இவரது வெளியீடுகள் பற்றி அறியக்கிடைக்காததால் இவர் படைப்புகள் பற்றிய நினைவு மெல்ல மெல்ல மறந்து போயிற்று. அண்மையில் தமிழகத்தின் பிரபல மேடைப் பேச்சாளரும் பட்டிமன்ற விற்பன்னருமான மிகப் பிரபலமான திருமதி பாரதி பாஸ்கரன் அவர்களுடைய கண்ணதாசன் நிகழ்வுகளை மீட்டும் பாட்டுமன்றம் சார் பேச்சு நிகழ்வு ஒளிப்படம் ஒன்றை யூரியூப் (YouTube) இணையதள பகுதியில் பார்க்கக் கிடைத்தது. அதிலே தற்போது பிரபலமாக இருக்கக்கூடிய 5 எழுத்தாளர்களில் ஒருவராக திரு. அ. முத்துலிங்கம் என்ற கனடாவில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் பார்க்கப்படுகிறார் என்ற கருத்தை பாரதி பாஸ்கர் அவர்கள் முன்வைத்திருந்தார். இந்த தகவலே என்னை எழுத்தாளர் முத்துலிங்கம் பற்றிய நினைவுக்குள் மீண்டும் கொண்டுசென்றதோடு அவர் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் தேடவும் தூண்டியதோடு நின்றுவிடாமல் அவர்பற்றிய இந்த கட்டுரையையும் எழுதத் தூண்டியது என்று சொன்னாhல் அது மிகையாகாது. இவர் பற்றிய விடயங்கள் பலவற்றையும் இந்த கட்டுரையில் ஒரே பார்வையில் தரவேண்டும் என்ற ஆர்வத்தால் சற்று விரிவாகவே இந்த கட்டுரையை எழுத முயற்சித்திருக்கிறேன்.

புதன், 10 ஜூன், 2020

இந்த ஆட்டத்தை நிறுத்து………!

















அசுரனாய் வந்து
ஆடினாய் எங்கும் நீ
கோரத் தாண்டவம்
கண்டங்கள் தாண்டி
வியாபித்தே காட்டினாய்
உன் ருத்ர தாண்டவத்தை
நெஞ்சிலே பயங் கொண்டு
ஒதுங்கினர் உலகோர்
வீட்டுக் கைதிகளாய்
தம் வாசஸ் தலங்களுக்குள்
அத்தனை மாந்தரும்
அரசாணை கூட
அதைத்தான் வேண்டிற்று
இயந்திரம் போலே
அவசர அவசரமாய்
ஓடிக் கொண்டிருந்த
மனித வாழ்க்கை
ஓய்வு கண்டது
ஒரு கணம் அல்ல
மாதங்கள் மூன்றையும்
கடந்து தாண்டி

சனி, 6 ஜூன், 2020

தோப்போரம் இளைப்பாறலாம்

தொலை வானில்

பட்சியொன்று

சிறகடித்ததை

கண்ணுற்ற

உன் விழிகள்

இணையானது

துணையானது!

சஞ்சரிக்கிறேன் நான்

உன் சிறகுகளுடன்

நீண்ட நெடு வானில்.....!

வெள்ளி, 5 ஜூன், 2020

பெரும் தலை – பிக்போஸ் – (Bigg Boss)


பருவம் மூன்று (Season 3)
ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
பிக்போஸ் தமிழ் 3 பங்குபற்றுனர்

இப்போது நாங்கள் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது பருவத்திற்கு செல்வோம். கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி பெரும் தலை (Bigg Boss) பருவம் 3 நிகழ்வு கோலாகலமாக பிரமாண்டமான மண்டபத்தில் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க ஆரம்பமாகியது. பங்கு பற்றுனர் அறிமுகமும் விசேட கலைநிகழ்வுகளும் இதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டு இரண்டு நாட்கள் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் இந்த பருவத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பங்குபற்றுனர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து வீட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

பெரும் தலை – பிக்போஸ் – (Bigg Boss)



ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது



“ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” என்பது மறக்கமுடியாத மிகவும் பிரபலமான ஒரு வசனம் என்பது நாம் அறிந்த ஒன்று. இது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் உலக நாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் பிரபல தென்னிந்திய நடிகர் கமலஹாசன் அவர்களால் உச்சரிக்கப்பட்ட மிகப்பிரபல்யமான வாசகம். இந்த வாசகம் தமிழ் நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பெரும் தலை - பிக்போஸ் (Bigg Boss) உண்மை காட்சி (Reality Show) என்ற நிகழ்ச்சியின் மூலமே பிரபல்யமானது.

கடந்த 2017இல் முதல் தடவையாக தமிழில் விஜய் தொலைகாட்சி நிறுவனத்தால் 1வது பருவம் ஆரம்பிக்கப்பட்டு நடிகர் கமலகாசன் அவர்கள் தொகுத்து வழங்க மிக வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டிரு;தது. இது பலராலும் வரவேற்கப்பட்டதோடு மிகவும் ஆவலுடன் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இடம்பெற்றது. அதே போல் இந்நிகழ்சியின் இரண்டாவது பருவம் 2018இல் நடிகர் கமலகாசன் அவர்கள் தொகுத்து வழங்க நடாத்தி முடிக்கப்பட்டது. முதலாவது பருவத்தைப்போல் இரண்டாவது பருவம் அவ்வளவு சிறப்பாக சோபிக்கவில்லையாயினும் 100 நாட்கள் சிறப்பாக நடந்தது என்றுதான் கூறவேண்டும்.

வியாழன், 14 மார்ச், 2019

பெற்றோரை கனம் பண்ணு

இழப்பு


அவள் பெயா் மோி.தற்போதுதான் வயது இருபதை அடைந்தாதிருந்தாள். ஒரு நாள் நண்பா்கள் ஒன்று சோ்ந்து விருந்து ஒன்றிற்கு ஒழுங்கு செய்திருந்தாா்கள். அது ஒரு இரவு நேர விருந்து. விருந்துக்கான நாள் நெருங்கியது.அவள் பெற்றோாின் அனுமதிக்காக விபரத்தைக்கூறி காத்திருந்தாள்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

அறிவியல் உலகில் அறக்கல்வியின் அவசியம்

அறிவியல் உலகில் அறக்கல்வியின் அவசியம்



அறிமுகம்

பொது நிலையினரால் வழங்கப்பெற்ற பத்து பெயர்களுக்கு உரித்துடையவராகிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருந்தகையே தனது படைப்பாகிய “திருக்குறள்” நூலை “அறத்துப்பால்” என்ற அதிகாரத்துடன் ஆரம்பித்ததோடு “அறன் வலியுறுத்தல்” என்ற அதிகாரத்தை நான்காம் இடத்தில் வைத்து மற்றய அனைத்து விடயங்களையும் அதன் பின்னரே வைத்து தனது நூலைப் படைத்ததன் மூலம் அறக்கல்வியின் அவசியத்தை அன்றே தெளிவாக உலகிற்கு பறைசாற்றி விட்டார்.

நாம் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். பல நூற்றாண்டுகளைத்தாண்டி இந்த நூற்றாண்டுக்குள் நுளைந்த நாம் ஆண்டுகள் மாறி புதிய ஆண்டுகள் புதிய பரிமாணத்தோடு மாறியதைப்போலவே எமது பாரம்பரிய கல்வி முறைகளிலிருந்து படிப்படியாக விடுபட்டு பல முன்னேற்றகரமான கண்டுபிடிப்புகளுடனான போட்டி நிறைந்த அறிவியல் கல்வியை முதன்மைப்படுத்திய வாழ்க்கை முறைக்குள் நுளைந்துவிட்டோம். அறிவியல் எவ்வளவுதான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுடன் முன்னேறியிருந்தாலும் எமது பாரம்பரிய அறம் சார்ந்த கல்விமுறையில் பாரிய பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமையானது எமது சமூகத்திற்குள் பல்வேறு வகையான பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மக்கள் சுயநலத்தை மட்டும் சார்ந்த போட்டி நிறைந்த வாழ்க்கையில் அறத்தை மறந்து தமது பொருளாதார இலக்கை மையப்படுத்திய முன்னேற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான சூழலில் “அறிவியல் உலகில் அறக்கல்வியின் அவசியம்” பற்றிய இந்த கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்ததே. இதன் மூலமாக நான் கூறவரும் விடயங்கள் சமூகத்திற்குள் அறக்கல்வியின் அவசியம் பற்றியதான ஒரு சிறிய அளவிலான மாற்றத்தையாவது உண்டுபண்ணினால் அது எனது முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதுவேன்.

அறிவியல் வளர்ச்சியும் சமூகத்திற்குள் அதன் தாக்கமும்

ஏட்டிலே எழுதி கற்றல் செயல்முறைகளை மேற்கொண்டு வந்த காலம் போய் நாம் குரல் பதிவை மேற்கொண்டால் அதனை தானாகவே தட்டச்சு செய்து காகிதங்களில் பிரதி செய்து உடனடியாகவே பெற்றுக்கொள்ளும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது. அது மட்டுமன்றி புறாக்கள் மூலம் அஞ்சல் அனுப்பி பதிலுக்காக நீண்ட காலம் அந்தப்புறாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த காலம்போய் விரல் நுனியால் பொத்தானை அழுத்திய மறு நொடியிலேயே மறுபக்கத்தில் இருப்பவரை அவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் முகம்பார்த்து கதைக்கும் நிலைமைக்கு அறிவியல் வளர்ச்சிகண்டுள்ளது. உள் நாட்டிலே அடுத்த நகரத்திற்கு நடந்தே செல்வதில் பலமணி நேரங்களை செலவிட்ட நாம் சில மணி நேரங்களிலேயே மற்றொரு கிரகத்திற்கு சென்றுவிடக்கூடிய நிலைக்கும் கைகள், தடிகள், குச்சிகள், அம்புகள் போன்றவற்றால் எதிரிகளுடன் பொருதிய நிலை மாறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் பொருதும் நிலைக்கும் இன்றைய அறிவியல் வளர்ச்சி கண்டுவிட்டது. இத்தனை தூரம் அபரிமிதமான வளர்ச்சியை அறிவியல் அடைந்துள்ள நிலையில் அறம் சார்ந்த எமது பாரம்பரிய நற்குணங்கள் வெகுவாக பின்னடைவை சந்தித்ததோடு சமூகத்திற்குள் பாரியளவில் அற வாழ்க்கையை மறந்த நிலைமையையே தோற்றுவித்துள்ளது.

இந்த அறிவியலின் வளர்ச்சி, அதனை முதன்மைப்படுத்திய கல்வி முறையில் அதிக ஆர்வம் காட்டிய அந்நியர்களின் வருகைகளின் மூலம் எமது பாரம்பரிய கல்வி முறைகளில் மாற்றத்தை கொண்டுவந்து போட்டி நிறைந்த கல்வி முறைக்குள் எமது பிள்ளைகளை தள்ளிவிட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலைமை அவர்கள் தங்களுக்குள் முதன் நிலை பெறுபேற்றை மையப்படுத்திய இலக்கை அமைத்துக்கொண்டு அறக்கல்வியில் நாட்டம் கொள்வதை தவிர்த்து, தங்களது நேரத்தின் பெரும் பகுதியை அறிவியலையும் ஏனையவிடயங்களை கற்பதற்கே செலவிடுகின்ற நிலைமையில் அவர்களது கல்வி நடவடிக்கைகள் தொடர்கின்றது. குழந்தைகளை தங்கள் குரலால் தாலாட்டி கண்ணயரச்செய்த தாய்மார்கள் கைத்தொலைபேசியில் பாடலை இசைக்கவிட்டு பிள்ளைகளை தூங்கச்செய்யும் நிலைமை இன்று அனேகமான வீடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. தமது நண்பர்களுடன் சேர்ந்து குழாமாக விளையாடிய நட்பை மேலோங்க வைக்கும் விளையாட்டுக்களை மறந்து வீடுகளிலே தனித்திருந்து கைத்தொலை பேசியிலும் இணைய வழி இலத்திரனியல் விளையாட்டுக்களிலும் தமது மற்றொரு பெரும் பகுதி நேரத்தை செலவு செய்கிறார்கள். இதற்கு பலர் அடிமையாகியும்விடுகிறார்கள். குடும்பங்களில் பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களை பார்ப்பதில் தமது அதிக நேரத்தை செலவிடுவதிலும் அதேபோலவே ஆண்களும் பெண்களும் கைத் தொலைபேசியல் சமூக வலைத்தளங்களில் ஆடிப்பாடுவதிலும் முகம் தெரியாத பல நண்பர்களென கூறப்படுபவர்களுடன் குறுஞ்செய்திப் பரிமாற்றத்திலும் ஈடுபடுவதில் இன்னொரு பகுதி நேரத்தை செலவிடுவதோடு ஒன்றாக இருந்து உணவுட்கொள்ளல் தங்களுக்குள் குறை நிறை சார் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதிலும் உடல் உள ரீதியான அன்புப்பரிமாற்றத்தை மேற்கொள்வதிலும் தமது ஈடுபாட்டை காட்டுவதை வெகுவாக குறைத்துவிட்டுள்ளதை பல இடங்களில் உணரக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு அறிவியல் வளர்ச்சியின் மாற்றம் பல்வேறு தாக்கங்களை மக்கள் மத்தியில் புகுத்தியதோடு அறக்கல்விக்கான அவர்களது ஆர்வத்தை அறவே இல்லாமல் செய்துவிட்டது. இந்த நிலைமையானது சமூக ரீதியான முரண்பாடுகளுக்கும் இளைஞர்களை தவறான செயல்களுக்குள் தள்ளிவிட்டு போதைப் பொருள் பழக்கம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சிறுவர் து~;பரயோகம், பெற்றோருக்கெதிரான முரண்பாடுகள் மற்றும் குழுவாக சேர்ந்து சண்டை செய்யும் நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் சமூகத்திற்குள் தோற்றுவித்து சமூக சீர்கேடுகளை உருவாக்கியுள்ளதென்றால் அது மிகையாகாது. 

அறிவியல் கல்வியின் அவசியம்

மேலே கூறப்பட்டவாறு அறிவியலின் வளர்ச்சி காரணமாக பல்வேறு பாதகமான விளைவுகள் சமூகத்திற்குள் தோன்றியுள்ள இந்த காலகட்டத்தில் அறக்கல்வியின் முக்கியத்துவம் பல இடங்களிலும் இன்று பேசுபொருளாகிவிட்டது. மேற்படி அறிவியல் வளர்ச்சி சார் பாதகமான தாக்கங்களுக்கும் விளைவுகளுக்கும் சாதகமான சிறந்த மாற்றங்களை கொண்டுவருவதாயின் அறக்கல்வியை முதன்மைப்படுத்திய கல்விமுறை மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும்.

மிகவும் பழமை வாய்ந்த அதே வேளை சிறந்த கலாசாரம், பண்பாடு மற்றும் நற் பழக்கவழக்கங்களை கொண்ட நமது தமிழ் சமூகத்தில் மூதாதையர்கள் அறக்கல்வியை முதன்மைப்படுத்தியே கல்விமுறைமையை வகுத்திருந்தார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒளவையார் அருளிச்சென்ற நீதிநூல் எனப்படும் “ஆத்திசூடி” நூலை கவனத்தில்கொள்ளலாம். ஆத்திசூடியில் அம்மையார் “அறம் செய விரும்பு” என அறத்தை முதன்மைப்படுத்தியே தனது செய்யுளை ஆரம்பிக்கிறார். அதிலே தொடர்ந்து “ஆறுவது சினம்” மற்றும் “இயல்வது கரவேல்” என்று அறம் பற்றிய விடயங்களையே முழுமையாக இந்த நூலில் முன்நிலைப்படுத்துகின்றார். இன்றைய எமது பிள்ளைகளுக்கு இவைபற்றி தெரிந்திருப்பதே அரிதாகத்தான் இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி உச்சத்தை தொடுவதற்கு முன்னர் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அவர்களது மூன்றாவது அகவையிலேயே அறக்கல்வியை பயில அறக்கல்வி நிலையங்களுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை நாம் பல்வேறு ஆவண ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கின்றது காரணம் அறக்கல்வியை கற்று அதனைஒழுகியே மற்றைய கல்வியை தொடர வேண்டும் என்பதே.

ஆரம்பத்திலே குறிப்பிட்டதைப்போன்று வள்ளுவரினால் அருளப்பெற்ற “திருக்குறள்” நூலிலே “அகர முதல எழுத்தெல்லாம ஆதிபகவன் முதற்றே உலகு” ஏனைய எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரம் முதலாய் அமைவதுபோல உயிருள்ள, உயிரற்ற, அசையும் மற்றும் அசையா அனைத்திற்கும் இறைவனே முதன்மையானவன் என்பதன் மூலம் அறம்பற்றிய தனது முன்மொழிவுகளை இறையிடத்திருந்து ஆரம்பிக்கிறார். குடும்ப வாழ்க்கை என்பதே அறம்தான் என்பதை மற்றொரு அதிகாரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறாhர். “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதிலார் பிறன் பழிபதில்லாயின் நன்று”. இங்கும் அறக்கல்வியன் அவசியம் பற்றி நாம் விளக்கம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

நம் நாட்டில் மக்களால் பின்பற்றப்படுகின்ற இந்து மதத்தின் கீதாசரம் மற்றும் அதைப்போன்ற ஏனைய நூல்கள், பௌத்த மதத்தின் திரிபிடகம், கிறீஸ்தவ மதத்தின் புனித வேதாகமம் மற்றும் இஸ்லாம் மதத்தின் அல்குர்ரான் ஆகிய அனைத்து மதங்களினதும் மதநூல்களுமே அன்பு மற்றும் அறண் சார்ந்த விடயங்களையே முன் நிலைப்படுத்துவதை நாம் அந்த நூல்களை ஆய்ந்து பார்க்கின்றபோது புலப்படும். அது மட்டுமன்றி இந்த நால்வகை மதங்களும் தமது வழிபாட்டு ஸ்தலங்களில் வாரத்தில் ஒரு நாளில் அறக்கல்விக்கான நேரத்தை ஒதுக்கி காலாகாலமாக நடாத்தி வருவதும் இதன் முக்கியத்தை உணர்ந்தே என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியலின் மூலம் உலகில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து எதிர்கால பொருண்மிய முன்னேற்றத்தை மையப்படுத்திய கல்வியில் அதிக நாட்டம் காட்டப்படுவதானது அறக்கல்வியில் பிள்ளைகளின் பங்குபற்றுதலை குறைத்துள்ளமையை நாம் கண்கூடாக காண்பதற்கு சான்றாக அமைகிறது. அறக்கல்வியின் மீதான நாட்டத்திலும் ஈடுபாட்டிலும் ஏற்பட்ட குறைபாடானது பிள்ளைகள் ஏனைய தவறான பாதைகளை தேர்ந்தெடுப்பதற்கும் வழிகோலுகின்றது.

தொகுப்பு

இந்த கட்டுரையில் ஆரம்பத்திலிருந்து இதுவரை குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தையும் தெளிவாக விளங்கிக்கொண்டால் அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த உலகில் இந்த வளர்ச்சியானது அறம் சார் வாழ்க்கை முறையில் பாரிய எதிர் மறையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளமை புலனாகும். அதே வேளை இதன் மூலம் அறிவியல் எதிர் மறையான மாற்றங்களை மட்டுமே உருவாக்கியுள்ளது என்ற அர்த்தம் கொள்ள முடியாது. இங்கு அறக்கல்வியின் அவசியம் என்ற விடயத்தை முன்நிலைப்படுத்தி இக்கட்டுரை அமைவதால் அறக்கல்வியின் அவசியத்தை நிறுவும் நோக்கமே கட்டுரையாக்கத்திலும் முதன்மைப்படுத்தப்பட்டது அதனாலேயே அறிவியல் வளர்ச்சி ஏற்படுத்தியிருக்கக்கூடிய பாதகமான நிலைமைகள் பற்றி அதிகமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இங்கு நான் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் மூலம் மீண்டும் மீண்டும் அறக்கல்வியின் தேவை எவ்வளவு அவசியமானதாக இருக்கின்றது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். அறக்கல்வி முன்நிலைப்படுத்தப்பட்டு கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டால் அன்பு, ஒழுக்கம் மற்றும் அறம் மேலோங்கிய வாழ்க்கை முறை எதிர்காலத்தில் மலர்ச்சி பெறும் என்பதே எனது நம்பிக்கையாக இருக்கிறது. பாடசாலைகளில் அறக்கல்வியை கட்டாயமாக்கி அதற்கு குறிப்பிட்ட புள்ளிகளை வழங்கி அந்த புள்ளிகளையும் இறுதிப்பரீட்சை பெறுபேற்றுடன் சேர்த்துகொள்ளப்படும் நடைமுறை கல்விமுறையில் கொண்டுவரப்படும்போது அறக்கல்வியிலான நாட்டத்தை அதிகரித்து அறம்சார் வாழ்க்கை முறைமை சமூகத்தில் மேலோங்க வாய்ப்பை ஏற்படுத்தும்.  

 

புதன், 3 பிப்ரவரி, 2010

நினைவுகள்

கதிரவன் கண்விளிக்குமுன்பே

உன் நினைவுகள் என்னுள்

விளித்துக்கொள்கிறன

நிலாமகள் தன் குளிர்மையான

கதிர்களா பூமிப் பந்தில் பரவவிடும் முன்பே

பிரிவுக்கு நாள்

கனவாய் என் மனதில் வந்து
நிஜத்தில் என் உள்ளத்தில் குடிபுகுந்தாய்
கவியாக நாவில் வந்து
கீதமாய் என் வாழ்வெல்லாம் இசைத்தாய்
துணையாக என் உயிரில் கலந்தாய்
கனிவாக காலம் கனிய
பிரிவுக்கும் நாள் குறித்தாய்
நலம் வாழ ஆசித்தேன் நான்