தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது உளம் நிறைந்த புது வருட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வருடத்தில் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு சிறந்த முயற்சியும் வெற்றி பெறவும் குடும்பத்தில் மகிழ்ச்சியை தரவும் இறை ஆசிகளை வேண்டிநிற்கிறேன்.
சனி, 31 டிசம்பர், 2022
வியாழன், 22 டிசம்பர், 2022
ஜாதியம்
சிலருக்கு மட்டும் தான் இடம்
வெளியே பலருக்கிடம்
உண்டியல்கள் நிறையும்போது
தீட்டுக்கள் கிடையாது
பூஜையில் மட்டும்
தீட்டுக்கள் ஒவ்வாது
வறுமை
கோவில்கள் தோறும்
பாலாபிசேக படையலும்
தீபாராதனைப் பூஜைகளும்
குறைவில்லை
ஆம் குறைவில்லை
தாகமும் பசியும் நிறை
ஒட்டிய வயிறுகளும் தான்
எழுதுகோல்
அறிவுப் பெருக்கத்தை
மனச்சிறையில் கடிகொண்ட
சிந்தனைகள் கற்பனைகளை
உலகுக்குணர்த்த
தன் குருதி முற்றிலும் ஈந்த
தற் கொடையாளி
திங்கள், 12 டிசம்பர், 2022
விண்ணும் விண் மீனும்
அழகழகாய் பல ஆயிரம் கோடி
வெளியாய் விரிந்து பரந்திருக்கும் விண்ணில்
கண் சிமிட்டி அசைபோடும் விண்மீன்கள்
அற்புதக் காட்சிதனை ஒவ்வொரு இரவிலும்
பசும் புற்றரையில் பாய் விரித்து
எதிர்காலக் கனவுகளை நமக்குள் மீட்டி
கனிவோடு கதைகள் பல பேசி
ரசித்தபடி கண்ணயரும் நாளுக்காய் காத்திருப்பேன்
வாராயோ என் வண்ணமயில் ஆரணங்கே
மாற்றுத் திறனாளிகள்
இயற்கை
இயற்கையின் கோரத் தாண்டவங்கள்
மனிதம் தெரியா மனிதர்கள்
கணப்பொழுதின் விபத்துகள்
காரணம் காணாத நோய்த்தாக்கங்கள்
இவற்றால்
உருவாகியவர்கள் இவர்கள்
அவர்கள் மனம் நோகா
பெயர் வேண்டுமென
புதையல் தேடுபவர்களாய்
வெள்ளி, 18 நவம்பர், 2022
உலக நாயகனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்திய தமிழ் திரைத்துறையில் மற்றொரு பரிணாமம்
அறிமுகம் (Introduction)
கமல் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் கடந்த ஆனி மாதம் 3ஆம் திகதியன்று உலகம் பூராக உள்ள பல திரயரங்குகளில் வெளிவந்த திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளி வந்ததைத் தொடர்ந்து பல்வேறு விமர்சகர்களால் இப்படத்திற்கான திறனாய்வுகள் வெளியிடப்பட்டு வருவது நாம் அறிந்ததே. அவர்களைப்போலவே நானும் இந்தப்படத்திற்கான திறனாய்வு ஒன்றை எழுதும்பொருட்டு எடுத்த முயற்சியின் வெளிப்பாடே இந்த கட்டுரை. சாதாரணமாக ஒரு படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சில படங்களுக்குதான் ஏற்படும். அவ்வாறான எண்ணம் இந்தப்படத்தின் மீதும் ஏற்பபட்டதால் முதல் நாள் முதல் காட்சியை நீண்ட நாட்களுக்கு முன் முன் பதிவு செய்து பார்த்துவிட்டு வெளியே வந்தால் எப்படியும் மீண்டும் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதை உறுத்தி;கொண்டிருக்க இரண்டாவது மூன்றாவது தடவையும் பார்த்துவிட்டேன். இதற்கு முன் இப்படி அடுத்தடுத்து மூன்று தடவை எந்தப்படத்தையும் பார்த்ததில்லை. இதுவே முதற் தடவை ஆனாலும் இன்னும் ஒரு தடவை பார்க்கக் கிடைத்தால் பார்த்துவிடவேண்டும் என்ற ஆதங்கம் இன்னும் மனதில் உள்ளது. இந்த ஒரு விடயமே படம் எப்பேற்பட்டது என்பதை கட்டியம் கூறிவிடும். இருந்தாலும் இன்னும் சற்று ஆளமாக படத்திற்குள் புகுந்து படம் பற்றிய பல விடயங்களை ஆய்ந்து இந்த கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2022
தமிழுக்காய் தமிழ் அன்னை தந்த தவப்புதல்வா (அந்தாதி)
தமிழுக்காய் தமிழ் அன்னை தந்த தவப்புதல்வா (அந்தாதி)
தமிழுக்காய் தமிழன்னை தந்த தவப்புதல்வா
தவமிருந்தும் கிடைத்தற்கரிய பொக்கிசமே
பொக்கிசமாய் அருளிச் சென்றாய் புதுக்கவிகள்
புதுக்கவிகளுக்கு உயிர் கொடுத்த தீரன் நீ
நீ படைத்த கவிகளாலே தலை நிமிர்ந்தோம்
நிமிர்ந்த நடையோ டெதிரியை நாம் நேர்கொண்டோம்
நேர்கொண்ட பார்வையோடு ஞானச் செருக்கும்
செருக்கோடு பாக்களாலே அகிலம் ஆண்டோhம்
ஆண்டிடுவோம் உன் அருளால் காலமெல்லாம்
காலமெல்லாம் நிலைத்திருக்கும் உந்தன் புகழ்
உந்தன் புகழ் பிரபஞ்சத்தை ஆட்சிசெய்யும்
ஆட்சி செய்யும் நின் கவிகள் என்றும் தமிழை
திங்கள், 5 செப்டம்பர், 2022
பாரதியின் பிறந்ததினத்தையிட்டு சில ஹைக்கூ கவிகள்
நகைச் சுவை கலந்த சில சம்பாசணைகள் 4
இளமையும் முதுமையும் சந்தித்தால் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றிய கற்பனைகள் சில எழுத்து வடிவில் உங்கள் ரசனைக்காக
1
இளமை: என்னா பெரிசு உனக்கு தான் வயசு போச்சில்ல.. சும்மா போய் ஒரு மூலைல ஒக்காந்து ஓய்வெடுக்கிறத விட்டிட்டு எல்லா விசயத்திலயும் தலைய போட்டிக்கிட்டிருக்கே
முதுமை: நானும் உன்னைய போலதான் ஒரு காலத்தில உசாரா தான் இருந்தேன் இப்ப தான் கொஞ்சம் சோர்வாயிட்டன். அதுக்காக என்னோட உணர்வெல்லாம் போயிடுமா அது சாகும் மட்டும் இருக்கத்தானே செய்யும்
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022
பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் 3
பரமபதம் (பாம்பும் ஏணியும்) சதுரங்கம் இரண்டும் சந்தித்தால் என்வெல்லாம் பேசிக்கொள்ளும் என்று சிந்தித்ததில் மனசில் பதிந்த சில சம்பாசணைகள் இங்கு உங்கள் ரசனைக்காக இங்கு பதிவு செய்கிறேன். சிரிப்புச் சக்ரா என்ற விருது இவ்வாறான சில பதிவுகளால் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
1
பரமபதம்: ஏம்பா நீங்கள்ளாம் ரொம்ப வேஸ்டு
சதுரங்கம்: எதுக்கு அப்பிடி சொல்றே…
பரமபதம்: எவ்ளோ ஆயுதங்களும் கவசங்களும் வாகனங்களும் இதெல்லாம் வச்சுக்கொண்டு தான் உங்க சண்டித்தனமெல்லாம்… ஹா…ஹா…
சதுரங்கம்: ஆமா அதெல்லாம் இருந்தாதானே எதிரிய சுலபமா வெல்லலாம்
பரமபதம்: ஹா..ஹா.. ஏய் நம்மள பாரு.. எதுவுமே இல்ல… நம்ப பல்ல மட்டும் நம்பி எல்லா எதிரிகளையும் எதிர்க்கல்ல. அதுபோல நீயும் இருந்திட்டு போ.. இது வெக்கமா இல்ல உனக்கு உன்னோட பலத்த நம்பாம அதயெல்லாம் நம்பி இருக்கிறே
புதன், 10 ஆகஸ்ட், 2022
பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள் (2)
பொன்னும் பெண்ணும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும் என்பது சம்பந்தமான கற்பனைகளை பகடியாக உருவாக்க முனைந்ததில் கிடைத்த சில சுவாரஸ்யமான சம்பாசணைகள் இங்கு தருகிறேன். ரசிக்கக்கூடியதாக இருந்தால் அனுபவிப்பதோடு மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்
பொன்னும் (நகையும்) பெண்ணும்
1
பெண்: உனக்கு நகை என்னு பேரு வச்சது தப்பா போச்சு
பொன்: எதுக்கு அப்பிடி சொல்றே. உனக்கு பொறாமை போல
பெண்: போற வாற நேரமெல்லாம் என்னப்பாத்து நகைச்சுக்கிட்டே இருக்கே
பொன்: ஆமா நகைக்க தான் செய்வன் சும்மா பாத்திட்டு போறது தானே உன் வேலை
சனி, 6 ஆகஸ்ட், 2022
பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள்
பகிடிகள் (ஜோக்ஸ்) கலந்த சில சம்பாசணைககள்
வரவும் செலவும் பேசிக்கொண்டால் எப்படி இருக்கும். வேறொரு நிகழ்வில் வழங்கப்பட்ட தலைப்பிற்கு என்னால் உருவாக்கப்பட் பகிடி கலந்த சிந்தனைகள் சில. பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வரவு செலவு
1
வரவு: உனக்கென்ன ரொம்ப ஏறிட்டே போறே மனசாட்சியே இல்லாம
செலவு: ஹ… ஹ… உனக்கு ஏற வக்கில்ல ஏன் எங்கிட்ட ஏற வாறே
வரவு: வேற யார்கிட்ட ஏற… நீ வரவுக்கேற்றாபல இருக்கலாமில்ல
செலவு: போ.. போ… ஒன்னோடு முதலாளி கிட்ட போய் கேழு என்னை ஏத்த சொல்லி
வரவு: நல்லா சொன்னே… வாரதும் போய் பிச்ச பாத்திரம் தான் தூக்கனும்
செலவு: ஆகா… அது நல்ல ஐடியாவாச்சே… ட்ரை பண்ணு நான் கௌம்புறேன்
வெள்ளி, 29 ஜூலை, 2022
தன் முனைக் கவிதைகள்
என்னால் எழுதப்பட்ட தன்முனைக் கவிகள் சிலவற்றை உங்கள் ரசனைக்காக இங்கு பதிவிடுகிறேன். உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டல்களையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
1
இருவரும் பயணிக்க வேண்டிய
தொலை தூரப் பயணம்
உனக்கு கிடைத்தது பயணச்சீட்டு
நினைவுகளோடு வரும்வரை நான்
2
தையல்ஊசி விற்கிறான்
பாதையோரத்து வியாபாரி
தன் காற்சட்டை கிளியலை
கையால் மறைத்தபடி
ஞாயிறு, 24 ஜூலை, 2022
அப்துல் கலாம் நினைவாக
அப்துல் கலாம் அவாகளின் பிறந்த தினத்தையிட்டு எழுதப்பட்ட மூவரிக் கவிகள் சில
1
மனதை தூண்டும் பேச்சு
ஆயிரம் கனவுகள் காணும்
வாலிபக் கூட்டம்
செவ்வாய், 19 ஜூலை, 2022
பிள்ளை மனம் கலங்குதென்றால்…..
பிள்ளை மனம் கலங்குதென்றால்…..
மெல்ல
சூரியன் தன் கதிர்களை பிரகாசிக்க ஆரம்பித்திருந்தான். வானம் செக்கச் செவேலென சிவந்து
இருந்தது. முகில் கூட்டங்கள் அவசர அவசரமாக சூரியக்கதிர்களை கடந்து சென்றுகொண்டிருப்பது
அவற்றின் நிழல் பூமியில் படுவதில் தெரிந்தது.
அன்று
தீபாவளி பண்டிகை நாள். சூரியாவின் வீட்டில் எல்லோரும் காலை நேரகாலத்தோடு எழும்பிவிட்டார்கள்.
தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும் எல்லா வீடுகளிலும் கொண்டாட்டம் தடல்புடலாகத்தானே
இருக்கும். அதே தடல்புடலும் கலகலப்பும் தான் சூரியாவின் வீட்டிலும்.
முக்கியமான விடயம் என்னவென்றால் கொரோனா என்ற கொடிய நோய் அரக்கன் காரணமாக கடந்த வருடம் தீபாவளிப் பண்டிகையை யாருக்குமே கொண்டாட கிடைக்கவில்லை. அந்த உலக நாடுகள் அனைத்தையும் பதம் பார்த்து தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருந்த தருணம். அது நம் நாட்டையும் பாரிய அளவில் பதம் பார்த்துக்கொண்டிருந்தது.
திங்கள், 18 ஜூலை, 2022
வெள்ளி, 15 ஜூலை, 2022
சாதி
சாதி
சாதிகள் இல்லை என்றால்
சாதி என்றால் என்ன
வினவும் மழலைக்கு விளக்க
போதனை தொடங்குகிறது
பாதை
பாதை
தொலை தூரத்தில்
உள்ளது கோயில்
பாதை உன் வீட்டில்
தொடக்கம்
புதன், 13 ஜூலை, 2022
மண் வாசனை
மண் வாசனை
தூறல்களான முதல் முத்தத்தில்
நனைந்து போனேன்
வெளிப்படுத்தினேன் என் வாசனையை
முழுதாய் அணைத்துக்கொண்டாய்
மழையும் நிலமும்
மழையும் நிலமும்
உன் ஸ்பரிசம்
என்னில் பட்டதும்
குளிர்ச்சியடைந்தேன்
உஷ்ணம் தணிந்தது
திங்கள், 11 ஜூலை, 2022
நிம்மதி
நிம்மதி
ஒரு போதும்
தொலைந்து போகாத ஒன்றை
தொலைந்து போனதாய்
தேடுகிறாய் செல்லிடமெல்லாம்
உன்னுள்ளே வைத்துக்கொண்டு
சாதி
சாதி
எங்கும் சாதிகள் இல்லை
கற்பித்தல் தொடர்கிறது
“நமது நாட்டில் சாதியமைப்பு முறைகள்”;
கல்விக் கூடங்களில்
ஆய்வுத் தலைப்பு
செவ்வாய், 5 ஜூலை, 2022
நிலவும் மீனும்
நிலவும் மீனும்
நீச்சலடித்து மேனியைக்
குளிர்விக்கவென்று
ஆகாயத்தினின்று இறங்கி
குளத்தடியை நாடி வந்த அவளை
முண்டியடித்துக்கொண்டு முத்தமிடவும்
சுவைத்துப் பார்க்கவும்
பாய்ந்து மேனியெங்கும் படரவும்
போட்டிபோடும் நீங்களும்
மனிதர்களைப்போலவே
சனி, 2 ஜூலை, 2022
இலக்கை நோக்கி
இலக்கை நோக்கி
தொடர்ந்து சிந்தித்தேன்
சிந்தனைகளை உருவகித்தேன்
உருவகித்தவற்றை தேடினேன்
தேடிக்கொண்டே ஓடினேன்
நெடுந்தூரம் ஓடிவிட்டேன்
நான் உருவகித்த
இலக்கை கண்டடைய
இன்னும் ஓடுவேன்
மிக அருகில்
செவ்வாய், 28 ஜூன், 2022
நெருக்கடிகள் நமக்கு புதியதல்ல புதிருமல்ல
நெருக்கடிகள் நமக்கு புதியதல்ல புதிருமல்ல
பத நீரில் இனிப்பை
சுவைக்கத் தெரிந்துகொண்டோம்
மரவள்ளி அவியலில்
காலை உணவு கண்டோம்
தேங்காய் சொட்டோடு
பயறும் உழுந்தும் சேர்த்தே
ஒடியல் சத்துணவு கண்டோம்
ஞாயிறு, 26 ஜூன், 2022
உயிர்ப்பு
உயிர்ப்பு
நீர் மூன்றாம் நாள் உயிர்த்ததாய்
பதிவுகள் பறைசாற்றுகின்றன
நீர் எப்போது மரணித்தீர்
உயிர்த்தெழுவதற்கு
உமது வாழ்வினாலும்
உறுதியான மனத்தினாலும்
உயிர் பெறச்செய்யும் போதனைகளாலும்
வல்லமை பொருந்திய வார்த்தைகளாலும்
சனி, 25 ஜூன், 2022
யட்சி
யட்சி
நலன் விரும்பியாய்
எனை நாடி
தோழியாகி பின்
நண்பியாய் இடம் பிடித்து
என் மனையுள் நுளைந்து
என்னவனோடும் நெருக்கமாகி
வெள்ளி, 24 ஜூன், 2022
கல்லாமை நன்றோ
கல்லாமை நன்றோ
கல்லாமை நன்றோ கல்லாமை நன்றோ
பிச்சை புகினும் கல்லாமை நன்றோ
நிலம் உழுது பயிர் வளர்த்து
அப்பன் சேர்த்த பணம்
நிலமாய் வீடாய்
நகையாய் வாகனமாய்
சொத்துக்களாய் வளர்ந்திருக்க
வியாழன், 23 ஜூன், 2022
போட்டியில் பங்குபற்றிய நூல்கள் சார் பகிர்வு கலந்துரையாடல் நிகழ்வு
யாசகன் செப்புகிறான்
யாசகன் செப்புகிறான்
இல்லை என்பதைத் தவிர
என்னிடம்
வேறேதும் இல்லை
உண்டு என்று சொல்வதாயின்
இல்லையென்பதே உண்டு என்பேன்
நான் உன்னிடம் யாசகத்திற்காய்
என் கைகளையேந்துகையில்
நீ இல்லை
என்பதைத்தானே பகர்கிறாய்
இங்கு எனக்கும் உனக்கும்
வேற்றுமை யாதோ
திங்கள், 20 ஜூன், 2022
பணி ஓய்வு
பணி ஓய்வு
இத்தனை காலம்
கரங்களுக்கு ஆதாரமளித்த மேசை
என்னை சுமந்த நாற்காலி
என் கோவைகள் சுமந்த றாக்கை
பதிவுகளை தன்னகத்து வைத்திருந்த கணணி
சேர்ந்து பயணித்த பணியாளர்
கட்டளைகள் பிறப்பித்த
மேல் நிலை அதிகாரி
வெள்ளி, 17 ஜூன், 2022
எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏதாவது உதவுங்கள்
எனது நாட்டு மக்கள் உணவிற்காக கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏதாவது உதவுங்கள். பிரான்ஸ் ஜனாதிபதியிடம் இலங்கைச் சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்
மேகா சந்திரகுமார் |
இலங்கை வடமானிலத்தின் தமிழ் பெண்ணான மேகா சந்திரகுமார் பிரான்சில் வசித்து வருகிறார். இவர் அண்மையில் பிரான்சில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கணிதப்பரீட்சையில் தோற்றியிருந்தார். இந்தப் பரீட்சையில் இவர் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று மிகப்பெரும் சித்தியை அடைந்து எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரருடைய இந்த சாதனையை கௌரவிக்கும்பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Immanuel Macron) அந்த மாணவியை அழைத்திருந்தார். அங்கு சென்றிருந்த மேகா சந்திரகுமாரிடம் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்ன பரிசு வேண்டும் எனக்கூறுங்கள் என வினவியிருக்கிறார். அவருக்கு பதிலளித்த மேகா 'நீங்கள் எனக்கு பரிசளித்தால் நானும் எனது குடும்பமும் மட்டுமே மகிழ்சியடைவோம். ஆனால் தற்போது எனது நாட்டு மக்கள் உணவிற்காக பெரும் கஸ்டப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக ஏதாவது உதவி செய்யுங்கள்' எனக் கூறியுள்ளார்.
இவரது கோரிக்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி சாதகமான சமிக்ஞையை காட்டியுள்ளதாக தெரிகிறது. இதன்பொருட்டு பிரான்ஸ் ஜனாதிபதியால் வழங்கப்படவிருக்கும் பரிசு மிக விரைவில் இலங்கையை வந்தடையவுள்ளதாக நம்பத் தகுந்தவர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது. சின்னஞ்சிறு வயதில் தனது நாட்டு மக்கள் மேல் இத்துணை அதீத அன்பு வைத்திருக்கும் மேகாவிற்கு எனது வாழ்ததுக்களும் ஆசிகளும் உரித்தாகட்டும்
சனி, 11 ஜூன், 2022
பெண்
பெண்
பெண் என்றால்
ஏன் உன்னிடம்
இத்தனை சலனம்
இத்தனை குழப்பம்
இத்தனை தடுமாற்றம்
அவளை நீ ஏன் இன்னும்
சரியாக இனம்காண மறுக்கிறாய்
வெள்ளி, 10 ஜூன், 2022
விடுப்பு
விடுப்பு
சுழன்று கொண்டிருக்கும்
காலச் சக்கரத்தில்
எத்தனை விதம் விதமான
விடுப்புக்கள் உங்களுக்கு
உங்கள் தொழில் கூடங்களில்
சாதாரண விடுப்பு, பண்டிகை விடுப்பு
சுகயீன விடுப்பு, வருடாந்த விடுப்பு
விடுப்புக்கு விடுப்பு என்று
எத்தனை விடுப்புகள்
புதன், 8 ஜூன், 2022
எழுத மறந்த கவிகள்
எழுத மறந்த கவிகள்
பனிக் குளிரில்
அணைத்தபடி தூங்கத் தவறியது
கோடைப் பௌர்ணமியில்
நிலா
பார்த்து உறங்க மறந்தது
மாரிக் கடும் மழையில்
கைகோர்த்து நீரோடு
விளையாடத் தவறியது
கல்லூரி நாட்களில்
உன் அருகமர்ந்து
கற்க
மறந்தது
ஓடும் ரயிலில் ஒன்றாய்
உறங்கலிருக்கையில்
பயணிக்க மறந்தது
நீர்
வீழ்சியொன்றில்
நனையாமல் போனது
இனியொருமுறை இவை
நிகழத்தான் கூடுமோ
கடந்து வந்த
வாழ்க்கை பயணத்தில்
நான்
எழுத மறந்த
கவிகள் இவை
புதன், 27 ஏப்ரல், 2022
கனடாவில் சர்வதேச சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.
அண்மையில் கனடாவில் இடம் பெற்ற கனடா சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பற்றிய இந்தப்பதிவு "கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின்" தலைவரும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் அவர்களால் என்னுடன் பகிந்துகொள்ளப்பட்டது. அன்பு கனிந்த வாசகர்கள் நிகழ்வு பற்றி அறிந்துகொள்ளும்பொருட்டு என்னால் வைகறைத்தென்றல் பக்கத்தில் பகிரப்படுகிறது. பதிவை பகிர்ந்துகொண்ட குரு அரவிந்தன் அவர்களுக்கு எனது நன்றிகள்
கனடாவில் சர்வதேச
சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.
‘கனடாவில் கடந்த 29 வருடங்களாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் உலகெங்கும் இயங்கும் இலக்கிய அமைப்புக்களின் மத்தியில் தனித்துவம் பெற்ற ஒன்றாக விளங்குகின்றது. இந்த வெற்றிகரமான அமைப்பு உலகின் பல நாடுகளிலும் வாழும் எழுத்தாளர்களிடையே சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தி, அதில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து சாதனை புரிந்துள்ளது. இதற்காக கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் பாராட்டுக்குரிய ஒரு இலக்கிய அமைப்பு என்ற வகையில் கனடா வாழ் தமிழ் மக்களும், மக்கள் அமைப்புக்களும் அதனைப் பாராட்ட வேண்டும்’ இவ்வாறு சென்ற ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி 2022 கனடாவில் இயங்கிவரும் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ‘சிந்தனைப்பூக்கள்’ எஸ். பத்மநாதன் புகழாரம் சூட்டினார்.
ஞாயிறு, 10 ஏப்ரல், 2022
இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’
அண்மையில் நான்கு எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றியதான இணையவெளிக் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பரிமாறப்பட்ட கருத்துக்கள் பற்றிய சுலோச்சனா அருண் அவர்களால் படைக்கப்பட்ட கட்டுரை இங்கு ஆய்வாளர்களிற்கு நன்மை பயக்கலாம் என்ற நோக்கத்தில் பதிவிடப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் சுலோச்சனா அருண் அவர்களுடையதே எந்த மாற்றமும் இன்றி பிரசுரிக்கப்படுகிறது.
இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’
சுலோச்சனா அருண்
சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி சு.குணேஸ்வரன், குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி முனைவர். கோவிந்தராயூ (இனியன்), சாத்திரியின் ‘அவலங்கள்’ பற்றி தானாவிஷ்ணு, சயந்தனின் ‘பெயரற்றது’ பற்றி ந.குகபரன், ஆகியோர் உரையாற்றினார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு இதுபோன்ற மிகச்சிறந்த சிறுகதை வடிவங்களைத் தமிழில் உருவாக்கித் தந்த எழுத்தாளர்களையும், இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்து நடத்திய எழுத்தாளர் அகில் அவர்களையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள். சிலர், தமிழ் இலக்கியம் இன்னும் செழித்து வளர, இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம் பெறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.
தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துக
திங்கள், 7 மார்ச், 2022
எழுத்தாளர் குரு அரவிந்தன் சிறுகதைகள் ஓர் அலசல்
அறிமுகம்
ஐம்பதாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் தமிழ் இலக்கிய படைப்புலகில் உலகின் பல பாகங்களிலும் புகழ்பெற்று விளங்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்களையும் அவருடைய தமிழ் இலக்கியயப்பணி மேலும் பல்லாண்டுகள் சிறக்க ஆசிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர் குரு அரவிந்தன் பற்றி தெரியாத தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இருக்க முடியாது. அதற்கு காரணம் தனது பல்வேறுவிதமான இலக்கியப் படைப்புக்களால் உலகளவில் பிரபல்யம் அடைந்துள்ளதோடு அங்கீகாரமும் பெற்றவர். இவர் யாழ் காங்கேசன்துறை மாவிட்டபுரம் தந்த இலக்கியச் செம்மல். நடேஸ்வராக் கல்லூரி மற்றும் மகாஜனாக்கல்லூரிகளின்; பழைய மாணவர். ஈழத்து மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பலவற்றில் இவரது படைப்புக்கள் களம்பெற்றுள்ளதோடு பல்வேறு விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளவர். நான் படித்த இவரது சிறுகதைத் தொகுப்புக்களில் சில சிறுகதைகளை தேர்வுசெய்து அவைசார்பான எனது ஆய்வை சமர்ப்பிப்பதில் நானும் சிறிதளவு பெருமைப்பட்டுக்கொள்கிறேன்.
வியாழன், 10 பிப்ரவரி, 2022
எங்கள் தாய் மொழி செம்மொழி வாழியவே
உலக தாய் மொழி தினத்தையொட்டி எழுதப்பட்ட எனது தாய்மொழி பற்றிய கவிதை
எங்கள் தாய் மொழி செம்மொழி வாழியவே
அகரமதில் ஆரம்பம் எங்கள் மொழி
ஆதியில் தோன்றிய மூத்த மொழி
இயல் இசை நாடகம் படைத்த மொழி
ஈசன் திருவாய் மலர்ந்த அமுத மொழி
உலகமெலாம் ஒலிக்கும் உலக மொழி
தற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு
தற்காலத்தில்
நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வு
காலம் காலமாக பல்வேறு வகையான வெளியீடுகள் வெளியீட்டு நிகழ்வுகள் மூலமாக பல்வேறு எழுத்தாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. முழு நீளத் திரைப்படம், குறுந்திரைப்படம், இசைகலந்த பாடல்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் மற்றும் கட்டுரைகள் என்று வெளியீடுகளையும் அவை சார் வெளியீட்டு நிகழ்வுகளையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவற்றுள் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் தவிர்ந்த ஏனைய வெளியீடுகளில் நூல் வெளியீடுகள் முக்கிய இடம்பெறுகின்றன. நூல் வெளியீடுகளில் பல தரப்பினரும் அழைப்பிற்கு அமைவாக கலந்துகொள்வதுண்டு. அந்த வகையில் அண்மையில் எனக்கும் ஒரு கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எனது மனதில் பதிந்த சில விடயங்களை வைத்துக்கொண்டு நூல் வெளியீடுகளின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை புதிய மற்றும் வளர்ந்துவரும் எழுத்தாளர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் பொருட்டு இந்த ஆக்கத்தை படைத்துள்ளேன்.
வியாழன், 13 ஜனவரி, 2022
தைப்பொங்கல் தின வாழ்த்துக்கள்
ஞாயிறு, 2 ஜனவரி, 2022
நமக்கு இன்னும் விடியவில்லை
இனிய நந்தவனம் இதழில் வெளிவந்த எனது கவிதை ஒன்று உங்களுக்காய் இங்கே பதிவிடுகிறேன். நன்றி இனிய நந்தவனம் மாத இதழ்.